Sunday, 7 October 2018

வாஸ்து-பணவரவு தடைபடாமல் இருக்க... வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

பணவரவு தடைபடாமல் இருக்க... வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
பண வரவிற்கான கட்டிட அமைப்புகள் மற்றும் வழிகள் !!

நமது முன்னோர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். அப்படி ஓடி ஓடி உழைத்தும் பணத்தை சேமிக்க முடிவதில்லை. பல பேருக்கு பணம் வருவதிலேயே பற்றாக்குறை இருக்கிறது. ஆனாலும், நம் கூடவே வாழக்கூடிய சுற்றத்தாரும், உறவினர்களும் பணத்தால் தன்னிறைவு அடைந்தவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள சில அடிப்படையான கட்டிட அமைப்புதான். அதுபோன்ற இடங்களில் நீங்கள் இருந்தால் இயல்பாகவே உங்களுக்கும் பணம் என்கிற விஷயம் நிரந்தரமாக கிடைக்கும். நல்ல சேமிப்பும் உங்களிடம் இருக்கும்.

கட்டிட அமைப்புகள் :

1. வடக்கும், கிழக்கும் நிறைய திறந்தவெளி உள்ள அமைப்புகள்

2. வடக்குப் பகுதியிலுள்ள ஜன்னலையும், கிழக்குப் பகுதியிலுள்ள ஜன்னலையும் திறந்தால் வானம் தெரியும்படியான அமைப்புகள்

3. வடகிழக்கில் உச்சப்பகுதியில் தலைவாசல் அமைப்பு

4. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மதில் சுவருக்கும், வீட்டிற்கும் இடைப்பகுதியில் அதிக இடைவெளிகள் இருப்பது

5. வடகிழக்கு தெருப்பார்வை அல்லது தெருக்குத்து போன்ற அமைப்புகள் இருப்பது

6. வடமேற்கு, மேற்கு தெருப்பார்வை அல்லது தெருக்குத்து இருப்பது

7. தென்கிழக்கு, தெற்கு தெருப்பார்வை அல்லது தெருக்குத்து இருப்பது

8. வீட்டினுள் வடகிழக்கு பகுதியை வரவேற்பறையாக உபயோகிப்பது

9. தென்மேற்கு பகுதியை மாஸ்டர் பெட்ரூமாக உபயோகிப்பது

10. தரை தளம் மற்றும் முதல் தளம் பிரமிடு போல் இல்லாமலும், ஒரு பக்கம் சரிந்து இல்லாமலும் இரண்டும் சமமாக இருப்பது

11. வீட்டைச் சுற்றிலும் உள்ள இயற்கை சூழ்நிலைகளான மலை, குன்று போன்ற அமைப்புகள் நமக்கு சாதகமாக இருப்பது

12. நான்கு புறமும் மதில் இருப்பது

13. வீட்டின் வெளிப்புறத்தில் நீச்சமான பகுதியில் பள்ளம், குழி, தாழ்வான அமைப்புகள் போன்றவை இல்லாமல் இருப்பது

14. மதில் சுவரின் உச்சமான பகுதியில் முக்கியமாக கேட் வைத்திருப்பது

15. ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற எதிர்மறையான விஷயங்கள் நம்முடைய வீட்டிற்கு மிக அருகில் வராமல் இருப்பது

16. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சிறிய அளவில் தாழ்வாரங்கள், பந்தல், போர்டிக்கோ அமைத்து இருப்பது

17. கார் பார்க்கிங், காவலர்கள் அறை, நாய் கூண்டு போன்றவைகளுக்கு என்று பிரத்யேகமான இடத்தை உருவாக்கி இருப்பது

18. மதில் சுவருக்கும், வெளிப்புறத்திலும் தரை தளம் தென்மேற்கு உயரமாகவும், வடகிழக்கு சற்று தாழ்வாகவும் இருப்பது

19. எந்தவொரு மூலையையும் வளர்ச்சியும், தளர்ச்சியும் இல்லாமல் கட்டிடங்களை உருவாக்கி இருப்பது

20. திசைகாட்டியாக சரியான கோணத்தில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இயற்கையாகவே கட்டிடங்கள் இருப்பது