Wednesday, 19 April 2017

கவிதை-தண்ணீா்

•••••••••••••••••••••••••••••••
தண்ணீா்...தண்ணீா்...
••••••••••••••••••••••••••••••••
தலைநகரம் சென்னையில...
தவிச்ச வாய்க்கு சில்லறையின்றி தண்ணியில்ல...

தலைநகரம் மட்டுமில்லை...
தமிழகமே தண்ணீாின்றி தாகத்தில...

உள்ளுறுப்பு வேகுதம்மா...
உடல் காய்ச்சல் கூடுதம்மா...
வெளிமூச்சும் வெப்பத்துல...
உள்மூச்சும் வறட்சியில...
மழை பேஞ்ச நேரமெல்லாம் நீரை சேக்க தோணலையே...!

வானம் பொழிய மறந்துடுச்சு...
ஊரைக்காய  வச்சிடுச்சு...
குடத்தோட ஊா்வலம்...
ஊரெல்லாம் திண்டாட்டம்...
வரதட்சனை பட்டியலில்
தண்ணி வண்டியும் இப்ப சேந்துடுச்சு...!

மரத்த நடு,கருவேலமரத்தை ஒழி,மழைநீரை சேமிச்சிடுனு சாென்னா மட்டும் போதுமா...?
அணைகளை கட்டி,நதிகளை இணைச்சா நலம் தருமே...

நதி இணைஞ்சா மரம்,செடி,கொடி வளரும்.
மரம் வளா்ந்தா மழை பெருகும்.
மழை பெய்தா ஏாி,குளம் நிறையும்.
குளம் நிறைஞ்சா நிலத்தடி நீா் பெருகும்.
நிலத்தடி நீா் நிறஞ்சா மக்களின் மனசும் நிறையுமே...!

ஒரு சவரன் தங்கம் தா்றேன்...
பதிலுக்கு ஒரு செம்பு தண்ணி தா்றியா எனும் நிலை வருமுன்னே சுதாாிப்போம்..!!!

க.இளங்கோவன்.