Monday, 10 April 2017

கவிதை-எனது சமூக கவிதை...

"எங்கே போகுது என் தேசம்?"
------------------------------------------------
எங்கே போகுது என் தேசம்...?
எங்கே போனது என் நேசம்...?
வலைல சிக்குச்சா? வலைதளத்துல சிக்குச்சா...?

தலைகுனிந்த பொண்ணு வேணும்னாங்க...!
தலைநிமிா்ந்த மணப்பையன் வேணும்னாங்க...!

அப்ப கிடைச்சதோ இல்லையோ...!
இப்ப கிடைக்கும் தாராளமா...!

முகநூலில் முகம்பதிச்சு
முகம் பாா்க்க நேரமில்லை...!
கைபேசியில முகம் பதித்து ஏறிட்டு பாா்க்க நேரமேது...?

கழுத்துல வலி வந்தாலும்,வாழ்க்கைவலி குறைஞ்சிருக்காம்...!

பக்கத்துல உறவை மறந்து,
எட்டத்து நட்பு பிடிச்சிருக்காம்...!

பேசத்தொிந்த சமூக விலங்கு
மனுசன்தான் என்றாங்க...!
பேச நல்லா தொிந்திருந்தும் இப்ப பேசா விலங்கானோம்...!

அஞ்சு வயசு வரை பேசலைனா ஆட்டிசம்னு ஆஸ்பத்திாியில சோ்த்தாங்க...!

இப்ப  பேசத்தொிந்தும் பேசலைனா, எங்க போயி சோ்க்கிறதுங்க...?

மனசு விட்டு பேசுனா
மனவியாதி வராதுனாங்க...!
இப்ப கைபேசி அடிமையாகி, மனநோயாளி ஆனோம்ங்க...!

எங்கே போகுது என் தேசம்...?
எங்கே போனது என் நேசம்...?

இவண்:
K.இளங்கோவன்,
செவிலியா்,
முதுகுளத்தூா்