Saturday, 2 December 2017

MRB செவிலியா்களுக்கு நெத்தியடி விளக்கம்...

கடந்த சில தினங்களாக MRB மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் பெற்ற செவிலியர்கள் பணியில் இணைந்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வந்தனர்..

அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு செவிலிய சகோதரி,video மூலமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதில்  சும்மா வந்தவர்களுக்கெல்லாம் பணி நிரந்தரம் அளிக்கும் பொழுது,MRB மூலமாக தேர்வு எழுதி மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்ற எங்களுக்கு  நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்ட சும்மா வந்தவர்களான நாங்கள் (+2 வில் 1000க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று  மருத்துவம் படிப்பதற்கு ஒரு சில மதிப்பெண்களை இழந்த நிலையிலும்,ஏழ்மையின் காரணமாகவும்  தமிழ்நாடு  அரசு மருத்துவ கல்லூரியில் செவிலிய படிப்பில் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு,மூன்று ஆண்டுகள் வெளி உலகினை துறந்து  கட்டாய விடுதியில் ( மருத்துவமனையுடன் இணைந்த விடுதியில் அதிக கட்டுபாடுகளுடன் ) தங்கி ,மூன்று வருடங்களில் ஒவ்வொரு வருடத்திற்கும் 30 நாட்கள் மட்டுமே விடுமுறை ( மருத்துவ விடுப்பு ,தீபாவளி, இது அனைத்தும் 30 நாட்களுக்குள் அடங்கும் )  என்ற சூழலில் ,
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலிய  பணி ( மாணவ பணி) செய்து கொண்டு பகுதி நேரம் செவிலியமும் பயின்று மூன்றாண்டுகள் அரசு செவிலிய தேர்வு மூலமாக தேர்வெழுதி  ,அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்களாக வெளி வருகிறோம்...

MRB exam என்பது TNPSC போன்ற தகுதி அடிப்படையிலான  தேர்வு அல்ல...

பல்வேறு பட்ட ( அரசு மற்றும் தனியாரில்  பயின்ற  Diploma,Bsc,Msc   முடித்தவர்களில்)
ஒரு லட்சம் செவிலியர்களில் இருந்து தேவையான அளவு செவிலியர்களை  பணியில் அமர்த்துவதற்காக  தேர்வு  (சல்லடை தேர்வு)...

இதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டும் வேலை என்றெல்லாம் இல்லை..

மதிப்பெண் பட்டியலில் உள்ளவர்களில் இருந்து(மதிப்பெண் அடிப்படையில்) தேவையானவர்களை  தேர்வு செய்து கொள்கின்றனர்...அதிக பட்சம்,குறைந்த பட்ச மதிப்பெண் இவ்வளவு என்ற மதிப்பீடு இல்லை..

இதில் நடந்த கொடுமை என்னவென்றால் செவிலியர்களாக  பணியில் இணைவதற்கு
கல்வி தகுதி
Diploma nursing மட்டுமே..

இந்த தேர்விற்குரிய தகுதியை விட அதிகபட்ச  தகுதியுடைய Bsc,MSC முடித்த நீங்கள்

அரசாங்க வேலை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கூறி அரசிடம் இந்த செவிலிய வேலைக்கு ஒப்புதல் அளித்த பிறகே  அரசு உங்களுக்கு MRB exam எழுத அனுமதித்தது என்பது உங்களுக்கு மறந்திருக்காது என நினைக்கின்றோம்..

அவ்வாறு தேர்வெழுதி  ( choose the best answer)  வந்த பின்பு,நீங்கள் எழுதி நுழைந்த நுழைவு தேர்வினை    TNPSC அளவிற்கு தகுதி தேர்வாக எண்ணி மற்றவர்களை  குறைத்து மதிப்பிட வேண்டாம்...

நாங்கள் தங்களைப் போல புத்தங்கள் வாயிலாக நோய்களை படித்து செவிலியம் கற்றுக் கொள்ளவில்லை ...

நோயாளிகளுக்கு சேவை செய்து அவர்களது நோயின் தன்மையை நேரில் பார்த்து அதற்கு குணபடுத்தும் வழிகளை செயல்முறையாக பயின்றுள்ளோம்....

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழி உண்டு...

உங்களது பட்ட படிப்பு தந்துள்ள அறிவை விட,எங்களது செயல்முறை பயிற்சி தந்துள்ள அனுபவத்திற்கு  வலிமை அதிகம்..

தற்பொழுது நீங்களே கூறியது போல, உங்களால் இந்த செவிலிய பணியை செய்வதற்கு இயலாமல் தானே  செவிலிய மேற்பார்வையாளராக பணி வேண்டும் என கேட்கிறீர்கள்...

செவிலிய பயிற்சி ஆசிரியராக வேண்டும் எனில் பட்ட படிப்பு செய்த நீங்கள் செவிலிய பணி செய்வதற்கான தகுதி தேர்வினை எழுதி இருக்க கூடாது..

அவ்வாறு செவிலியர்களுக்கான தேர்வெழுதி  செவிலிய பணிக்கு வந்த பின்பு இந்த செவிலிய வேலை தெரியாது ..நான் செவிலியர்களுக்கு பாடம் தான்  சொல்லி தருவேன்  என்று பிதற்றக்கூடாது...

செவிலிய பணியை செயல்முறையாக செய்ய தெரியாத நீங்கள் எப்படி செவிலியர்களை வழி நடத்த தகுதியானவர்கள் ஆவீர்கள்?.....

செவிலிய ஆசிரியராக ஆவதற்கு அதற்கென்று உரிய வழி முறையில் அரசு நியமத்துள்ள வழி முறையில் பணி மூப்பு அடிப்படையில் நீங்கள் செவிலிய ஆசிரியராகலாம்..

செவிலிய மேற்பார்வையாளராக ஆவதற்கு செவிலிய பணியில் பணி புரிந்து அனுபவம் உள்ள செவிலியர்களே செவிலிய கண்காணிப்பாளராக ஆவதற்கு தகுதி பெற்றவர்கள்...

இறுதியாக ஒன்று Bsc,Msc முடித்திருக்கிறோம் என்று வார்த்தைக்கு வார்த்தை  சொல்லும் ,நீங்கள் Diploma படித்துள்ள செவிலியர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் உங்கள் அனைவராலும் செய்ய இயலுமா?...

உங்களது தகுதி,தேவை,உரிமை பற்றி தெளிவாகி அதன் பின்பு மற்றவர்களை விமர்சனம் செய்தால் நல்லது...

உங்களது கோரிக்கைகள் நியாயமானது எனில் அது வெற்றி பெறும். வாழ்த்துக்கள்..

மேலும் ,உங்களைப் போன்ற ஒரு சிலர் கூறியதாக:-  தற்பொழுது நடைபெற்ற
போராட்டத்தினாலேயே ஏழு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த  200 செவிலியர்கள் பணி நிரந்த்தம் பெற உள்ளதாக இருப்பதாக தகவல் கிடைத்தது...

தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் பல்வேறு கட்ட போராட்டங்களின்   காரணமாகவே,இன்று  ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் அனைவரும் பணி நிரந்தரம் பெற்றுள்ளனர்...

200 நபர்கள் மட்டுமல்ல இனி வரும் காலங்களில் நீங்கள் பெற உள்ள பணி நிரந்தரத்திற்கான வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கியது தமிழ் நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கமே ஆகும்..

இது அனைவரும் அறிந்த ஒன்றாகும்...

இறுதியாக ஒன்று  உங்களது உண்மை நிலையினை உணர்ந்து, உரிமைக்காக  நியாயமாக போராடும் பொழுது அனைவரும் தங்களுக்கு துணை நிற்க தயாராக உள்ளோம்....

ஆனால் உங்களில் சிலர் அனுபவமிக்க மூத்தோர்களையும் ,
மற்றும் யாரிடமெல்லாம் மரியாதை அளிக்க வேண்டுமோ அனைவரையும் உதாசீனப்படுத்தி  வருவது   அனைவருக்கும்  அதிருப்தியினை அளித்து வருகிறது..

வரும் காலங்களில் உங்கள் தவறுகளை சரி செய்து கொள்ளாமல்  எதனையும் சாதிக்க இயலாது என கூறி கொள்கிறோம்..

குறிப்பு:- சும்மா வந்தவங்கன்னு ஒரு செவிலிய சகோதரி கூறியதற்கான விளக்க பதிவு இல்லை...
இவரைப் போன்று  
உங்களில் பலரது மனநிலையையும்,
செயல்களையும்  நேரில் கண்ட பின்பு  தான் இத்தகைய பதிவு...

போராட்டம் ஆரம்பித்த தேதி:27/11/2017
இடம்:DMS Campus,Teynampet,Chennai 600006