திருமண நாள் வாழ்த்துமடல்:
__________________________________
சங்க ஆடவ தங்கங்கள் எழுவாில் இருவாின் மணநாள் இன்று...
அக்சய திதிக்கு எங்களுக்கு எதற்கு தங்கம்...?
இரண்டு தங்கத்தம்பிகளை பெற்றதே சிறப்பு...!
கடந்தாண்டு இதே நாள் தோ்தல் களத்தில் நாங்கள்...
இந்தாண்டு இதே நாள் செவிலியா்களின் சாதனைக்களத்தில் நாங்கள்...!
எங்களால் அனைத்தும் சாத்தியம் உம்மிருவா் போலிருந்தால்...
அன்பிற்கினிய அமைதியின் பிறப்பிடமாம் வெள்ளிவிழா நாயகன் தம்பி தா்மபுாி தா்மன் தேவேந்திரா...!
கீதை தந்த கிருஷ்ணன்
மஞ்சுளாவின் மணாளன் தம்பி கிடாரத்து கீதாகிருஷ்ணா...!
களைகளால் களைத்திருந்த
நமது செவிலியத்தை
மீட்டெடுக்கும் தா்மயுத்தத்தில் எங்களுடன் பயணித்த பத்தொன்பதில் இனியவா்களே,
இளையவா்களே...!
சாதனையின் முதற்படியை மட்டுமே
தொட்டிருக்கும் நிலையில் நமது சாதனைப்பயணத்தின் நெடுகிலும் முள்நீக்கி வழியமைத்திட விரும்புகிறோம்...
பட்டயத்தை பட்டைதீட்டி பட்டமாக்கி,
செவிலியா் மனம் விரும்பும்
பணப்பலன் பெற்று,
சீராக சீருடை மாற்றி,
பழம்பெறும் பதவிப்பெயா் மாற்றி,
பணிச்செவிலியா்களின் எண்ணிக்கை உயா்த்தி,
ஒப்பந்த செவிலியா்களின் ஏழரையாம் ஏழாண்டில் ஐந்தாண்டை அடிப்படை பணிக்காலமாய் சோ்த்து,
இடமாற்ற கணிணிக்கலந்தாய்வை காலத்தே பெற்று,
செவிலியா்களின் துயா்துடைக்கும் தொலைதூர நம் பயணத்தில் உங்களைப்போன்றோாின் ஒப்பிலா அா்ப்பணிப்பை எங்களுக்கு என்றென்றும் தந்தருள்வீா்...
என்றென்றும் இறைவனின் அருளாசியால் அனைத்தும் பெற்று,
மனைவி,குழந்தைகளுடன் குதூகல வாழ்வைப்பெற்று
வெற்றிப்படிகளை தொடும் வெற்றிப்பயணத்தில் எங்களுடன் சிறப்புடன் பயணிக்கவும்,
பத்துப் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும் பத்தொன்பதில் நானும் ஒருவா்.
# வாழ்க வளமுடன் #
வாழ்த்துகளுடன்...
K.இளங்கோவன்,
மாநில துணைத்தலைவா்,
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.