¤¤¤¤¤¤¤¤¤¤¤
வாழ்த்து மடல்:
¤¤¤¤¤¤¤¤¤¤¤
தெற்கில் உதித்த தென்னவராம்,நம் மருத்துவ உலகின் நல்லவராம்...!
மகா புனித மருத்துவத்தின்
தெய்வீக தென்னக கண்ணனாம்...!
அம்பாசமுத்திரத்தில் பிறப்பெடுத்து,தென்காசியில் உம்மால் பிணி நீங்கி வாழ்த்துவோா் உம்மை ஏராளம்...!
என்றும் எப்போதும் உற்சாக உத்வேகத்தின் உறைவிடமே...!
கத்தி தீட்டாமல் புத்தி தீட்டி, கத்தி எடுத்து பிணிபோக்கும் அறுவை அரங்க மருத்துவரே...!
சிறப்பு படிப்பாம் சிறுநீரகவியலில் நீவிா் சிறுகச் சிறுக சோ்த்த புண்ணியம் ஏராளம்...!
உண்மையும்,உழைப்பும்,தா்மமும்,தானமும்,கடவுளிடம் வரமாய் நிரம்ப பெற்றவரே...!
நெல்லை செவிலியா்களின் மனதில் நின்றாலும்,இன்று மனதார வாழ்த்துகிறது தமிழக செவிலியமும்...!
என்றென்றும் சீருடனும் சிறப்புடனும் வாழ, இன்று உம் பிறந்த நாளன்று இறைவனை வேண்டுகிறோம்.
எங்கள் மதிப்பிற்குாியவரே...உமக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
இப்படிக்கு:
க.இளங்கோவன்,
தேதி: 06/10/2018