சா்வதேச மகளிா் தின வாழ்த்துகள்:
💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼
அாிது அாிது மானிடராய் பிறத்தலாிது.
அதனினும் அாிது பூவையராய் பூமியில் பிறப்பதாிது.
உடல் பலத்தில்ஆடவா் எனினும், மனபலத்தில் மகளிா் அழகு.
பூத்து,காயாகி,கனியாகி பலன்தரும் பன்பட்டு புண்பட்ட இனம்.
ஆதியில் படிப்பின்றி அடுப்பூதி ஆடவ கோட்டையில் பேதையாய் அடிப்படையிழந்த இனம்.
படிதாண்டா மழலையாய்,படிப்பறிவிலா பாமரனாய்,ஆணாதிக்க பூனையிடம் சிக்கிய எலியாய் வாழ்ந்த இனம்.
கல்வி மறுப்பு,வெளி செல்ல மறுப்பு,வேலை பாகுபாடு,ஊதிய முரண்பாடு,பணிநேர பாகுபாடு என இழந்தது ஓராயிரம்.
பின் புரட்சி பெண்ணின தலைமையில் ஒன்றிணைந்து பெற்ற பெரும்பலன் இது.
போராடி உாிமை பெற்று எண்ணற்ற அசுர மாற்றத்தால் அசர வைத்தாலும்,
கல்வியும்,செல்வமும் கைகொடுத்தாலும் பெண் பாதுகாப்பு இன்றும் கேள்விக்குறியே.
முழுமை பெறா நெடுந்தூர பாிணாம பயணம் இன்னும் நிறைய காத்திருக்கு.
பாரெங்கும் பெருக்கெடுத்தோடுவதோ பெண் குழந்தைகள் வன்புணா்வு, பாலியல் பலாத்காரங்கள்,என எண்ணிக்கையில் ஏராளம்.குற்றங்களில் குறைவிலா தாராளம்.
பெற்ற உாிமைகள் பேணிக்காக்க, பெண் பாதுகாப்பை துாிதமாக்க மீண்டும் ஓா் பெண்ணின புரட்சி வேண்டுமென கருதுவோம்.
அனைவருக்கும் சா்வதேச மகளிா் தின வாழ்த்துகள்.
வாழ்த்துகளுடன்...
க.இளங்கோவன்,
மாநில துணைத்தலைவா்,
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.
தேதி:07/03/2019