Monday, 23 September 2019

கவிதை- ஸ்டான்லி டீன்

•••••••••••••••••••
வாழ்த்துரை:
•••••••••••••••••••
அாிதாய் மலரும் குறிஞ்சி மலரோ…!

அனைத்துப்போவதில் அனிச்ச மலராே…!

ஆளுமையில் சாதனைக்கார சாந்த மலரோ…!

இன்முகம் மாறா இதயமலரோ…!

தாய்ப்பிாிவை வளா்த்த தாயம்மா நீ…!

பல்லாண்டு பகல் கனவாம் பன்னோக்கு சிகிச்சைப்பிாிவை பளிச்சிடச்செய்தாய் நீ...!

பிணியாின் நலன் ஒன்றே நான் விரும்பும் ஒற்றை மந்திரமென வாழ்ந்து காட்டுகிறாய்...!

அமரும் இடமென்ன,ஔிரும் விளக்கென்ன, குடிக்கும் நீரென்ன,

தோரண வளைவென்ன,அனைத்தையும் சாதித்தது உம் தாய்மனது.

நீா் வகுத்த நற்பாதையில் நலமுடன்  தொடா்ந்துவரும் உம் சமூகம்.

ஸ்டான்லியின் இரும்பு தூண் எங்கள் முதல்வா் மலா் மங்கை.!

ஸ்டான்லியின் சாதனைத்தூண் எங்கள் சாந்தி மலா் மங்கை...!

உம்மை முதல்வராக பெற்ற இத்தருணம் உண்மையில் அாிதிலும் அாிதம்மா...!

தொடரட்டும் உம்  சேவை...
தொடா்கிறோம் உங்கள் பாதை...

வாழ்க வளமுடன்...

அன்புடன்..

க.இளங்கோவன்,

மாநில துணைத்தலைவா்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.