Monday, 24 January 2022

ஸ்ரீ கருட பகவான் மந்திரம் :

ஸ்ரீ கருட பகவான் மந்திரம் :ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்...
சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க
    ஸ்ரீ கருட காயத்ரி
      ஓம் தத்புருஷாய வித்மஹே|
      ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
      தன்னோ கருட ப்ரசோதயாத் ||                                         
ஸ்ரீ கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.

அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால் வணங்கப்படுபவரே, இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர்.
இவரின் இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுநடுங்கச் செய்யும். இவரை வணங்கினால் பாம்பு விஷம் நீங்கும். சக விஷத்தால் ஏற்பட்ட வியாதிகளும் நீங்கும்.
பட்சிராஜனான கருட பகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.

யார், எப்போது துதிக்க வேண்டும் ?

இந்த கருட துதியை நோயுற்றவர்கள் அல்லது அவர்களது சார்பாக யாரேனும் ஒருவர் 1008 முறை விபூதியில் ஜபம் செய்து தரிசனம் செய்தால், விஷத்தால் ஏற்பட்ட பாதிப்பும், நோய்கள் விலகும் என்பது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை.
காக்கும் கடவுளான திருமால் கருடனை வாகனமாக ஏற்றார். திருமால் கருடனை வாகனமாக கொண்டுள்ளதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

கருடனை செல்வத்தின் சின்னமாக கருதுகின்றனர். அது கூர்மையான பார்வை கொண்டது. எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கீழே உலவும் மற்ற வஸ்துக்கள் அதன் பார்வைக்குத் தெரியும். தொலைநோக்குப் பார்வை கொண்டது அது. காக்கும் கடவுளான திருமால் அதை வாகனமாக ஏற்றார்.

மனிதன் தன் வாழ்வை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களை வைத்திருக்க வேண்டும். ஒரு ஆற்றுக்குக் குளிக்கச் சென்றால் அதனுள் கழிவுகளைப் போட்டு நிரப்பக்கூடாது. எதிர்காலத்தில் தனது சந்ததியும் அதே ஆற்றைப் பயன்படுத்த வேண்டுமே என்ற உணர்வு வர வேண்டும். இவ்வாறு தொலைநோக்கின்றி இஷ்டத்திற்கு நடந்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரும். காக்கும் கடவுள் நம்மை கைவிட்டு விடுவார்.

இயற்கை நம்மைத் தண்டித்து விடும். இதை உணர்த்தும் வகையிலேயே கூரிய பார்வையுடைய கருடனை வாகனமாகக் கொண்டுள்ளார் திருமால். மேலும் கருடன் பார்வைபட்டால் உடலிலுள்ள விஷக்கிருமிகள் அழிந்து விடும். நோயற்ற வாழ்வு கிட்டும். நோயில்லாதவர் உலகின் பெரிய பணக்காரர் ஆகிறார். எனவே   கருடனை செல்வத்தின் சின்னமாக கருதுகின்றனர்.
 

நோய் வாய்பட்டவர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் இந்த ஸ்லோகத்தை தியானித்து வந்தால் மரண பயம் நீங்கி, நோய் நீங்கி நன்மை கிடைக்கும்.