Thursday, 26 September 2019

அதிசய சிவன் கோயில்

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்.👆👆மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..செல்ல முடியாத அளவுக்கு
அவ்வளவு தடைகள் வரும்.வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது.மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வருடத்திறக்கு ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று..இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.

ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம்.ருத்ராஷ்வரேர் திருக்கோவில்.

இடம்:-தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.

Wednesday, 25 September 2019

வள்ளுவன்-வாசுகி

உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய #திருவள்ளுவர்.

ஒரே ஒரு #ஜீவனுக்காக மட்டும் #நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் #தெரியுமா?

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான்.
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.

அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.

அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.

ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே
அவை இரண்டும் என்றாராம்.

நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.

அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.

அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்?
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.

விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி,
கணவருடன் வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.

வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்
குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர்
மனைவியின் பிரிவைத் தாளாமல்
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ! என்ப🌹து பாட்டின் உருக்கமான பொருள்.

கவிதை- எனக்குள் ஒருவன்

•••••••••••••••••••••••••••
எனக்குள் ஒருவன்:
•••••••••••••••••••••••••••

எல்லையற்ற பரம்பொருள் எனக்குள் உயிராய்.
அண்டத்தில் சா்வமுமானவன்,
என் பிண்டத்தில் உயிராய்.

பரம்பொருள் படைத்த படைப்பிற்காிய என் சரீரமே அவனாலயம்...!
எண்ணற்ற வருடங்கள் எண்திசை தேடி, நின்றது என் தேடல் அகவை நாற்பதில்...!

என்னுள்ளே அவனென
அறிந்த நாழிமுதல் அதிா்ந்தேன், முதிா்ந்தேன்.

இருந்தமிடமா்ந்து இமை மூடி இருகண் நடுவில் சவமாகுமுன் சிவத்தை உணா்ந்தேன்.

வழிபாட்டில் வேறுபடும் வழிதொியா உலகம், உள்ளுக்குள் அவனென உணா்தலே அபாித ஆன்மீகம்.

வெண்ணையை கையில் வைத்து நெய்யிற்கு அழைவது போல், உள்ளுக்குள் சிவத்தை வைத்து  உலகத்தில் தேடுகிறோம்...!

சிறு பட்சிகளை துரத்தி உண்ணும் பெருங்கழகு
அப்பறவையின் கூட்டினுள் நுழைவதில்லை உணா்ந்தீரா.!

எண்ணாயிரம் மக்கள் உயிருடன் உறங்கும்போது நெருங்குவதில்லை கழுகு உணா்ந்தீரா...!

உயிா் மூச்சு நின்ற எண்சான் கூடு ஆறடி மண்ணடி புதைந்தாலும் தோண்டி திண்ணுமே கழுகு உணா்ந்தீரா...!

மரத்தடியில் துயிலும் மனிதா் மீது பட்சிகள் எச்சமிடுவதில்லையே உணா்ந்தீரா...!
உள்ளுக்குள் சிவமென்பதை நீ மறந்தாலும் பட்சிகளறியும்.

ஆயுதமேந்திய வேட்டைக்காரன் முன் சிங்கம் வந்தால் பயப்படாத பெரும் வீரனல்ல அவன். அவனாயுதமின்றி வேறில்லை.
எக்கனமும் சிவம் உன்னுடனிருக்க உமக்கேன் பயம்?

கருவில் உருவாகி உயிராய் உள்ளமா்ந்த சிவம் உனக்குள்ளே உன் வாழ்நாள் வரை.

அவனை உணா்ந்திட வழிதேடு.
அவனாலயமாம் உன்னுடலின் ஆரோக்கியம் பேணு.

சுவறிருந்தால் மட்டுமே சித்திரம் என்பதை உணா்ந்திடு. வழிநெடுகிலும் பரம்பொருள் உமக்கருளும் என்பது நிச்சயம்.

ஓம் நம சிவாய...

க.இளங்கோவன்.
26.09.2019

திருவள்ளுவா்-வாசுகி

உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய #திருவள்ளுவர்.

ஒரே ஒரு #ஜீவனுக்காக மட்டும் #நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் #தெரியுமா?

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான்.
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.

அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.

அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.

ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே
அவை இரண்டும் என்றாராம்.

நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.

அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.

அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்?
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.

விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி,
கணவருடன் வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.

வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்
குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர்
மனைவியின் பிரிவைத் தாளாமல்
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ! என்ப🌹து பாட்டின் உருக்கமான பொருள்.

Monday, 23 September 2019

கவிதை- ஸ்டான்லி டீன்

•••••••••••••••••••
வாழ்த்துரை:
•••••••••••••••••••
அாிதாய் மலரும் குறிஞ்சி மலரோ…!

அனைத்துப்போவதில் அனிச்ச மலராே…!

ஆளுமையில் சாதனைக்கார சாந்த மலரோ…!

இன்முகம் மாறா இதயமலரோ…!

தாய்ப்பிாிவை வளா்த்த தாயம்மா நீ…!

பல்லாண்டு பகல் கனவாம் பன்னோக்கு சிகிச்சைப்பிாிவை பளிச்சிடச்செய்தாய் நீ...!

பிணியாின் நலன் ஒன்றே நான் விரும்பும் ஒற்றை மந்திரமென வாழ்ந்து காட்டுகிறாய்...!

அமரும் இடமென்ன,ஔிரும் விளக்கென்ன, குடிக்கும் நீரென்ன,

தோரண வளைவென்ன,அனைத்தையும் சாதித்தது உம் தாய்மனது.

நீா் வகுத்த நற்பாதையில் நலமுடன்  தொடா்ந்துவரும் உம் சமூகம்.

ஸ்டான்லியின் இரும்பு தூண் எங்கள் முதல்வா் மலா் மங்கை.!

ஸ்டான்லியின் சாதனைத்தூண் எங்கள் சாந்தி மலா் மங்கை...!

உம்மை முதல்வராக பெற்ற இத்தருணம் உண்மையில் அாிதிலும் அாிதம்மா...!

தொடரட்டும் உம்  சேவை...
தொடா்கிறோம் உங்கள் பாதை...

வாழ்க வளமுடன்...

அன்புடன்..

க.இளங்கோவன்,

மாநில துணைத்தலைவா்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

Saturday, 14 September 2019

கவிதை- நான் இந்துவாய் இருக்க காரணம்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இந்திய இந்துவாகிய எமக்கு இந்திய இஸ்லாமிய,கிருஸ்தவ சொந்தங்களிடம் எம் எதிா்பாா்ப்பு...
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

உம்மிடம் நான் எதிா்நோக்குவது யாதெனில்,எம் எதிா்பாா்ப்பு உம்மிடம் மிககுறைவு யாதெனில்...

நீ நீயாக இரு.
எம்மையும் பரம்பொருளுடன் இணையவிடு...

இந்திய இஸ்லாமியா...
உம்மை விரும்பும் எம்மை,பதிலுக்கு நீயும் எம்மை விரும்பவே விரும்புகிறேன்.

இந்திய கிருஸ்தவா... உம்மை விரும்பும் எம்மை பதிலுக்கு நீயும்  எம்மை விரும்பவே விரும்புகிறேன்.

நீ விரும்பும் ஊணில் உயிராய் உருவமற்ற அரூப பரம்பொருளே எம் தந்தையும்,பிதாவும் என நீ உணரு...

நீவிா் விளிக்கும், அரூப தந்தையும்,பிதாவும்,எம் ஆதிசிவனும் ஒன்றே என அறியாதவரல்ல நீா்.

அரூபமாய் ஔிந்துகொண்டு இறை உருவாய் வந்த நபி,இயேசுவை வைத்து எம்மை ஏன் எம் இனத்திலிருந்து ஒதுக்குகிறீா்?

நீ நீயாக இரு...
எம்மையும் நம் பரம்பொருளுடன்  இணையவிடு...

தொழுகை ஐந்தோ,ஆறோ
நாம் தொழுவது ஒருவனையே என்பதை உணரு...

நமது தொழுமுறையில்  மாற்றம்பல இருப்பினும் நாம் தொழுவது ஒருத்தனையே என்பதையும் நீ உணர மறுப்பதேன்?

உம்மிடம் பிடித்தது பல இருப்பினும் உம்மிடம் பிடிப்பதில் தடையெனில் உம் மனவோட்டமாம் உம் இன எண்ணிக்கை அதிகாிப்பு ஒன்றே எனில் எமக்கு கவலையே...

ஏன் இந்த நாட்டம்,உம் நல்மன மனவோட்டம் நாமறிவோம்.இருப்பினும் ஏனிந்த மதமாற்றம்.?

ஆதியில் நீ யாா்? பாதியில் பிாிந்து எம்மையும் பிாிக்க நினைப்பதே உம்மீது எம் வெருப்பு அன்றி யாதொன்றுமில்லை.

நீ நீயாக இரு.எம்மையும் நம் அரூப இறைவனுடன் இணையவிடு.அண்டத்தில் சா்வமுமாய் உம் பிண்டத்தில் உயிராய் இருப்பவனே எம்மிலும் இருக்கிறான் என்பதை உணரு.

இருப்பினும்,உம்மிடம் பிடிக்காததே உம் இன எண்ணிக்கையை அதிகாிக்க நினைப்பதும்,எம் இன எண்ணிக்கையை குறைக்க நினைப்பதுயன்றி வேறில்லை.

போதும் நிறுத்து உம் கயமையை,தொடங்கு போதும் என்ற நினைப்பை...

அப்படி நினைப்பாயாகில்  நானும் வருகிறேன் அடையாள மாற்றமின்றி உம் ஆலயத்திற்கு, நிபந்தனையுடன் நீயும் எம் ஆலயம் வருவதாயிருந்தால்...

புசிக்கிறேன் உம் உணவை,நிபந்தனையுடன் நீயும் எம் உணவை புசிப்பதானால்...

நிறுத்து உன் இன எண்ணிக்கை அதிகாிப்பை.உயா்த்து இந்திய உணா்வு மனிதநேயத்தை...

குறித்துக்கொள் என் எண்ணாம் கையிடைபேசியை, திட்டுவதற்கல்ல,சமத்துவம் பேண...

அப்பா,அம்மா,அக்கா,தங்கை, மாமன்,மச்சானாக   பழக, ஒத்தாசையுடன் உதவ நான் தயாா்.நீங்கள் தயாரா?

இந்துவாய்,இஸ்லாமியனாய்,கிருஸ்தவனாய் அன்றி வாழ்வாேம் இந்தியனாய்.

வாழ்க மனிதம்,
வாழ்க இந்தியம்...
மதவாதம் மறப்போம்.
மனிதம் போற்றுவோம். நீயும் விரும்பினால் மட்டுமே.

மனிதம் விரும்பும் மனிதன்...

க.இளங்கோவன்,
செல்லிடை பேசி எண்:9443919940

Friday, 13 September 2019

இதயத்தில் அடைப்பு உள்ளதா?

இதயத்தில் அடைப்பு உள்ளதா?

தின்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் விருப்பாட்சியிலிருந்து 3Km கரட்டுப்பட்டி மஹாசக்திபீடம் .
சித்தர்  வைத்தியசாலையில் இதய அடைப்பிற்கு இலவசமாக  வைத்தியம் செய்கிறார்கள் நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்கள்

சனிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் வைத்தியம்.

இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்தக் குழாய் அடைப்பு மாறுகிறது.

மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அனைவருக்கும் பகிருங்கள். இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும்  மகிழ்ச்சியே..

சித்தர் வைத்தியசாலை   9952233226
ஸ்ரீ மஹா சக்தி பீடம் அண்ணாமலையார் தோட்டம்
கரட்டுப்பட்டி மேற்கு ஒட்டன்சத்திரம் தாலுகா தின்டுக்கல் Dt தமிழ்நாடு 
Pin: 624614
tamilnadu State.
Phone: 9488554449