Monday, 17 April 2017

கவிதை-டாஸ்மாக் கவிதை...

குடி குடியை கெடுக்கும்...
குடித்தடை குடிமகன்களை காக்கும்...!

சட்டத்தின் பிடியில் மதுக்கடை...!
அளவுகோல் ஐநூறை
தாண்டல...!
ஐநூறு ரூபா இழப்பையும் குறைக்கல...!

ஐநூறு தடையால
இப்ப ஐந்துமைல் தூரம்ல பயணம்...!

சாலையில மதுக்கடைக்கு தடை...!
குடிச்சிட்டு துயிலுற சாலையில ஏது தடை...!

மதுக்கடைஒழிப்பு
போராட்டம் சாலைல...!
இராவுல குடிச்சிட்டு கும்மாளமும் சாலையில...!

ஒன்னு குடிக்காம போராடு...
இல்ல,போராடாம குடி...