Thursday, 27 June 2019

கவிதை-திண்டுக்கல் வளா்மதி

•••••••••••••••••••••••
_*வாழ்த்துரை:*_
•••••••••••••••••••••••

_வளா்ந்த மதி தேய்கிறதா?_

_செவிலியராய் வளா்ந்த மதி பணிநிறைவால் இன்று தேய்கிறதா?_

_தேய்ந்த மதி வளா்கிறதா?_

_செவிலிய சேவை செய்து தேய்ந்த மதி இன்றாே பணிப்பழு நீங்கி வளா்கிறதா?_

_வளா்ந்து தேய்தல் இயற்கையெனினும்_
_உம்மை விடாமல் விரட்டுவோம் உம் வழிகாட்டல் பெற..._

_திண்டுக்கல் வளா்மதியே,_

_தெவிட்டாத தேன்மதியே,_

_அன்னை உள்ள அன்புமதியே,_

_செவிலியத்தின்_
_அறிவுமதியே,_

_தன்னிகாில்லா தமிழ்மதியே,_

_நிா்வாகத்தில்  நிறைமதியே,_

_செவிலியம் காத்த மறமதியே,_

_சங்கத்தின் அரண்மதியே,_

_கருணை மிகு கனிமதியே,_

_வெண்மன_
_வெண்மதியே,_

_வளாின் வளரான வளா்மதியே,_

_உம் பணிநிறைவு செய்தி மகிழ்வென்றாலும் எங்களுக்குள் ஓா் இனம்புாியா வெறுமை..._

_காலக்சக்கர அச்சாணி பிடுங்கி நாட்கள் ஓடாமல் இருந்தாலென்ன...!_

_சூாியன் அசைவற்றதாய் ஓா் திசையில் அயா்ந்து காலமாற்றமில்லாமல் இருந்தாலென்ன...!_

_வளருடன் தொடா்ந்து வளா்வோமே என்ற இயற்கைக்கு மாறான சிற்றாசை எங்கள் மனதில்._

_இருப்பினும் இயற்கை உறங்குவதில்லையாதலால்,தங்களை வாழ்த்துகிறோம்._

_வளம்பெற்று,நலம்பெற்று,பொதுசேவை தொடர  வாழ்த்துகிறோம்._

_*வாழ்த்துகளுடன்...*_

_*K.வளா்மதி,*_
_*மாநில பொதுச்செயலாளா்,*_

_*மாநில அனைத்து நிா்வாகிகள்,*_

_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_

Saturday, 15 June 2019

கவிதை-தாரா மந்திரம்

•••••••••••••••••••••••••
தாரா(க) மந்திரம்:
•••••••••••••••••••••••••
தந்தையா் தினத்தில் உதித்த தாய் தாரா!

சிறுவாணி பசுமலைகளின் பசுங்கிளியே தாரா!

பெருவுருவத்தினூடே ஒரு  பச்சிளங்குழந்தையே தாரா!

பொய்க்கோபக்குரலிலும் ஓா் மெல்லிசையே தாரா!

பேசினால் அவளை ஒருகனமும் பிாிய மனமிலாா் பலா்.!

தாரா திட்டி சிாித்து மகிழும் கூட்டம் நாங்கள்!

பாசம், நேசம் தாரக மந்திரமான தாரா!

கடமை,கட்டுப்பாடு தவிர வேறாியா தாரா!

எங்கும்,எதிலும் தாமதம்,மறுப்பறியா தாரா!

உண்மை,உழைப்பு
தாராவின்  சிறப்பு!

நம் போா்ப்படையின் கேடயமே தாரா!

நீவிா் வளம்பல பெற்று மலர,வளரணி வாழ்த்துகிறது...

அக்கா தாரகேஷ்வாிக்கு எங்களது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

வாழ்த்துகளுடன்...

க.இளங்கோவன்,

தேதி: 16/06/2019

Sunday, 9 June 2019

கவிதை-அருளுரை

••••••••••••••••  
அருளுரை
••••••••••••••••
அருளில்லாா்க்கு அவ்வுலகமில்லை_
பொருளில்லாா்க்கு இவ்வுலகமில்லை என குறள்மொழியாம்.

அருளில்லாமல் அமைதி  என்ற வாா்த்தை இல்லை
அருளில்லாமல் சீருடை மாற்றமேயில்லை என்பது சங்க புதுமொழியாம்.

ஆயிரங்கூட்டத்திலும்
ஆா்ப்பாிப்பில்லா அமைதியின் அம்சம்,

பொருப்பொன்றை தந்தால் மறுப்பென்ற வாா்த்தையறியாா்.
வெறுப்பென்று யாரும்  இவரை வெறுப்பாா் யாருமிலா்,

பதவியேற்ற நாளன்றே சீருடை மாற்றப்பொருப்பொன்றை விருப்புடன் ஏற்று சிறப்புடன் விடைகண்டாா்.

விடை காணும் நாள் வரை துயிலற்ற தூயவன்,
பல நூறு மாதிாிகளை படம்பிடித்து பதிவெடுத்து படபடப்பாய்  பதியவைத்து,

பலமாற்ற பாிணாமத்தில் பாிணமித்த புத்தாடையின் படைப்பாளன்.

காரணகா்த்தாவாம் காஞ்சிக்காரனின் சாதனைகள் தொடர அவாின் பிறந்தநாளன்று மனதார வாழ்த்துகிறோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அண்ணன் அருள்.
வாழ்க வளமுடன்...

இப்படிக்கு,

க.இளங்கோவன்,

தேதி:10/06/2019

Saturday, 8 June 2019

இந்து மதம் பற்றிய விளக்கம்.

இந்து மதம் பற்றி யாராவது கேட்டால் மற்றும் தெரியாதவர்களுக்கு நமது இந்து மதத்தின் பெருமையை உணர்த்துங்கள்.

1,ஹிந்து மதம் என்றால் என்ன?

பதில் :இந்து மதம் என்பது மதம் என்பதையும் தாண்டி அது ஒரு வாழ்வியல் நுட்பங்கள் வாய்ந்தவை தான் இந்துமதம். அற்புதம், ஆனந்தம்,அதிசயம்,அறிவியல் இவை அனைத்தும் அடங்கியது தான் தம் இந்து மதம்.

2,ஹிந்து மதம் எப்போது தோன்றியது?‪

பதில்‬: எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போது துவங்கியது இந்துமதம்.

3,ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

பதில் : ஒரே தெய்வம் என்று ஏன்இருக்க வேண்டும்.எல்லையில்லாஇறையை நமது புரிதலுக்கேற்பபுரிந்து கொள்கிறோம். அந்தபுரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும்நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மை உள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது.

4,சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?

பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கயியலா அங்கம். மனத்துய்மையுடன் உண்மையாக செய்யும் வழிபாடு தான் மிக முக்கியமான ஒன்று.

5,புராணங்கள் உண்மையா? பொய்யா?

பதில் : உண்மை.அதற்க்கு சாட்சியாக இந்தியாவில் பல ஆயிரம் பழமை வாய்ந்த ஆலயங்கள் உண்டு. குறிப்பாக பஞ்ச பாண்டவர்கள் வந்து வணங்கிய ஆலயம் குஜராத்தில் கடலுக்குள் இன்றும் உள்ளது.
புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.

6,புண்ணியம் – பாவம் என்பது என்ன?

பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.மகாபாரதம் கூறுகிறது  ॥ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வாசைவாவதார்யதாம் |ப்ரோபகார: புண்யாய, பாபாயபரபீடனம் ||“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மைசெய்தல் புண்ணியம். பிறருக்குதீமை செய்தல் பாவம்”

7,தர்மம் என்பது எது?

பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின்,கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.

8,ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்?தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?

பதில் : நல்லது, கெட்டது குறித்த Myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும்பிரபஞ்சத்தின் அங்கங்களே. இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன.இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்தபிறவியிலே தமது தீயசெயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.

9,ஜோதிடம் உண்மையா?

பதில் : உண்மைதான் என்றுஅனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள்.அதற்க்கு பெரிய உதாரணம் விஞ்ஞானம் இல்லாமால் இருந்த காலகட்டத்தில் சுமார் பல ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த இந்து கோவில்களில் இருக்கும் நவகிரக சிலைகளை ஜோதிடம் உண்மை என்று சொல்வதற்கு பெரிய உதாரணம்.

10,“சாமி” வந்து விட்டது என்றுஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?

பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப்பொறுத்து இருக்கிறது.

11,தீமிதித்தல்,அலகு குத்தி காவடிஎடுத்தல் போன்றவை தேவைதானா?

பதில் : மற்றவர்களை தீயில்..தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது!

12,ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?

பதில் : இயல்பானவர்கள் என்று அர்த்தம்.

#சிவசித்தர் #shivasiddhar

தனலெட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவமனையின் சிறப்பு

ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை பெரம்பலூரில்( சிறுவாச்சூர் ) உள்ளது ! அது தனலட்சுமி சீனிவாசன்  Medical College மருத்துவமனை .

ஓர் உடல் பிரச்சனை காரணமாக, நண்பருடன்  ஒருவர் சென்று வந்தார்! உள்ளே நுழைந்த உடனே, அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல,இருவர் staff  இருக்கிறார்கள் .

ஒரு, ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4
டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம் !

அவருக்கு  மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. டாக்டர் பீஸ் கிடையாது.

2.அட்மிஷன் பணம் கிடையாது .

3.அட்மிஷன் செய்த பின்னர், வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.

4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG  50 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.ஆஞ்சியோ கிராம் 3,500 மட்டுமே !

5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.

நமக்கான ஒரேயொரு செலவு, இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும்  தள்ளுபடி உண்டு !

மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு.

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appolloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000  மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 15000 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.

பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.

தனலட்சுமி சீனிவாசன்  மருத்துவமனை -பெரம்பலூர் அருகில் (திருச்சி to சென்னை நெடுஞ்சாலை NH45 யில் உள்ளது )      -பெரம்பலூரில் இருந்து hospital செல்ல, காலை முதல் இரவு வரை, இலவச பஸ் வசதி உண்டு !அரியலூரில் இருந்து, தினமும் காலை 9 மணிக்கு பஸ் புறப்படுகிறது !( அரியலூரில் இருந்து hospital 30 km- பல்வேறு திட்டங்களின் அடிப்படையில், மக்களுக்கு, முக்கிய ஆபரேஷன்கள், முற்றிலும் இலவசமாக செய்கிறார்கள்  ph: 7871807870)

Sunday, 2 June 2019

கவிதை- நன்றியுரை

••••••••••••••••••••••••••••••••
நன்றி...நன்றி...நன்றி.
••••••••••••••••••••••••••••••••
அன்புக்கில்லை  அளவுகோள்.
பாசத்துக்கில்லை  எல்லைக்கோடு.

தன்னலமற்ற என் செவிலியப்போினத்தால்
வாழ்த்துப்பெறும் வரம்பெற்றேன்...!

எண்ணற்ற தூரமிருந்தும் அன்பு பாலத்தால் அருகில்வந்து வாழ்த்திச்செல்லும் பேரு பெற்றேன்...!

எத்தனையோ என் சொந்தமிருந்தும் என்னை வாழ்த்திய முதல் சொந்தமே என் செவிலிய சொந்தம்...!

அன்பென்ற அரூபத்தை
அளவற்று பெற்றபோது
அளவிலா ஆனந்தமடைந்தேன்...!_

ஆசை உண்டு ஆயுள்வரை தங்கள் அன்புக்கு நான் அடிமையாக...!

வாழ்த்திய  உள்ளங்களுக்கு கோடி வணக்கங்களை தங்கள் பாதம் சோ்க்கிறேன்.

நன்றியுடன்...

க.இளங்கோவன்.