Monday, 24 January 2022

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது !!!

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது !!!

கி.பி.2017 முதல் கி.பி.2037க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப்போகிறார்கள்

.பழனி மலையில் இருக்கும் நவபாஷாணமுருகன் சிலை சிதைந்துவிட்டது நம் அனைவருக்கும் தெரியும்.இந்த சிலையை போகர் நிறுவினார்.

அவர் இதே போல் ஒன்பது நவபாஷாணசிலைகளை உருவாக்கி பழனிமலையிலும்,அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார்.

அதில் ஒன்று பழனி மலையிலிருந்து சபரி மலைக்குச் செல்லும் ஒரு இடத்தில் இருக்கிறது.அதை ஒரு நாகம் காவல் காக்கிறது.

கிபி 2017 முதல் கிபி 2037 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறொரு சித்தரால் பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவிவிடுவார்.அவ்வாறு நிறுவப்பட்டதும்,பாரதம் உலக வல்லரசு நாடாக மாறிவிடும்.

நமது பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்கும் முன்பு,சித்தர்கள் ஒவ்வொருவராக நீண்ட கால தவத்திலிருந்து எழுந்து வரத்துவங்கியுள்ளனர்.

2004 ஆம் ஆண்டில் உண்டான மாபெரும் ஆழிப்பேரலை(சுனாமி) காகபுஜண்டர் சித்தரின் தவம் கலைந்து எழுந்ததற்கான ஆதாரமாக தினத்தந்தியில் ஒருவர் முழுப்பக்க கட்டுரையே எழுதினார்.

அது உண்மைதான்.இந்தியா,மலேஷியா,சிங்கப்பூர்,இந்தோனோஷியா முதலான நாடுகளில் கடலோரங்களில் மனிதத் தன்மையற்ற குலைநடுங்கச் செய்யும் பல குற்றங்களின் விளைவாக கடலுக்குள் பல்லாயிரமாண்டுகளாக தவத்தில் ஈடுபட்டிருந்த காகபுஜண்டர் தவம் கலைந்து சீற்றத்துடன் எழுந்தார்.

இதே போல்,போகர் தவம் கலைந்து எழும்போது,சென்னை மாநகரம் கடல் அலைகளில் கடுமையாகப் பாதிக்கப்படும்.தென்னிந்தியா இரண்டு தீவுகளாக மாறும்.

கடற்கரையிலிருந்து 5 கி.மீ.தூரம் 3 கி.மீ.உயரே எழும்பி நகரங்களை நாற்றக்கோலமாக்கிவிடும்.700 கி.மீ.தூரத்திற்கு புயல் வீசும்.

புயல் என்பது பூமிக்குள் தவம் செய்யும் சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் மேலே வரும்போது பூமிப்பிரளயம்,அவர்களின் சக்தியின் வேகங்களைக் கொண்டுவரும்.

யானையின் தும்பிக்கை போல் மழை பெய்யும்.புதுப்புது வியாதிகள் மனிதனைத் தாக்கும்.
கங்கையும் காவிரியும் இணைந்து பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஓடும்

.பல கிராமங்கள்,நகரங்கள் அழியும்;விஞ்ஞானம் தலைகீழாக மாறும்.இந்த மாற்றங்கள் 2017 லிருந்து 2037க்குள் நடந்துவிடும்.

அணைக்கட்டுக்கள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது;இயற்கையின் சீற்றத்தால் மக்கள்தொகை குறைந்துவிடும்.

நெருப்பில் அழிவு ஏற்படும்போது கொங்கணவர் தோன்றுவார்!120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.நேர்மையும் சத்தியமும் பெருகும்.தெய்வீகம் பெருகும்

.காகித நோட்டுக்கள் இருக்காது.தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துவிடும்.பக்கம் 92
பல மேலைநாடுகள் அனைத்தும் பொசுங்கிப்போய்விடும்.

அசுர சக்திகளை கல்கத்தா காளி அப்படியே அடக்கி மாய்த்து தின்றுவிடுவாள்.

பிறகு இந்த பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய பிரத்திங்கரா தேவியினுடைய சக்தியானது ஞானசித்தருடைய ஆத்ம சக்தியின் ஒளிப்பிழம்பாகத் தெரியும்.

இதனை கமலமுனி நாடி சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது.ஏனென்றால்,வெளியுலகுக்கு இப்போது காட்டக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இனி வரக்கூடிய காலமானது பிரம்மாவிடமிருந்து ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆஞ்சநேயர்தான் இப்போதைய பிரம்மா.

ஆஞ்சநேயருடைய செயலை பூவாக எடுத்துக்கொள்கிறார் இறைவன்.ஆஞ்சநேயர் மேலே இருக்கிறார்.

அவருடைய சூட்சும சக்தியோ ஞான சித்தரின் சரீரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதையாராலும் உணர முடியாது.

2037 இல்தான் ஞான சித்தரை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும்.
தமிழ்நாடுதான் உலகத்திற்கே வல்லரசு ஆகப்போகிறது.உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது.

இதனை ஞானத்தினால் மட்டுமே உணர முடியும்.விஞ்ஞானத்தினால் ஒருபோதும் உணர முடியாது.

ஆனால்,உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா தனது பாதத்தால் மிதித்துக் கொண்டு ஆட்சிபுரியப் போகிறது.

2017 லிருந்து உலகமே இந்தியாவிற்கு அடிமையாகப் போகிறது.இதனை எல்லோரும் உணரப்போகிறார்கள்.

ஏனெனில் மேலைநாட்டில் எல்லாம் பணவெறி பிடித்தும்,அகந்தையினாலும் மதம் என்ற கர்வத்தினாலும் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.இவை அனைத்திற்கும் சவாலாக இந்தியா சிலிர்த்தெழப்போகிறது என விவேகானந்தர் அன்றே சொல்லிவிட்டார்.

உலகிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு ஜோதி சென்னையிலிருந்துதான் புறப்படப்போகிறது என்றும் தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டார்.

ஆம்,சென்னையிலிருந்து அந்த ஞான சித்தர் உலகிற்கு வழிகாட்டப்போகிறார்.படிப்படியாக கடல் அலைகள் மோதப்போகின்றன.

பல மேலைநாடுகள் காணாமல் போகப்போகின்றன.இதுதான் உண்மை.18 சித்தர்களும் பிறந்துள்ளனர்.அவர்கள் அனைவரும் இந்த ஞான சித்தரிடம் வந்து பேசுவார்கள்.

உலகத்திலுள்ள அத்தனை சக்திகளும் 2017க்குப் பிறகு அந்த சித்தரிடம் ஆவாஹனம் ஆகிவிடும்.உலகம் இதை எதிர்காலத்தில் உணரப்போக றது.

வரக்கூடிய காலகட்டங்கள்,வரக்கூடிய தத்துவங்களில் எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன்.

2037க்குப்பிறகு அவரால்தான் தமிழ்நாடே உலகிற்கு வழிகாட்டப் போகிறது.அவர் யார் என்பதை பரஞ்சோதி சுவாமிகளுக்கு அகத்தியர் காட்டியுள்ளார்.நான் கமலமுனி நாடி மூலமாகத் தெரிந்துள்ளேன்

.2017க்குப்பிறகு நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.எனவே, உலகெங்கும் பெரும் அழிவு ஏற்பட்டப்பிறகே தமிழ்நாடு உலகிற்கு வழிகாட்டப்போகிறது.

கி.பி.2037 லிருந்து 82,000 ஆண்டுகளுக்கு சித்தர்கள் பரம்பரைதான் இந்த பூமியை உலகத்தை ஆளப்போகின்றனர்

.பக்கம் 99,100,101.
பழனி,திருஅண்ணாமலை,திருப்பதி இந்த மூன்று கோவில்கள்தான் இந்த உலகிற்கே வழிகாட்டப்போகின்றன.

அதற்கு தகுந்தாற்போல், இந்த மூன்று கோவில்களிலும் பல நடைமுறைகள் அடியோடு மாறப்போகின்றன.

தகவல்:சித்தர்களின் மகிமை,பக்கம்24

மீள் பதிவு..