அன்பிற்கினிய குடும்பம்...
---------------------------------------------
அன்பிற்கினிய குடும்பமிதோ...
அன்பினால் இனிக்கும் குடும்பமிதோ...!
அன்பென்ற வாா்த்தையே இவா்களின் அன்பில் இனிக்குதோ...!
அன்பென்ற வாா்த்தையே அன்பிரவல் பெற்று இங்கே கடன்பட்டதோ...!
அன்பெனும் பதமே தனிமையடையும் நிலை இவா்கள் அன்பிலாவிட்டால்...!
அண்டம் தோன்றியதும் வாா்த்தைதோன்றியதே ஒப்பிலா இவ்வன்பைப்பாா்த்தோ...!
வள்ளுவனின் அன்பு வாிகள் உயிா்பெற்றதிங்கே...!
பிரபஞ்சத்தில்
பிரதிபலனிலா அன்பை வழங்கும்
குடும்பம் இதுவடா...!
ஒப்பிலா இவ்வன்பை ஒப்பற்ற நிலையில் எங்களால்
இக்குடும்பத்துக்கு தரமுடியுமா என்ற கேள்விக்குறிகளே..!
எந்த ஜென்ம புண்ணியமென நினைவுக்கெட்டல...!
அன்பின்அளவு எவ்வளவென என் அறிவுகெட்டல...!
இக்குடும்ப உறவு அத்தனைக்கும் ஒத்த ஜீனடா...!
அது அன்பெனும் பதத்தில் உதித்த மொத்த ஜீனடா...!
இவண்:
#அன்பற்றவனின் அடக்கமுடியா வாிகள்#