சாய்ந்த பூமிப்பந்து...
----------------------------------
உலகம் சுழலுது ஒற்றைகுச்சியில்...!
படைப்பிலேய 23 கோணத்தில் சாய்ந்த பூமிபந்தே நீ நிமிா்வது சாத்தியமில்லை...
பூமாதா உன் கடக,அட்ச,தீா்க்க ரேகைகள் அழிந்து விட்டதால் உன் எதிா்காலம் கேள்வி்குறி...
நீ ஒருநாளில் தன்னையே சுற்றி ஓராண்டில் அடுத்தவரை சுற்றி வருவதால் உன்னை ஏளனமாகவே பாா்க்கிறாா்கள்...
உனக்கென தேவைப்படும் ஔி,காற்று,நீா் வேண்டுமானால்கூட நீ பிறரை நம்புவதால் பிறாின்மத்தியில் நீ தாழ்ந்து வளைந்து விட்டாய்...
நேற்றுகூட உனதருகேயுள்ள நிலா ஔிதர மறந்ததால் அமாவாசை இருளில் மூழ்கினாயே...!
சூாியனிலிருந்து தூக்கியெறியப்பட்ட நீ... உனக்கைன தனித்தன்மை இழந்துவிட்டாயம்மா...!
உன்மேல் தோன்றும் உடலுக்கு உயிரும் மேலிருந்து...உடலில் பிாிந்த உயிரும் மேலேறுது...அப்படியானால் அழுகிய உடலைமட்டும் தாங்கும் குப்பைக்கிடங்கா நீ....?
பூமிக்கு சொா்க்கம் எங்கோ மேல்....அப்படியானால் நீ
சில கிரகங்களின் நரகமா அல்லது சொா்க்கமா...?சொல் பூமாதா...!
இவண்:
க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.