Thursday, 22 June 2017

திரு.அருள்குமாா் பதிவு...

நெஞ்சினித்த நண்பரே - வாழ்க்கையின்
பாகமாய் சேர்ந்துவிட்ட அன்பரே
நட்பெனும் ஊரிலே நட்டுவைத்த பூவரே ,
புன்னகை செய்து பூமிதனில் வாழ்கவே இனிமையும் புதுமையும் வரமாகட்டும் எண்ணியது போல் யாவும் ஜெயமாகட்டும் !!!

--------------------------------------------------------------------
விடியலை நோக்கி செவிலியம்
*********************************

எத்தனை எத்தனை வாதங்கள் - பிரதிவாதங்கள் What's app பரிமாற்றங்கள் எண்ணிலடங்கா. 

அவரவர் தத்தம் அணி சார்ந்து, தனிநபர் நட்பு, நம்பிக்கை அடிப்படையில் தேர்தல் திருவிழாவில் சுற்றி வந்தனர். 

தேர்தல் திருவிழா முடிந்து விட்டது . வழக்கம்போல் இயல்பு நிலைக்கு - இது தான் எங்கள் செவிலியம் என கூடு விட்டு பறந்தவையெல்லாம் ஓர் கூட்டுக்குள் திரும்பியது , இதுவே எங்கள் செவிலியம்.

இவ்வளவு பரபரப்பு, எதிர்பார்ப்பு ஓர் சமூகத்திற்கு ஏன்?

சமூகத்தின் வளர்ச்சிக்கு கிடைத்த ஓர் வாய்க்காலை சரிவர உபயோகபடுத்தி தங்களை வழிநடத்தும் தலைமையை ஏற்படுத்தவே இத்தனை எதிர்பார்ப்பு.

எதிர்பார்ப்பு மாற்றத்தை அளிக்குமா ? அல்லது ஏமாற்றத்தை அளிக்குமா ?
என்பது செயல்பாடுகளை முன்னெடுக்கும் போதே  தெரியவரும். 

ஓரளவிற்காகவது ஏதாவது சமுதாய வளர்ச்சிக்கு  செய்யமாட்டார்களா என்பதே பெரும்பாலரின் எதிர்பார்ப்பு. 

எதிர்நோக்கியுள்ள சவால்கள் நிறைய உள்ளது.  ஒரே பதிவில் அனைத்தையும் குறிப்பிடலாகது. ஒவ்வொன்றாக.

சங்கத்தின்
*************
கட்டமைப்பை முதலில்
************************
வலுப்படுத்துவது.
*******************

* முதலில் மொத்தம் எத்தனை மருத்துவமனையில் கிளை சங்கம் உள்ளது. 

* இரண்டாண்டுகள் உறுப்பினர் சந்தா இதுவரை வசூல் செய்யபடவில்லை.
எனவே அனைவரிடத்திலும் உறுப்பினர் சந்தாவை வசூல் செய்ய வேண்டும்.

* புதியதாக உறுப்பினர் படிவம் தயாரித்து உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

* சங்க அடையாள அட்டை அனைத்து செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும்.

* அனைத்து செவிலியர்களும் தாமாக முன்வந்து இது நம் சங்கம் என்ற உணர்வுடன் - உறுப்பினராக இணைத்து கொள்ள வேண்டும். அது அவரவர் கடமையும் கூட.

* உறுப்பினர் விபரங்களை - பணிபுரியும் மருத்துவமனை விபரங்களை அனைவரும் அறியும் பொருட்டு தமிழ்நாடு அரசு செவிலிய சங்கம் என்ற இணையத்தள முகவரியை  ஏற்படுத்தி - உறுப்பினர் விபரங்களை மருத்துவமனை வாரியாக பதிவு செய்திடல் வேண்டும்.

* 10000 × 200 = 20 லட்சம், முறையே இரண்டாண்டுகளுக்கு 40 லட்சம் வருகின்றது.

* மேற்கண்ட தொகையில் கிளைச்சங்கத்திற்கு 50 % போக மீதம் 20 லட்ச ரூபாய் மாநில சங்க நிர்வாகத்தின் கீழ் வரும்.இத்தொகையை வைத்து அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

* சங்கத்தின் வங்கி கணக்கை இதுவரை செயலாளர், ஒரு பொருளாளர் என இருவர் மட்டுமே கையாண்டு வந்தனர். இனி செயலாளர் மற்றும் இரண்டு பொருளாளர் என மூவர் இயக்க உள்ளனர். இது வெளிப்படை தன்மையை அதிகரிக்க உதவுக்கூடும்.

* சங்க நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு பயணகட்டனம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகை எவ்வளவு என்பதனை தற்போதைய செலவினங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்து அதனை பொதுக்குழு தீர்மானத்தில் கொண்டு வரவேண்டும்.

* சங்கத்தின் தனிநிலை விதிகள் (Bye-laws) -  மாநில தலைவர்,  செயலாளர் கையொப்பமிட்ட நகல்களை அனைத்து கிளை சங்கத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

* வரவு - செலவினங்களை வெளிப்படை தன்மையோடு அனைத்து மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

செய்வீர்களா நீங்கள்? 
செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் .

சங்க உணர்வாளனில் ஒருவன்
சேலம் V.அருள்குமார்