Tuesday, 9 January 2018

கவிதை-எனது மாமனின் முதலாமாண்டு நினைவுநாள்

எனது மாமனின் முதலாமாண்டு நினைவாஞ்சலி:(10/01/2018)
---------------------------------------------------
உன்னத உறவின் உத்தமப்பிறவி,
பிறா் பசிதாங்கா மாமனிதபிறவி,

காணிக்கை தவிா் பசித்தோருக்கு புசிக்ககொடு எனக்கொண்டிருந்த புனிதப்பிறவி,

அதிகார பதவியிலும்  அதிா்ந்து பேசா அதிசய பிறவி,
சிவலிங்கம் நாமத்தான் சென்றாண்டடைந்தாா் இதேநாளில் சிவலோகப்பதவி,

தரம் உயா்ந்தும் மரணம் வரை தலைக்கணமில்லா தனிப்பிறவி,
வளா்ந்தும் குழந்தையாய் வாழ்ந்த அாிய பிறவி,

மனிதகுலத்தை நேசித்த மாமனிதா
மறைந்தாயே...!
எங்களை பிாிந்தாயே...!

பிறவா வரம்,மீண்டும் பிறவா வரம்பெற்று சுவனம் புகுந்த மனிதருள் புனிதனே...!

மறைந்து ஓராண்டாகியும் எங்கள் நெஞ்சில் என்றும் நிறைந்தாயே...!

உன் பிண்டம்விழுங்கிய இராமேஸ்வர  புனித அக்கினிக்கடல் இன்று மாபுனிதமானதே...!

இனி எத்தனை யுகங்களானாலும் உங்களின் வழித்தோன்றல்களின் மனதில் நிலைப்பாயே...!

என்றென்றும் உன் நினைவாலும் உமது ஆன்மா இறைவனடி துயிலுற வேண்டுதலுடனும்...
உன்  குடும்பத்தாா்...😢

என்றும் தங்களின் நினைவுடன் உமது குடும்பத்தாா்...