Friday, 26 January 2018

செல்வம் பெருக...


செல்வம் பெருக சில குறிப்புகள்

வீட்டில் ஏற்றும் காமா ட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
வீட்டில் வெள்ளை புறாக் களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்
வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலை பொழுதில் செய்யக் கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது.பணம் ஓடிவிடும்.
பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்யபலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
வெள்ளளிக்கிழமை  சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது  குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.
அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.
யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான்.
பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம்வரும்.
முழு பாசி பருப்பை வெல்லம்கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்துவர பணத்தடைநீங்கும்.
வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேக த்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.
பசும் பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக் கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
பாசி பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறு நாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.
தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை  உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.
தமிழ் மாதத்தில் முதல் திங்கட் கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர்  ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப் பெட்டியில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள்.
மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக் கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பண வரவு நிரந்தரமாகும்.
வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ண மியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
ஐப்பசி மாத வளர் பிறையில் மகா லட்சுமியை  வழிபடசெல்வம் பெருகும்.
தொடர்ந்து  11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்கு சொர்ணா கர்ஷன பைரவருக்கு தாமரை மாலை அணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழி படசொர்ண ஆகர்ஷ ணமாகும்.
மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திட பணம் குவியும்.
ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
வௌளிக் கிழமை  மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.
மகா லட்சுமியை கனக தாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இரு வேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திட செல்வம் சேரும்.
சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
சொர்ணா கர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
பசுவுடன் கூடிய கன்றுக்கு உண வளித்தால் சகல செல்வங்களும் வசமாகும்.
வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட  லஷ்மி அருள் பரிபூர ணமாக கிட்டும்.
மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாப னத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷ ணமாகும்.
தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி  படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
தனாக ர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாக தங்கும்.
சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.
குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
திருமலை வெங்கடா ஜலபதிக்கு  வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.
துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்து வர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம் கிட்டும்.
செவ்வாய் கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர் முருகனை வழிபட்டால் காரியத் தடை நீங்கி வளம் பெருகும்.
ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப் பெட்டியில் வைக்க பணம் சேரும்.
சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.
ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் அணிந்து வர பணம் வரும்.
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க  தனலாபம் கிட்டும்.
ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராய ணத்தை வேதபண்டி தர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம் நிரந்தரமாகும்.
ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
கனக தாரா ஸ்தோத் திரத்தினை கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும்.
வீட்டில் சுமங் கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை  நினைத்து வழிபட, சகல தோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மகாலட்சுமிக்கு  பச்சை பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும்.
கற்பக விநாயகரை 1008 அருகம் புல் கொண்டு மகாசங்கட ஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டி தினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.
செல்வத்திற்கு உரியவள் மகா லட்சுமி வெள்ளிக் கிழமை தினம் வழிபடவும் 24 வெள்ளிக் கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும்.
தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றி கிடைக்கும்.
இந்து ராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும்.
வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணா மூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.
வெள்ளிக் கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன், மகாலஷ்மி இரு வரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
செந்தா மரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும்.
கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ர ஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
அவரவர் குல தெய்வத்தை தினம் அதி காலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.
திருப்பதி வெங்கடா ஜலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும்.
தனதா யட்சணீ பூஜை வில்வ மரத் தடியில் தந்திர சாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில் பணம் கிடைக்கும்.
சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தன வீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளை வழிபட  தங்க நகை கிடைக்கும்.
ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக் கடி பார்க்க பணம் வரும்.
தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
ஒத்தை பனை மர முனீஸ் வரனை ஏரளஞ்சில் தைல தீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
வியாழக் கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும்.
ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இரந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல்வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்ப வருக்கு பணம் திரும்ப கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்ப கொடுக்க இயலும். திரும்பகொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
செல்வம் பெருக மந்திரம் , செல்வம் பெருக வழிபாடு ,  செல்வம் பெருக எளிய வழிகள், செல்வம் பெருக பரிகாரங்கள் வாஸ்து மூலிகைகள்

Tuesday, 23 January 2018

எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்க

எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் முருங்கை....!!

முருங்கை மருத்துவம்  அற்புத வைத்தியம்...முருங்கை கஞ்சி....!!

    இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை கழுவி  எடுத்து ,

மிக்ஸியில்  அரைத்து சாறாக்கி,

அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால்,

அதில் ,
     ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து,

அதில்,
     ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து,

கூடவே ,
    இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து,

சிறிது,
    சுக்கு ,மற்றும்
     ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும்....!!

  அரிசியில் முருங்கை சாறு நன்றாக  ஊறிவிடும்...!!

அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை  காயவைத்து,

சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி,

தினந்தோறும்  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,

கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!

இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!

இந்த  கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!!

L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது.

இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது.

அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ,

    உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும்.

அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது,

L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய,

" disc prolapse " ஆவது ...

இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து
முருங்கைக்கீரைதான் ....!!

அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து

கொண்டுள்ள இந்த
முருங்கைக்கீரைக் கஞ்சியை

   48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!

இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,

உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.

  இடுப்பு வலி, முதுகு வலி குணமாகிவிடும்...!!

சூடான நீா் பருகுவதின் பயன்கள்:

இதை குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியமானது மற்றும் சிலர் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.

ஒரு ஜப்பானிய  மருத்துவர் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
 
1 மைக்கிரேன்
 
2 உயர் இரத்த அழுத்தம்
 
3 குறைந்த இரத்த அழுத்தம்
 
4 மூட்டு வலி
 
5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்
 
6 கால்-கை வலிப்பு
 
7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்
 
8 .இருமல்
 
9 .உடல் அசௌகரியம்
 
10. கொலு வலி
 
11 ஆஸ்துமா
 
12 ஹூப்பிங் இருமல்
 
13 .நரம்புகள் தடுப்பு
 
14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
 நோய்கள்
 
15.வயிற்று பிரச்சினைகள்
 
16 .குறைந்த பசியின்மை
 
17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

சுடு நீர் பயன்படுத்துவது எப்படி?
 
காலையில் எழுந்திருந்து, வயிற்று வயிற்றுக்குள் சுமார் 2 தம்ளர் சூடான நீரில் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.

குறிப்பு:
தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம்.

சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: -

30 நாட்களில் நீரிழிவு நோய்

30 நாட்களில் இரத்த அழுத்தம்

10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

10 நாட்களில் ஏராளமான பசி

10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

✔ மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

30 நாட்களில் இதய நோய்கள்

3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

✔ 4 மாதங்களில் கொழுப்பு

✔ கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில்

4 மாதங்களில் ஆஸ்துமா

குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!
குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

குளிர் நீர் 4 இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்.

இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது. கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீரில் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்

நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும்.

-டாக்டர் டி. மென்சா-அசரே

Saturday, 20 January 2018

ஸ்ரீகணபதி அருள் பெற விரத முறைகள்

கணபதி அருளைப் பெறுவதற்கான விரதங்கள்

1. வைகாசி வளர்பிறை:
முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.

2. செவ்வாய் விரதம்:
ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.

3. சதுர்த்தி விரதம்:
பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.

4. குமாரசஷ்டி விரதம்:
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இழைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.

5. தூர்வா கணபதி விரதம்:
கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.

6. சித்தி விநாயக விரதம்:
புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.

7. தூர்வாஷ்டமி விரதம்:
புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.

8. விநாயக நவராத்திரி:
ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.

9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்:
ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.

10. செவ்வாய் பிள்ளையார் விரதம்:
ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர்.

11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை:
பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.

வளமான வாழ்க்கைக்கு எளிய பாிகாரங்கள்

காஞ்சிமஹா பெரியவா⚘ சொன்ன, வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.

(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ
பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம்
செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை
மூன்றே நாட்களில் உணரலாம்.

(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும்
பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை
வேளையில் பறவைகளுக்கு
இனிப்பு பிஸ்கட்கள் வழங்க
வீண் விரயம் கட்டுப்படும்.

(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம்,
சோர்வு போன்றவை
நாள் முழுதும் இருப்பின்
இரவு படுக்கும் பொழுது
தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து
கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.
அதை குடிக்க கூடாது.

(4) காரணமில்லாத பய உணர்வு
இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ்
ஸ்டீல் வளையம் ஒன்று
மாட்டி வர பய உணர்ச்சிகள்
குறையும்.

(5) தற்கொலை எண்ணங்கள்
மேலும் வாழ பிடிக்காதது
போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி
கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற
ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி
அணிய வேண்டியதில்லை.

(6) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது
கூடவே சிறிது காகித பூ
எடுத்து செல்ல விபத்துக்கள்
ஏற்படாது.

(7) காலை எழுந்ததும் தங்க
நாணயம் அல்லது
தங்கங்கள் நிறைந்த
படம், ரூபாய் நோட்டுகள்
நிறைந்த படம் ஒன்று
பார்த்து வர செல்வ வளம்
பெருகும்.

(8) இடது கை கீழே
இருக்கும் படி படுத்துறங்க
ஆயுள் விருத்தியாகும்.

(9)வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.

(10) காரணமில்லாமல் இரவில்
குழந்தைகள் தூங்காமல்
அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை
வைக்க, குழந்தை நன்றாக
தூங்கும்.

(11)சமையலறையும், படுக்கையரையும் அருகருகே
இருக்கும் படி அமைத்து
கொண்டால் தம்பதியர்
ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.

(12) துர் சக்திகள் நம்மை
அண்டாதிருக்க வீட்டு
வாசலில் மருதாணி
கொத்தை தொங்க விட
வேண்டும்.

வாழ்வோம் வளமுடன் நலமுடன்.