Wednesday, 31 October 2018

வெந்தயத்தில் டீயின் பலன்கள்

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

நன்மை 1

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 2

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை 3

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை 4

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

நன்மை 5

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

நன்மை 6

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை 7

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை 8

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை 9

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை 10

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை 11

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை 12

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை 13

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை 14

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 15

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை 16

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை 17

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை 18

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை 19

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை 20

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

பகிர்வு...

Thursday, 25 October 2018

கோயில்களில் விளக்கேற்றும் முறை

அதிமுக்கியமான பதிவு

கலப்பு எண்ணெய் தீபம் வேண்டாம் அது தீமையை தரும் அன்பர்களே!

சமீப வருடங்களாக இறைவனுக்கு பூஜையின் போது  ஐந்து எண்ணெய். மூன்று எண்ணெய் ஒன்பது கூட்டு எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே வீட்டிலோ,ஆலயத்திலோ தொழில் நிறுவனங்களிலோ அலுவலகங்களிலோ தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு அறிக,
         

எப்பொழுதுமே ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது

அதர்வன  மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும் . அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது,

விளக்கமாக அறிவீராக,

பௌர்ணமி கழித்து வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த அஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும் போது பஞ்ச எண்ணெய் தீபம் கால பைரவருக்கு ஏற்ற வேண்டும்,

இதற்கு பஞ்ச (5) தீபம் என்று பெயர், 5 வகை எண்ணெய் கொண்டு தனித்தனியே  ஏற்றப்பட வேண்டும், 5 தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும், ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடபாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும்,

இந்த முறை பிரச்சினைகளுக்கான தீர்வு மட்டுமே, பில்லி சூன்யம். வம்பு. வழக்கு. தீரா நோய் இவைகள் அடங்கும் .

அடுத்து ஒவ்வொரு செவ்வாய்கிழமை காலையும். மாலையும் ஸ்ரீ கால பைரவரை அஷ்டலட்சுமியும் வழிபடுவார்கள், அந்த நேரத்தில் கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில் நெய்தீபம் ஒன்றிலும். நல்லெண்ணெய்  ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும்,

நவகிரக தோஷம் விலக அரசடி விநாயகருக்கு சதுர்த்தி திதி அல்லது ஞாயிற்றுக்கிழமை மூன்று அகலில் ஒவ்வொன்றின்  வீதம் தேங்காய் எண்ணெய். நல்லெண்ணெய். பசு நெய் இவைகளை தனித்தனியே ஏற்றி வழிபட கிரக தோஷம் விலகும் .

அடுத்து சித்திரை. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் ராகுகால வேளையில் சிவாலயத்தில் உள்ள அன்னை துர்க்கைக்கு 9 அகலில் 9 வகை எண்ணெய் தனித்தனியே ஊற்றி 9 வகை கலர் திரி ஒவ்வொன்றிலும் ஒரு கலர் திரி வீதம் போட்டு தீபம் ஏற்றி அன்னையை வழிபட தீரா பிரச்சினையும் தீரும்,

இவ்வாறு பல செயல்களுக்கும் இந்த பல வகை எண்ணெய் தீபம் ஏற்றும் முறை உண்டு, ஆனால் இன்று இந்த நல்முறை அறியாததால் தவறு நடக்கிறது,

5 எண்ணெய்  தீபம் ஏற்றுங்கள் என அக்காலத்தில் சொன்னது தவறாக செய்தி பரவிவிட்டது, 5 எண்ணெய்ûயும் ஒன்றாக கலந்து தீபம் ஏற்றுவது என தவறாக புரிந்து பாதகத்தை அறியாமலேயே பெருகிறார்கள்,

அறியாமல் செய்தால் தவறில்லை என்ற மன ஆறுதல் பேச்சு இதில் செல்லாது, விஷம் என்று அறியாமல் நாம் எடுத்து குடித்தால் அது உடலில் பரவாமல் இருக்காது, அதை போலத்தான் தெய்வ சபையும், தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் குற்றம் குற்றம்தான், அதனால்தான் ஆன்மிகத்தை பொறுத்தவரை தெரியாததை புதிதாக செய்யக்கூடாது என்பார்கள். ஆக தீபத்திற்கான எண்ணெய் கலப்படமாகாமல் ஏற்றுவதே சிறந்தது .

எதிரியை உறவாடி கெடுக்கும் முறை ஒன்று உண்டு .இது அதர்வன முறையில் நிறையவே உண்டு, சூழ்ச்சி. தந்திரம் இவைகளை எதிரி அறியாமல் செயல்படுத்துவதாகும் மூலிகை. யந்திரம். எண்ணெய். மந்திரம் இவைகளில் ஒன்றுக்கொன்று எதிர்ப்பு எதுவென்று அறிந்து அதை சேர்த்து தன் விரோதிக்கு நல்லது என கொடுத்து பயன்படுத்துவார்கள்,

அது என்னவென்று தெரியாமலேயே பயன்படுத்தும் அப்பாவிகள் அதன் விளைவை சந்திக்க வேண்டியதாகிறது . அக்காலத்தில் இதே முறையில் உறவாடி கெடுத்தவர்கள் ஏராளம், அந்த முறையில் ஒன்றுதான் இந்த கூட்டு எண்ணெய் முறை பயன்படுத்தப்பட்டதாகும் .

இந்த முறையை அறிந்தவர்கள் அதன் பலனை அறியாமல்
செய்திகளை வெளியிட்டு மக்களும் அதை பின்பற்றி துன்பப்படுகிறார்கள், அப்படி என்னதான் துன்பம் என்று சந்தேகம் உண்டாகிறதல்லவா ? அதையும் அறியுங்கள்

ஸ்லோ பாய்சன் என்ற கேள்விப்பட்டிருப்பீர்கள் அது மனிதன் அறியாமலேயே கொஞ்ச கொஞ்சமாய் கொல்வதாகும், அதே போல் இந்த எண்ணெய்களை ஒன்றாக கலக்கி தீபம் ஏற்றினால் அதன் விளைவு இதனால்தான் உண்டானது என சந்தேகப்படா வண்ணம் நடக்கும்.

அந்த செயல் என்னென்ன என்று அறியுங்கள், குழந்தைகளுக்கு முறை தவறிய திருமணம் நடக்கும். இது கலப்பு கல்யாணமாகவும் ,உறவுமுறை தவறியதாகவும் இருக்கும்,

காதல் திருமணமாகவும் இருக்கும். பெண்ணுக்கு வயது கூடி ஆணுக்கு குறைந்தும் நடக்கும், திருமணத்தில் நம்பி மோசம் போகும் சம்பவங்கள் நடக்கும். இதில் எது வேண்டுமானாலும் நடக்கும், அடுத்து குடும்பத்தில் நம் விருப்பத்தோடு உறவுகள் விலகல்,தொழில் நஷ்டம், வீட்டில் நிம்மதியற்ற சூழல் ,உறவினர்கள் நண்பர்கள் பகை என கொஞ்சம் கொஞ்சமாக  உண்டாகும், கலகங்கள் உண்டாகும், திடீர் என பொருள் களவு போதல் உண்டாகும். திடீர் அறுவை சிகிச்சை கொடுக்கும், இது வீட்டில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்,

அதிலும் குறிப்பாக மேற்கண்ட நிகழ்வுகள் யாவுமே நமக்கு நல்ல நேரம் காலம் என்று எப்போது ஜோதிடம் காட்டுகிறதோ அப்போதுதான் நடக்கும், வழிமுறை தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட மக்கள் பின்னாளில் துன்பப்படும்போது இதனால்தான் நமக்கு நடக்கிறது என்று அறியாமலே வாழ்க்கையை இழந்து  விழிப்பார்கள், தெய்வத்தையும் நம்பிக்கையற்று இகழ்வார்கள்.

ஜோதிடத்தில் ஜாதகத்தை கணித்து திசா,புத்தி  நன்றாக இருக்கிறது கோச்சார குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி நன்றாக இருக்கிறது எனவே  இந்த ஆண்டு இருக்கும் என்றார்களே ஆனால் இந்த ஆண்டுதானே நான் ரொம்பவும்  கஷ்டப்படுகிறேன் அவ்வாறெனில் ஜோதிடம் தெய்வம் பொய்யா என கேள்வியும் கேட்பார்கள்.

இவ்வாறு கேட்பவர் குடும்பம் இப்படி ஏதாவது ஒரு தவறை செய்து அகப்பட்டுக் கொண்டவர்களாக இருப்பார்கள் . வாழ்க்கையில்  எத்தனையோ வழிமுறையில் தவறுகள் நடந்தாலும் அதில் ஒருவகை இந்த கலப்பு எண்ணெய்யாலும் தவறு நடப்பதால் சுட்டி காட்டினோம் .

கலப்பாக எண்ணெய் கூட்டி ஏற்றும் போது அப்போதைக்கு சில செயல் நடந்தார் போல் இருக்கும் அது மட்டும் தான் நமக்கு தெரியும் ஆனால் அதன் எதிர்மறை பலன் மேலே கூறியிருந்தார்போல் நடக்கும் .

10 ஆண்டுகள் யாம் இதற்காக எடுத்துக் கொண்ட ஆய்வில் சுயமாகவே அறிந்தே கூறியுள்ளேன், அதே நேரத்தில் இக்கருத்தை ஆய்வு செய்தேனே தவிர இதை அக்காலத்திலேயே தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள், நமக்கு முறையாக தெளிவாக கூற இன்று யாரும் இல்லாததால் நல்லது கெட்டது அறிய முடியாமல் போகிறது, மீண்டும் அக்காலம் போல் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது . சரி விளக்கேற்ற இவ்வாறு தனித்தனியே வேறு வேறு எண்ணெய்களில் தினமும் விளக்கேற்ற வேண்டும் என்று இல்லை. தனி எண்ணெய்களில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்,இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், புங்க எண்ணெய், நெய் என தனிஎண்ணெயாக இதில் ஏதாவது ஒன்று தங்கள் வசதிக்கேற்ப தினசரி கோவிலில், வீட்டில் அல்லது அலுவலகத்தில்,பிற இடங்களில் விளக்கேற்றி வழிபடலாம்.

கோவில் மூலஸ்தானத்திலோ,பிற சன்னிதிகளிலோ எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளில் வேறு எண்ணெயை கொண்டு ஊற்றக் கூடாது. அதாவது கருவரையில்/ சன்னிதி விளக்குகளில் நெய்விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது அதில் நல்லெண்ணெய்,அல்லது பிற எண்ணெய்களை ஊற்ற கூடாது. நல்லெண்ணெய் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது அதில் நெய்யை கொண்டு ஊற்றக் கூடாது. அல்லது அர்ச்சகரிடம் கோயில் விளக்கில் இப்படி மாற்றி ஊற்ற சொல்லக் கூடாது. பெரும்பாலான அர்ச்சகர்களுக்கே இந்த விவரம் தெரிவதில்லை. கருவரை/சன்னிதியில் எந்த எண்ணெய்யில் அத்தீபம் ஏற்றப்பட்டுள்ளது என கேட்டு கோவில் விளக்குக்கு ஊற்ற அந்த ஒரே எண்ணெய்/நெய் வாங்கி கொண்டு செல்ல வேண்டும்.

அவ்வாறு மாற்றி வாங்கி சென்று விட்டால் தனி அகல்விளக்கில் தனியாக விளக்கேற்றி வழிபட வேண்டும். முடிந்தவரை கோவிலில் விளக்கேற்றி வழிபட நினைத்தால் எண்ணெய்/நெய் கொண்டு செல்லும் போது தீப்பெட்டியும் எடுத்து செல்வது அவசியம். ஏற்கனவே பிறர் ஏற்றிய விளக்கிலிருந்து நமது விளக்குக்கு தீபம் ஏற்றுவதால் எந்த பலனும் இல்லை

கோவிலில் விளக்கேற்ற, பரிகாரம் தவிர்த்த சாதாரண வழிபாடு/ பூஜைக்கு செல்லும் போது  ஒவ்வொரு முறையும் புதுஅகல் விளக்கு வாங்கி செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோவிலில் உள்ள ஏற்கனவே பயன்படுத்தப் பட்ட அகல் விளக்கை நீரில்  *கழுவி* விளக்கேற்றினால் தோஷமில்லை.

*ஒரு ரகசியத்தை அறிக*

அக்காலத்தில் சாதுக்கள், உபாசகர்கள்,சன்யாசிகள் காளி அம்மன் அருளை பெறவும் கடினமான பிரச்சனைக்கு உடனே தீர்வு காணவும் அறைகதவை பூட்டி கொண்டு 5 எண்ணெய் 5 புது அகலில் தனித்தனியே தீபம் தனி அறையில் ஏற்றி அங்கு அன்னம் தண்ணீர் எதுவுமின்றி மௌனமாய் மூன்று தினம் விரதமிருந்து தீப வெளிச்சத்தை தவிர பிற சூரிய, சந்திர,மின்சார  வெளிச்சமும் காணாமல் அம்மனை மனதிலே பூஜித்திருந்தால் அம்மன் கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்பாள் விரைவில் தீர்வுகிடைக்கும் . இந்த முறையை இன்றைக்கும் கடைபிடிக்கலாம் . இதை விடுத்து வேறு மார்க்கத்தில் 5 எண்ணெய் கலந்து கூட்டி தீபம் ஏற்றினால் பஞ்சமே உண்டாகும்....

Thursday, 11 October 2018

கவிதை- தேனி

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மலைகளின் நாயகி
             தேனி
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

வனப்பின் வனப்பே..!
செழிப்பின் செழிப்பே..!
நிலத்தில் குறிஞ்சியே...!

வளத்தின் நீரூற்றாம்
தெய்வீக தென்னகத்தில்
பெயரை சொன்னாலே
நாவில் தேன் சுவையாம்
மலைகளின் நாயகி
நமது தேனி...!

அண்டை ஊராம் ஆண்டிப்பட்டி
அதனின்மேலே வளமிகு வருசநாடு
அங்கே நோ்த்தியுடன் நெசவும்,கைத்தறியும்
சோ்ந்து சிறப்பிக்குதே...!

போடி,பொடிமேடு
காபி,ஏலம் வாசம் எங்கள்  மனமயக்குதே...!

அருகே அமைந்ததோ மஞ்சளாறு...அங்கே அழகுடன் அமைந்து மனமயக்கும் தேவதானப்பட்டி...!

சின்னமனூரும்,சின்னசுருளியும்,மேகமலையும் சூழ்ந்திட்ட இயற்கையின் பிறப்பிடமிது...நீரூற்றின் நீரருவியில் எங்கள் மனசும் சோ்ந்து கறையுதே...!

பொியகுளத்தில் ஓா் கும்பக்கரை பொழிகிறது அங்கே பேரருவி...உற்சாக ஊற்றெடுக்கிறது எங்கள் மனதிலே...!

சோத்துப்பாறையும்,குச்சனூரும் அமைந்ததாே அங்கே பொியணையும் சனிதேவனும் காணகண்கோடி வேணுமப்பா...!

புலியருவியும்,தீா்த்ததொட்டியும் தேடினாலும் கிடைக்காத மனஅமைதி இங்கே ஒருசேர கிடைக்குதம்மா...!

சுறுசுறுப்பின் சுருளி ஊற்றின் சுழற்சியில் கரையாத மனமுண்டோ...?இதில் எங்கள் மனம் எம்மாத்திரம்?

வெள்ளிமலையோ வீரபாண்டியோ பாா்க்காமல் சென்றால் மனசு ஆறவழியேது...!

நீா்கொடை வைகை அணை...
அங்கே கால் வைக்க விருப்பமம்மா...!

எண்ணிலடங்கா இயற்கை வங்கி இன்று இயற்கை எழில் காணும் பேரு பெற்றோம்...!

கிளியே பசுங்கிளியே...! எங்கள்  கிளைச்சங்க தேனி பற்றி பேசவா...!

மயிலே நீள்தோகை மயிலே பறந்தாடி வா
எங்கள் கிளைச்சங்க தேனி பெறுமை பாா்க்க வா...!

குயிலே கானக்கருங்குயிலே பறந்தோடிவா...
எங்கள் கிளைச்சங்க தேனியின் புகழ் பாட வா...!

உண்ணாமல் உறங்காமல் சொன்னநாள் முதல் சுழலும் பம்பரமாய் சீருடனும் சிறப்புடனும்  அலங்காித்து அரங்கேற்றி,

தேனீயின் சுறுசுறுப்பும்,
தேனினுமினிய தித்திப்பும்,
தெவிட்டாத அன்புடன்
எம்மை வரவேற்ற
எங்கள் கிளைச்சங்க தேனியை வாழ்த்த வாா்த்தையின்றி வணங்குகிறோம்.

இவண்:

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

Sunday, 7 October 2018

வாஸ்து-பணவரவு தடைபடாமல் இருக்க... வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

பணவரவு தடைபடாமல் இருக்க... வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
பண வரவிற்கான கட்டிட அமைப்புகள் மற்றும் வழிகள் !!

நமது முன்னோர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். அப்படி ஓடி ஓடி உழைத்தும் பணத்தை சேமிக்க முடிவதில்லை. பல பேருக்கு பணம் வருவதிலேயே பற்றாக்குறை இருக்கிறது. ஆனாலும், நம் கூடவே வாழக்கூடிய சுற்றத்தாரும், உறவினர்களும் பணத்தால் தன்னிறைவு அடைந்தவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள சில அடிப்படையான கட்டிட அமைப்புதான். அதுபோன்ற இடங்களில் நீங்கள் இருந்தால் இயல்பாகவே உங்களுக்கும் பணம் என்கிற விஷயம் நிரந்தரமாக கிடைக்கும். நல்ல சேமிப்பும் உங்களிடம் இருக்கும்.

கட்டிட அமைப்புகள் :

1. வடக்கும், கிழக்கும் நிறைய திறந்தவெளி உள்ள அமைப்புகள்

2. வடக்குப் பகுதியிலுள்ள ஜன்னலையும், கிழக்குப் பகுதியிலுள்ள ஜன்னலையும் திறந்தால் வானம் தெரியும்படியான அமைப்புகள்

3. வடகிழக்கில் உச்சப்பகுதியில் தலைவாசல் அமைப்பு

4. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மதில் சுவருக்கும், வீட்டிற்கும் இடைப்பகுதியில் அதிக இடைவெளிகள் இருப்பது

5. வடகிழக்கு தெருப்பார்வை அல்லது தெருக்குத்து போன்ற அமைப்புகள் இருப்பது

6. வடமேற்கு, மேற்கு தெருப்பார்வை அல்லது தெருக்குத்து இருப்பது

7. தென்கிழக்கு, தெற்கு தெருப்பார்வை அல்லது தெருக்குத்து இருப்பது

8. வீட்டினுள் வடகிழக்கு பகுதியை வரவேற்பறையாக உபயோகிப்பது

9. தென்மேற்கு பகுதியை மாஸ்டர் பெட்ரூமாக உபயோகிப்பது

10. தரை தளம் மற்றும் முதல் தளம் பிரமிடு போல் இல்லாமலும், ஒரு பக்கம் சரிந்து இல்லாமலும் இரண்டும் சமமாக இருப்பது

11. வீட்டைச் சுற்றிலும் உள்ள இயற்கை சூழ்நிலைகளான மலை, குன்று போன்ற அமைப்புகள் நமக்கு சாதகமாக இருப்பது

12. நான்கு புறமும் மதில் இருப்பது

13. வீட்டின் வெளிப்புறத்தில் நீச்சமான பகுதியில் பள்ளம், குழி, தாழ்வான அமைப்புகள் போன்றவை இல்லாமல் இருப்பது

14. மதில் சுவரின் உச்சமான பகுதியில் முக்கியமாக கேட் வைத்திருப்பது

15. ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற எதிர்மறையான விஷயங்கள் நம்முடைய வீட்டிற்கு மிக அருகில் வராமல் இருப்பது

16. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சிறிய அளவில் தாழ்வாரங்கள், பந்தல், போர்டிக்கோ அமைத்து இருப்பது

17. கார் பார்க்கிங், காவலர்கள் அறை, நாய் கூண்டு போன்றவைகளுக்கு என்று பிரத்யேகமான இடத்தை உருவாக்கி இருப்பது

18. மதில் சுவருக்கும், வெளிப்புறத்திலும் தரை தளம் தென்மேற்கு உயரமாகவும், வடகிழக்கு சற்று தாழ்வாகவும் இருப்பது

19. எந்தவொரு மூலையையும் வளர்ச்சியும், தளர்ச்சியும் இல்லாமல் கட்டிடங்களை உருவாக்கி இருப்பது

20. திசைகாட்டியாக சரியான கோணத்தில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இயற்கையாகவே கட்டிடங்கள் இருப்பது