ஒய்யார ஓகி:
------------------
ஒய்யாரமாய் எழுந்த ஓகியே...!!!
காற்றழுத்ததாழ்வாகி
ஆளுயிர அலையை எழுப்பி
அளவில்லா மழையை பொழிந்தாய்...!
கடற்கரை மாவட்டங்களை மழைநீரால் நிறைத்தாய்...!
கன்னி,நெல்லை,முத்துநாடு நெடுகிலும் நீரால் மறைத்தாய்...!
வெள்ளமாய் பெருக்கெடுத்தாய்...!
உன்னால் நீா்நிலை நிலை நிறைந்தது என பெறுமைகொள்வதா...!
மாறாக விவசாயத்தையும் உடமைகளையும் அழித்தாய் என வெறுப்படைவதா...!
இருக்கட்டும்,உனக்கென்ன ஓரவஞ்சகம்
எங்கள் முகவை மாவட்டத்தை ஒதுக்கி விட்டதேன்...?நன்றிகெட்டவனே...!
அங்கோ பொழிந்து அழித்தாய்...!
எங்களிடமோ நீ மறைந்து ஒழித்தாய்...!
இரக்கமற்றவனே
ஆறுமாத கோடையை எம்மக்களும் மாக்களும் எவ்விதம் கடப்போம்...?
இங்கோ பயிா்கள் கருகுது...
நிலத்தடிநீா் குறைகிறது...!
உனக்காக ஏங்கித்தவிக்கும் குளம் குட்டைகளின் அழுகைக்குரல் கேட்கவில்லையோ...?
உனக்கடுத்த சகோதரப்புயல் இனியும் எப்போது வரும்...!
எம்மக்களின் தண்ணீா் தாகம்
எப்போது குறையும்...!
காா்த்திகை கடந்து மாா்கழியிலாவது கொஞ்சம் இரக்கம் காட்டு...
தண்ணீருக்காக ஏங்கித்தவிக்கும்
முகவை மாவட்ட மக்களை மனமுவந்து காப்பாற்று கயவனே...
இவண்:
க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.