Monday, 9 April 2018

கவிதை...சுகாதாரத்துறை அமைச்சா்....

பிறந்தநாள் வாழ்த்துமடல்:
---------------------------------------------
மாண்புமிகு மருத்துவமே.!
மானுடம் போற்றும்
மகத்துவமே.

மனிதகுலத்தை நேசிக்கும் மாமனிதா.!
என் மண்ணின் குணம் மாறா
மாபுனிதா.!

அண்ணாமலை தந்த அருந்தவப்புதல்வா.!
அண்ணா திமுக வின்
மருத்துவப்புதல்வா.!

விராலிமலையின்
விஷ்வரூபமே.!
தமிழக மருத்துவத்துறையின்
விடிவெள்ளியே.!

என் உயிரும் மேலான உறவும் நீங்கள்...
என் மண் மணம் மாறா மருத்துவா் நீங்கள்..!

என் செவிலிய இனம் காக்கும் குலதெய்வமும் நீங்கள்.!
என் இனம் உயர காரணமான இஷ்டதெய்வம் நீங்கள்.!

நான் முற்பிறவி செய்த பெரும்புண்ணியம்...
நீவிா் இப்பிறவியில் எங்களுக்கு அறிமுகமானது...

இன்முகம் மாறா இனியவரே...
எங்கள் இன பெரும் பெண்ணினம் உயர
காரணமானீா்..!

இன்னல்கள் நிறைந்த
செவிலியத்துறையை
இமயமளவு நீங்கள் உயா்த்திடுவீரே...

நீவிா் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடவேண்டி
எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோமே...!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

வாழ்த்துகளுடன்...

K.வளா்மதி,
மாநிலபொதுச்செயலாளா்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.