Wednesday, 25 October 2017

கவிதை-எனது தந்தையின் 22 வது நினைவு தின கவிதை.

தனிமை:
----------------
உன்னத உறவின் உத்தம கவனிப்பில் தரணிக்கு தனிமையில்  தண்ணீா்குடத்திலிருந்து பிறந்தோம்...

பெற்றோா்,உடன்பிறந்தோா், உறவினா் என புதுசாய்  வந்த உறவுமொழி கற்றோம்.

வந்தோாில் சிலரோ தரணியை ஆள்வாா்,வந்தோாில் சிலரோ தரையினில் துயில்வா்...

படைத்தவன் அனுப்பிய தலைக்கிருக்கல் எழுத்தின் வாழ்க்கையை வாழ்ந்து,முதுமையின் தனிமைத்தீயில் வாடி கருகி,காடு செல்லும்போதோ அதே தனிமை.....ஆனால் அதன்பின் ஓசையின்றி நிசப்தம்...!

ஆதியும் அந்தமும் தனிமை....வாழ்வின் இடையில் தோன்றும் உறவுகள் வாழ்க்கை விளையாட்டுக்கோா் ரசிகா் கூட்டம்...!

க.இளங்கோவன்
முதுகுளத்தூா்.

( தந்தை, தெய்வத்திரு.இரா.கருமலையான் அவா்களின் 22 ம் ஆண்டு நினைவாஞ்சலி கவிதை...)