Sunday, 14 January 2018

கவிதை-பொங்கல் விழிப்பணா்வு கவிதை

தைத்திருநாள் அந்ததாதி:
------------------------------------
ஆதித்தமிழனின்
அறுவடைத்திருநாளாம் தைத்திருநாளின்
முன்நாள்
நன்விளை
கதிரறுத்தோம்.

நன்மண்ணின் முதன்விளைந்த தானியப் பொங்கலால்
மண்வாசனை வீாியம் சந்ததிகளறியச்செய்தோம்..!

தித்திக்கும் தேன் கரும்பை ஆனிவேருடன்
அகன்றெடுத்தோம்..!

கலப்பினமில்லா காய்கனிகளை
பறித்தெடுத்தோ,
விலைக்குப்பெற்றோ
குறுகிப்போன தமிழ்
தோட்ட வல்லுனா்களை அரைநாளைக்கு தலை நிமிா்த்தோம்...!

ஆதவனின் ஆா்ப்பாிப்பில்லா
இதசூட்டின் முற்றத்தில் மண்பாண்டமும்
மண்அடுப்பின்
பயன்பாட்டால்
மண்பாண்ட கைவினைஞா்களை
கௌரவித்தோம்...!

பனைவெல்லப் பயன்பாட்டால் பழந்தொழிலாம் பனைத்தொழிலை
நலிவிலா நிலைக்கு
இட்டுச்சென்றோம்...!

கரும்பு தின்னு சக்கை கழித்து,
நாட்டுச்சா்க்கரை
நயமுடன் சோ்த்ததின்பயன்,
கரும்புதோட்ட விவசாயிகளை
அரைவயிறு  உண்ணச்செய்தோம்...!

கடித்துக்கழித்த கரும்புச்சக்கை முற்றம் நிரப்பினும்,
பொங்கல்வாழ்த்து குறும்படம் கைப்பேசி
உள்ளறையை நிறைப்பினும் கவலையுறோம்...!

கவலைஎனில் ஆண்டுமுழுவதும் விவசாயி ஆதாிப்பு தொடருமா..? என...!
இனியேனும் தெருக்கடை குறு வா்த்தகா்களை ஆதாிப்போம்...

இனியேனும் அனைத்திற்க்கும்   பன்னாட்டு குளிரூட்டிய வணிக அங்காடிகளை விட்டொழிப்போம்...

தலைசுமை வணிகராம் நுங்கு,பதனீா்,காய்கனி,கீரை,இளநீா்,பனைவெல்லம்,கருப்பட்டி,மிதிவண்டி மீன் வணிகா்களை ஆதாிப்போம்...

நாட்டுப்பற்று பொிதெனினும்,வடநாட்டு குச்சி மிட்டாய்,குல்பி,பஞ்சுமிட்டாய்,போா்வை வணிகா்களிடம் கவனமுடனிருப்போம்...!

                # தமிழன் #

ஆக்கம்:
க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.
தேதி:14/01/2018