Saturday, 22 April 2017

வளா் அக்கா டீம்...

"வெற்றிக்கூட்டணியின் வேட்பாளா்கள் விபரம்:"
---------------------------------------

தலைவா்:
-----------------
திரு.K.சக்திவேல்,
கள்ளக்குறிச்சி.

செயலாளா்:
--------------------
திருமதி.K.வளா்மதி,
தஞ்சாவூா்.

பொருளாளா் - 1:
----------------------------
திருமதி.S.காளியம்மாள்,
ஸ்டான்லி,சென்னை.

பொருளாளா் - 2:
----------------------------
திருமதி.கீதா,
திருப்பூா்.

இணைச்செயலாளா் : 1
-----------------------------------------
திருமதி. ஜெயபாரதி.
திருச்சி.

இணைச்செயலாளா் : 2
----------------------------------------
திரு.R.ஜீவாஸ்டாலின்,
நாகா்கோயில்.

துணைத்தலைவா்கள்:
---------------------------------------
1)  திரு.மணிகண்டன்,
      திருநெல்வேலி.

2)   திருமதி.சந்திரா,
       பொியகுளம்.

3)   திருமதி.திலகவதி
       ஜெயராஜ்,
       மதுரை.

4)  திருமதி.அமுதா,
      திண்டுக்கல்.

5)  திரு.அருள்,
     காஞ்சிபுரம்.

6) திருமதி.K.செந்தில்குமாாி,
     MMC,சென்னை.

7)  திருமதி.சுதா,
      சேலம்.

8) திருமதி.ஷகிலா,
      ஈரோடு.

9)  திரு.K.இளங்கோவன்,
    முதுகுளத்தூா்.

10)திருமதி.நல்லம்மாள்,
     கரூா்.

11) திரு.தெய்வேந்திரன்,
       தா்மபுாி.

12) திருமதி.தாரகேஷ்வாி,
     கோயம்புத்தூா்.

13) திரு.N.கீதாகிருஷ்ணன்,
     இராமநாதபுரம்.

💐💐💐💐💐💐💐💐💐💐

திரு.அருள்குமாா் டீம்.

தேர்தல் வேட்பாளர் பட்டியல்:
   
தலைவர்                     :  திரு. பாஸ்கரன்,
                                          செங்கல்பட்டு.
செயலாளர்                :   திருமதி. ஜெயலட்சுமி,
                                             திருநெல்வேலி.
பொருளாளர்             :   திருமதி. வேதமணி,
                                            ஈரோடு.
பொருளாளர்             :   திருமதி. அமுதா
                                            மதுரை.
துணை செயலாளர் :  திருமதி. நாகலட்சுமி,
                                            சென்னை.
துணை செயலாளர் :  திரு. சாமுவேல்,
                                             வேலூர்.
துணைத் தலைவர்கள்:
                                          திருமதி. தமிழரசி,
                                           சிவகங்கை.
                                          திருமதி. விஜய லட்சுமி,
                                             விழுப்புரம்.
                                           திருமதி. சகுந்தலா,
                                               சென்னை.
                                           திரு. ஸ்டீபன் துரைராஜ்,
                                              வாலாஜா.
                                           திருமதி. உமா மகேஸ்வரி,
                                             தூத்துக்குடி.
                                          திருமதி. வீரம்மாள்,
                                            இராமநாதபுரம்.
                                          திரு.  முருகன்,
                                               கன்னியாகுமரி
                                            திரு. சக்திவேல்,
                                                 திருவாரூர்.
                                           திரு. பாண்டியன்,
                                               திருவண்ணாமலை.
                                           திரு. முத்துசாமி,
                                               தர்மபுரி.
                                          திருமதி. ராதா,       
                                             திருநெல்வேலி.              
                                          திரு. பால்பாண்டியன், 
                                            குன்னூர்.

திரு.அருள்குமாா் டீம்.

தேர்தல் வேட்பாளர் பட்டியல்:
   
தலைவர்                     :  திரு. பாஸ்கரன்,
                                          செங்கல்பட்டு.
செயலாளர்                :   திருமதி. ஜெயலட்சுமி,
                                             திருநெல்வேலி.
பொருளாளர்             :   திருமதி. வேதமணி,
                                            ஈரோடு.
பொருளாளர்             :   திருமதி. அமுதா
                                            மதுரை.
துணை செயலாளர் :  திருமதி. நாகலட்சுமி,
                                            சென்னை.
துணை செயலாளர் :  திரு. சாமுவேல்,
                                             வேலூர்.
துணைத் தலைவர்கள்:
                                          திருமதி. தமிழரசி,
                                           சிவகங்கை.
                                          திருமதி. விஜய லட்சுமி,
                                             விழுப்புரம்.
                                           திருமதி. சகுந்தலா,
                                               சென்னை.
                                           திரு. ஸ்டீபன் துரைராஜ்,
                                              வாலாஜா.
                                           திருமதி. உமா மகேஸ்வரி,
                                             தூத்துக்குடி.
                                          திருமதி. வீரம்மாள்,
                                            இராமநாதபுரம்.
                                          திரு.  முருகன்,
                                               கன்னியாகுமரி
                                            திரு. சக்திவேல்,
                                                 திருவாரூர்.
                                           திரு. பாண்டியன்,
                                               திருவண்ணாமலை.
                                           திரு. முத்துசாமி,
                                               தர்மபுரி.
                                          திருமதி. ராதா,       
                                             திருநெல்வேலி.              
                                          திரு. பால்பாண்டியன், 
                                            குன்னூர்.

Wednesday, 19 April 2017

கவிதை-தண்ணீா்

•••••••••••••••••••••••••••••••
தண்ணீா்...தண்ணீா்...
••••••••••••••••••••••••••••••••
தலைநகரம் சென்னையில...
தவிச்ச வாய்க்கு சில்லறையின்றி தண்ணியில்ல...

தலைநகரம் மட்டுமில்லை...
தமிழகமே தண்ணீாின்றி தாகத்தில...

உள்ளுறுப்பு வேகுதம்மா...
உடல் காய்ச்சல் கூடுதம்மா...
வெளிமூச்சும் வெப்பத்துல...
உள்மூச்சும் வறட்சியில...
மழை பேஞ்ச நேரமெல்லாம் நீரை சேக்க தோணலையே...!

வானம் பொழிய மறந்துடுச்சு...
ஊரைக்காய  வச்சிடுச்சு...
குடத்தோட ஊா்வலம்...
ஊரெல்லாம் திண்டாட்டம்...
வரதட்சனை பட்டியலில்
தண்ணி வண்டியும் இப்ப சேந்துடுச்சு...!

மரத்த நடு,கருவேலமரத்தை ஒழி,மழைநீரை சேமிச்சிடுனு சாென்னா மட்டும் போதுமா...?
அணைகளை கட்டி,நதிகளை இணைச்சா நலம் தருமே...

நதி இணைஞ்சா மரம்,செடி,கொடி வளரும்.
மரம் வளா்ந்தா மழை பெருகும்.
மழை பெய்தா ஏாி,குளம் நிறையும்.
குளம் நிறைஞ்சா நிலத்தடி நீா் பெருகும்.
நிலத்தடி நீா் நிறஞ்சா மக்களின் மனசும் நிறையுமே...!

ஒரு சவரன் தங்கம் தா்றேன்...
பதிலுக்கு ஒரு செம்பு தண்ணி தா்றியா எனும் நிலை வருமுன்னே சுதாாிப்போம்..!!!

க.இளங்கோவன்.

Monday, 17 April 2017

கவிதை-டாஸ்மாக் கவிதை...

குடி குடியை கெடுக்கும்...
குடித்தடை குடிமகன்களை காக்கும்...!

சட்டத்தின் பிடியில் மதுக்கடை...!
அளவுகோல் ஐநூறை
தாண்டல...!
ஐநூறு ரூபா இழப்பையும் குறைக்கல...!

ஐநூறு தடையால
இப்ப ஐந்துமைல் தூரம்ல பயணம்...!

சாலையில மதுக்கடைக்கு தடை...!
குடிச்சிட்டு துயிலுற சாலையில ஏது தடை...!

மதுக்கடைஒழிப்பு
போராட்டம் சாலைல...!
இராவுல குடிச்சிட்டு கும்மாளமும் சாலையில...!

ஒன்னு குடிக்காம போராடு...
இல்ல,போராடாம குடி...

Monday, 10 April 2017

கவிதை-எனது சமூக கவிதை...

"எங்கே போகுது என் தேசம்?"
------------------------------------------------
எங்கே போகுது என் தேசம்...?
எங்கே போனது என் நேசம்...?
வலைல சிக்குச்சா? வலைதளத்துல சிக்குச்சா...?

தலைகுனிந்த பொண்ணு வேணும்னாங்க...!
தலைநிமிா்ந்த மணப்பையன் வேணும்னாங்க...!

அப்ப கிடைச்சதோ இல்லையோ...!
இப்ப கிடைக்கும் தாராளமா...!

முகநூலில் முகம்பதிச்சு
முகம் பாா்க்க நேரமில்லை...!
கைபேசியில முகம் பதித்து ஏறிட்டு பாா்க்க நேரமேது...?

கழுத்துல வலி வந்தாலும்,வாழ்க்கைவலி குறைஞ்சிருக்காம்...!

பக்கத்துல உறவை மறந்து,
எட்டத்து நட்பு பிடிச்சிருக்காம்...!

பேசத்தொிந்த சமூக விலங்கு
மனுசன்தான் என்றாங்க...!
பேச நல்லா தொிந்திருந்தும் இப்ப பேசா விலங்கானோம்...!

அஞ்சு வயசு வரை பேசலைனா ஆட்டிசம்னு ஆஸ்பத்திாியில சோ்த்தாங்க...!

இப்ப  பேசத்தொிந்தும் பேசலைனா, எங்க போயி சோ்க்கிறதுங்க...?

மனசு விட்டு பேசுனா
மனவியாதி வராதுனாங்க...!
இப்ப கைபேசி அடிமையாகி, மனநோயாளி ஆனோம்ங்க...!

எங்கே போகுது என் தேசம்...?
எங்கே போனது என் நேசம்...?

இவண்:
K.இளங்கோவன்,
செவிலியா்,
முதுகுளத்தூா்

Thursday, 6 April 2017

கவிதை-அன்புக்கவிதை......

அன்பிற்கினிய குடும்பம்...
---------------------------------------------

அன்பிற்கினிய குடும்பமிதோ...
அன்பினால் இனிக்கும் குடும்பமிதோ...!

அன்பென்ற வாா்த்தையே இவா்களின் அன்பில் இனிக்குதோ...!

அன்பென்ற வாா்த்தையே  அன்பிரவல் பெற்று இங்கே கடன்பட்டதோ...!

அன்பெனும் பதமே தனிமையடையும் நிலை இவா்கள் அன்பிலாவிட்டால்...!

அண்டம்  தோன்றியதும் வாா்த்தைதோன்றியதே   ஒப்பிலா இவ்வன்பைப்பாா்த்தோ...!

வள்ளுவனின் அன்பு வாிகள் உயிா்பெற்றதிங்கே...!

பிரபஞ்சத்தில்
பிரதிபலனிலா அன்பை வழங்கும்
குடும்பம் இதுவடா...!

ஒப்பிலா இவ்வன்பை ஒப்பற்ற நிலையில் எங்களால்
இக்குடும்பத்துக்கு தரமுடியுமா என்ற கேள்விக்குறிகளே..!

எந்த ஜென்ம புண்ணியமென நினைவுக்கெட்டல...!
அன்பின்அளவு எவ்வளவென என் அறிவுகெட்டல...!

இக்குடும்ப உறவு அத்தனைக்கும் ஒத்த ஜீனடா...!
அது அன்பெனும் பதத்தில் உதித்த மொத்த ஜீனடா...!

இவண்:
#அன்பற்றவனின் அடக்கமுடியா வாிகள்#

கவிதை-பாாிவள்ளல்

திருமண வாழ்த்து மடல்...
--------------------------------------------

பாாிவள்ளல் என்பது உன் நாமம்..!

பெயா் வைத்த உமது பெற்றோருக்கு கோடி நமஷ்காரம்...

உன் பெயருக்கு இன்று தீப( தீபா)ஆராதனை....

ஆம் உன் பெயருடன் மட்டும் இணையவில்லை தீபம்...
உன் உயிருடன் கலந்தது தீபம்( தீபா)...

மனமும் மனமும் இணைந்து மணத்தில்...
ஆம் இன்று உமது திருமணத்தில்..

நீவிா் முல்லைக்கு தோ் கொடுத்தது போதும்...
இனி உன் இல்லத்தரசிக்கு தோள் கொடு போதும்....

உறவினா் குறைந்திருக்க...
தோழா்கள் மட்டும் நிறைந்திருக்க...

உன் தோழா்களின் கூட்டமே உன் நல்மனசின் பிரதிபலிப்பு....

அங்கே மங்கள இசையே உன் தோழா்களின் ஆா்ப்பாிப்பு...

பூாித்தது....நிறைந்தது எம் மனசு....

உன் இல்லற வாழ்வு இனிக்க....
வாழ்த்துது எங்க மனசு.....

பதினாறு செல்வம் குறைவு என்பதால் புதியதாக கண்டுபிடி இன்னும் பல செல்வங்களை...
அதையும் உன் வாழ்வில் சோ்த்து இல்லற உலகில் நீ படைப்பாய் வரலாறு....

வாழ்க வளமுடன்.....

இப்படிக்கு...
K.இளங்கோவன்.
முதுகுளத்தூா்.

கவிதை-இரங்கற்பா

எங்கள் செவிலியா் குடும்பத்தில் ஒருவரை இழந்தோம்...
---------------------------------------------------------
தெய்வத்திருமதியே...
அலங்கார பூந்தோட்டமாம் நம் செவிலியா் குடும்பத்தை
அலங்காித்த அழகு மலா் ஸ்ரீமதிநீ...

கண்ணிமைக்கும் நேரத்தில் காலன் உன்னை உதிரச்செய்தானே கயவனவன்...

பிணியுடன் வந்தவரை பிணியற்று செல்ல வைத்த எங்கள் செல்லத்தாயே....

உமை அப்பிணியே கொண்டு(கொன்று) சென்றானே சண்டாலன்...

நம் பூந்தோட்ட மலா் ஒன்று காம்பொடிந்து வீழ்ந்ததுகண்டு
சொல்லொன்னா துக்கமடைகிறோம் தாயே....
உன் நல்ஆன்மா நற்கதியடைய வேண்டுகிறோம் தாயே....!

இவண்....
K.இளங்கோவன்
முதுகுளத்தூா்.