Friday, 27 April 2018

பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள்...

பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள்...

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல் படுபவனையே கை கூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌ இரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லி கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடா முயற்சியினால்தான்.

11. முன் நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒரு வேளை பின் நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப் படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப் படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தை விட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவை அல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகி விட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது மிக இழிவானது.

- படித்ததில் பிடித்தது

Thursday, 26 April 2018

சிதம்பர இரகசியம்...

சிதம்பர ரகசியம் 

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..
Centre Point of World’s Magnetic Equator.
எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?
அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..?

திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..
வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

கவிதை-ஜீவா மாஸ்டா்

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பிறந்தநாள் வாழ்த்துமடல்:
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

இரண்டும் ஆறும் எட்டில் பிறந்த எட்டா உயர எழுச்சி நாயகனே...!
கன்னி மாவட்ட பிறப்பெடுத்த கன்னிராசி நாயகனே...!

பசுமைமாறா பிரதேசத்தின் அன்பு மாறா அமா்க்கள நாயகனே...!

உயா்ந்தநிலை அடைந்தாலும் நியாயம் தவறா துலாம் ராசிநாயகனே...!

நியாயம் தப்பினால் நண்பரானாலும் குற்றத்தை உரக்கச்சொல்லும் சிம்மராசிநாயகனே...!

பாசத்தின் பசுவாக அன்பின் அடையாளமாக விளங்கும் விவிலிய நாயகனால் ஆசீா்வதிக்கப்பட்டவனே...!

உன் பிறப்பின் உன்னதம் உலகறியட்டும்...!
உன் வாழ்வின் சிறப்பு உலக நூல்களிலேறட்டும்...!

இன்றுபோல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல பரம பிதா ஆசீா்வதிக்கட்டும்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜீவா மாஸ்டா்...

வாழ்த்துகளுடன்...

K.இளங்கோவன்,
மாநில துணைத்தலைவா்,
தமிழ்நாடு அரசு நாசுகள் சங்கம்.

Tuesday, 24 April 2018

கவிதை-தமிழ்நாடு

புலியில்லா வன்னிகாடு
இப்போ தமிழனில்லா
இடுகாடு...

மீசையில்லா சந்தனக்காடு
இப்போ வாசமில்லா
வெருங்காடு...

பெண் சிங்கமில்லா
செந்தமிழ்நாடு
தட்டிக்கேட்க ஆளில்லா வெருங்கூடு....

மேலாண்மையில்லா காவிாி ஆறு
சோறுபோடும் விவசாயிகளின் சுடுகாடு...

தண்ணி தர மறுக்கும் நாடக நாடு
தமிழா்களை வெறுக்கும் பிணந்தின்னி கழுகு...

தாமரை வளர தண்ணியின் மேல
தண்ணிதரும்  நாடோ இப்போ தாமரைக்கு மேலே

கல்தோன்றா மண்தோன்றா முன்தோன்றிய மூத்தகுடிக்கு இன்று நீதி சொல்ல நாதி இங்கு எவருமில்லை...

இவண்: க.இளங்கோவன்

90 நாட்களில் மரம் வளா்ப்பது எப்படி?

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.

அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்

அலைபேசி : 97903 95796

வாழ்த்துகள்

இந்த பதிவை எவ்வளவு  குரூப்புக்கு அனுப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.
அன்பு நண்பர்களே  உங்களுக்கு தெரிந்த கிராம நகர பஞ்சாயத்துக்கு  தெரிவிக்க வேண்டுகோள் வைக்கிறேன் நான்  படித்த பதிவில் மிக மிக சிறந்த பதிவு வீணா போன அரசியல் செய்திகளுக்கு நேரத்தை செலவிட்டு என்ன கண்டோம் இது போல நல்ல *செயதிகளை பரப்பி வான் மழை பெறுவோம்

நன்றி
    🙏🏻🙏🏻🙏🏻

Saturday, 21 April 2018

கவிதை....பணி நிறைவு

பணி நிறைவு வாழ்த்து மடல்:
---------------------------------------

அன்னையே...! அரசு செவிலிய சங்க அாிச்சுவடியே...!

அன்னையே...!
அரசு சங்க ஆதிமூலமே...!

செவிலியத்தின் போராளியே...!
பொருளாளியே...!
பொக்கிசமே...!

அன்னையே...!கனகதாரா மந்திர வரம் பெற்ற கனகலதா அன்னையே...!!

வசீகர வதனமே...!
உம் புன்னகை முகம் பாா்க்க நாங்கள் ஏங்கிய தருணம் பல,

தலைமை குண பிறப்பிடமே...!
அகராதியே...! தலைவணங்குகிறோம் உம்மை...

அன்னையே மனோபலத்தின் அன்னையே...!

அன்னையே...
ஆண்டவனின் அருட்பாா்வை
கிட்டிய அன்னையே...!

அன்னையே...! பிணியாளா் சேவையே
பிறப்பிலான் சேவை  என வாழும் அன்னையே...!

அன்னையே சென்னை செவிலியா்களின் அன்பு அன்னையே...!

தெய்வப்பணியாம் செவிலியத்தின் முன்னோடியே...!

சென்னை மண்ணின் நடமாடும் செவிலிய
பல்கலைக்கழகமே...!

உம் பணிக்கே ஓய்வு அன்றி
செவிலியத்துக்கு நீ காட்டும் நல்வழிகாட்டுதலுக்கில்லை ஓய்வு...

ஆரோக்கிய அமைதியான உம் ஓய்வுக்காலம் என்றென்றும் எங்களை
வழிநடத்தும்
என்ற வேண்டுதலுடன் உம் வழித்தோன்றலாம்
சென்னை செவிலியம்...

          # வாழ்க வளமுடன் #

வாழ்த்துகளுடன்...

க.இளங்கோவன்,

முக்கிய அரசாணைகள்

முக்கிய அரசாணைகள் :

(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)  

                                                       (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)   

                                          
(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)   

                                               (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)  

             
   (5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)   

                                                        (6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)  

                                                          (7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)   

                                                        (8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)       

                                                    (9)-  அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)      
   
(10)-  பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)

Friday, 20 April 2018

மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்!!!

மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்!!!

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான  எண்ணங்களை உங்களின் மனதில் தினமும்  ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம்,   கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள். 

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப்  பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும்  உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்  என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள்.  அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள். 

30. உங்களுக்கு  மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக  இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி  விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு  அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து  இறங்குங்கள்.

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

வாழ்க வலிமையுடன்!!!