¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மலைகளின் நாயகி
தேனி
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
வனப்பின் வனப்பே..!
செழிப்பின் செழிப்பே..!
நிலத்தில் குறிஞ்சியே...!
வளத்தின் நீரூற்றாம்
தெய்வீக தென்னகத்தில்
பெயரை சொன்னாலே
நாவில் தேன் சுவையாம்
மலைகளின் நாயகி
நமது தேனி...!
அண்டை ஊராம் ஆண்டிப்பட்டி
அதனின்மேலே வளமிகு வருசநாடு
அங்கே நோ்த்தியுடன் நெசவும்,கைத்தறியும்
சோ்ந்து சிறப்பிக்குதே...!
போடி,பொடிமேடு
காபி,ஏலம் வாசம் எங்கள் மனமயக்குதே...!
அருகே அமைந்ததோ மஞ்சளாறு...அங்கே அழகுடன் அமைந்து மனமயக்கும் தேவதானப்பட்டி...!
சின்னமனூரும்,சின்னசுருளியும்,மேகமலையும் சூழ்ந்திட்ட இயற்கையின் பிறப்பிடமிது...நீரூற்றின் நீரருவியில் எங்கள் மனசும் சோ்ந்து கறையுதே...!
பொியகுளத்தில் ஓா் கும்பக்கரை பொழிகிறது அங்கே பேரருவி...உற்சாக ஊற்றெடுக்கிறது எங்கள் மனதிலே...!
சோத்துப்பாறையும்,குச்சனூரும் அமைந்ததாே அங்கே பொியணையும் சனிதேவனும் காணகண்கோடி வேணுமப்பா...!
புலியருவியும்,தீா்த்ததொட்டியும் தேடினாலும் கிடைக்காத மனஅமைதி இங்கே ஒருசேர கிடைக்குதம்மா...!
சுறுசுறுப்பின் சுருளி ஊற்றின் சுழற்சியில் கரையாத மனமுண்டோ...?இதில் எங்கள் மனம் எம்மாத்திரம்?
வெள்ளிமலையோ வீரபாண்டியோ பாா்க்காமல் சென்றால் மனசு ஆறவழியேது...!
நீா்கொடை வைகை அணை...
அங்கே கால் வைக்க விருப்பமம்மா...!
எண்ணிலடங்கா இயற்கை வங்கி இன்று இயற்கை எழில் காணும் பேரு பெற்றோம்...!
கிளியே பசுங்கிளியே...! எங்கள் கிளைச்சங்க தேனி பற்றி பேசவா...!
மயிலே நீள்தோகை மயிலே பறந்தாடி வா
எங்கள் கிளைச்சங்க தேனி பெறுமை பாா்க்க வா...!
குயிலே கானக்கருங்குயிலே பறந்தோடிவா...
எங்கள் கிளைச்சங்க தேனியின் புகழ் பாட வா...!
உண்ணாமல் உறங்காமல் சொன்னநாள் முதல் சுழலும் பம்பரமாய் சீருடனும் சிறப்புடனும் அலங்காித்து அரங்கேற்றி,
தேனீயின் சுறுசுறுப்பும்,
தேனினுமினிய தித்திப்பும்,
தெவிட்டாத அன்புடன்
எம்மை வரவேற்ற
எங்கள் கிளைச்சங்க தேனியை வாழ்த்த வாா்த்தையின்றி வணங்குகிறோம்.
இவண்:
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.