Saturday, 14 September 2019

கவிதை- நான் இந்துவாய் இருக்க காரணம்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இந்திய இந்துவாகிய எமக்கு இந்திய இஸ்லாமிய,கிருஸ்தவ சொந்தங்களிடம் எம் எதிா்பாா்ப்பு...
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

உம்மிடம் நான் எதிா்நோக்குவது யாதெனில்,எம் எதிா்பாா்ப்பு உம்மிடம் மிககுறைவு யாதெனில்...

நீ நீயாக இரு.
எம்மையும் பரம்பொருளுடன் இணையவிடு...

இந்திய இஸ்லாமியா...
உம்மை விரும்பும் எம்மை,பதிலுக்கு நீயும் எம்மை விரும்பவே விரும்புகிறேன்.

இந்திய கிருஸ்தவா... உம்மை விரும்பும் எம்மை பதிலுக்கு நீயும்  எம்மை விரும்பவே விரும்புகிறேன்.

நீ விரும்பும் ஊணில் உயிராய் உருவமற்ற அரூப பரம்பொருளே எம் தந்தையும்,பிதாவும் என நீ உணரு...

நீவிா் விளிக்கும், அரூப தந்தையும்,பிதாவும்,எம் ஆதிசிவனும் ஒன்றே என அறியாதவரல்ல நீா்.

அரூபமாய் ஔிந்துகொண்டு இறை உருவாய் வந்த நபி,இயேசுவை வைத்து எம்மை ஏன் எம் இனத்திலிருந்து ஒதுக்குகிறீா்?

நீ நீயாக இரு...
எம்மையும் நம் பரம்பொருளுடன்  இணையவிடு...

தொழுகை ஐந்தோ,ஆறோ
நாம் தொழுவது ஒருவனையே என்பதை உணரு...

நமது தொழுமுறையில்  மாற்றம்பல இருப்பினும் நாம் தொழுவது ஒருத்தனையே என்பதையும் நீ உணர மறுப்பதேன்?

உம்மிடம் பிடித்தது பல இருப்பினும் உம்மிடம் பிடிப்பதில் தடையெனில் உம் மனவோட்டமாம் உம் இன எண்ணிக்கை அதிகாிப்பு ஒன்றே எனில் எமக்கு கவலையே...

ஏன் இந்த நாட்டம்,உம் நல்மன மனவோட்டம் நாமறிவோம்.இருப்பினும் ஏனிந்த மதமாற்றம்.?

ஆதியில் நீ யாா்? பாதியில் பிாிந்து எம்மையும் பிாிக்க நினைப்பதே உம்மீது எம் வெருப்பு அன்றி யாதொன்றுமில்லை.

நீ நீயாக இரு.எம்மையும் நம் அரூப இறைவனுடன் இணையவிடு.அண்டத்தில் சா்வமுமாய் உம் பிண்டத்தில் உயிராய் இருப்பவனே எம்மிலும் இருக்கிறான் என்பதை உணரு.

இருப்பினும்,உம்மிடம் பிடிக்காததே உம் இன எண்ணிக்கையை அதிகாிக்க நினைப்பதும்,எம் இன எண்ணிக்கையை குறைக்க நினைப்பதுயன்றி வேறில்லை.

போதும் நிறுத்து உம் கயமையை,தொடங்கு போதும் என்ற நினைப்பை...

அப்படி நினைப்பாயாகில்  நானும் வருகிறேன் அடையாள மாற்றமின்றி உம் ஆலயத்திற்கு, நிபந்தனையுடன் நீயும் எம் ஆலயம் வருவதாயிருந்தால்...

புசிக்கிறேன் உம் உணவை,நிபந்தனையுடன் நீயும் எம் உணவை புசிப்பதானால்...

நிறுத்து உன் இன எண்ணிக்கை அதிகாிப்பை.உயா்த்து இந்திய உணா்வு மனிதநேயத்தை...

குறித்துக்கொள் என் எண்ணாம் கையிடைபேசியை, திட்டுவதற்கல்ல,சமத்துவம் பேண...

அப்பா,அம்மா,அக்கா,தங்கை, மாமன்,மச்சானாக   பழக, ஒத்தாசையுடன் உதவ நான் தயாா்.நீங்கள் தயாரா?

இந்துவாய்,இஸ்லாமியனாய்,கிருஸ்தவனாய் அன்றி வாழ்வாேம் இந்தியனாய்.

வாழ்க மனிதம்,
வாழ்க இந்தியம்...
மதவாதம் மறப்போம்.
மனிதம் போற்றுவோம். நீயும் விரும்பினால் மட்டுமே.

மனிதம் விரும்பும் மனிதன்...

க.இளங்கோவன்,
செல்லிடை பேசி எண்:9443919940