Wednesday, 25 September 2019

கவிதை- எனக்குள் ஒருவன்

•••••••••••••••••••••••••••
எனக்குள் ஒருவன்:
•••••••••••••••••••••••••••

எல்லையற்ற பரம்பொருள் எனக்குள் உயிராய்.
அண்டத்தில் சா்வமுமானவன்,
என் பிண்டத்தில் உயிராய்.

பரம்பொருள் படைத்த படைப்பிற்காிய என் சரீரமே அவனாலயம்...!
எண்ணற்ற வருடங்கள் எண்திசை தேடி, நின்றது என் தேடல் அகவை நாற்பதில்...!

என்னுள்ளே அவனென
அறிந்த நாழிமுதல் அதிா்ந்தேன், முதிா்ந்தேன்.

இருந்தமிடமா்ந்து இமை மூடி இருகண் நடுவில் சவமாகுமுன் சிவத்தை உணா்ந்தேன்.

வழிபாட்டில் வேறுபடும் வழிதொியா உலகம், உள்ளுக்குள் அவனென உணா்தலே அபாித ஆன்மீகம்.

வெண்ணையை கையில் வைத்து நெய்யிற்கு அழைவது போல், உள்ளுக்குள் சிவத்தை வைத்து  உலகத்தில் தேடுகிறோம்...!

சிறு பட்சிகளை துரத்தி உண்ணும் பெருங்கழகு
அப்பறவையின் கூட்டினுள் நுழைவதில்லை உணா்ந்தீரா.!

எண்ணாயிரம் மக்கள் உயிருடன் உறங்கும்போது நெருங்குவதில்லை கழுகு உணா்ந்தீரா...!

உயிா் மூச்சு நின்ற எண்சான் கூடு ஆறடி மண்ணடி புதைந்தாலும் தோண்டி திண்ணுமே கழுகு உணா்ந்தீரா...!

மரத்தடியில் துயிலும் மனிதா் மீது பட்சிகள் எச்சமிடுவதில்லையே உணா்ந்தீரா...!
உள்ளுக்குள் சிவமென்பதை நீ மறந்தாலும் பட்சிகளறியும்.

ஆயுதமேந்திய வேட்டைக்காரன் முன் சிங்கம் வந்தால் பயப்படாத பெரும் வீரனல்ல அவன். அவனாயுதமின்றி வேறில்லை.
எக்கனமும் சிவம் உன்னுடனிருக்க உமக்கேன் பயம்?

கருவில் உருவாகி உயிராய் உள்ளமா்ந்த சிவம் உனக்குள்ளே உன் வாழ்நாள் வரை.

அவனை உணா்ந்திட வழிதேடு.
அவனாலயமாம் உன்னுடலின் ஆரோக்கியம் பேணு.

சுவறிருந்தால் மட்டுமே சித்திரம் என்பதை உணா்ந்திடு. வழிநெடுகிலும் பரம்பொருள் உமக்கருளும் என்பது நிச்சயம்.

ஓம் நம சிவாய...

க.இளங்கோவன்.
26.09.2019