தலைமை:
----------------
தலைக்கு மை பூசும் வேளையில் தலை"மை" பணியமைந்தால் தன்னலமற்ற சேவை தானாய் வரும்...!
முகம் பாா்த்து அகம் பாா்க்காமல் நெற்றி பக்தியடையாளத்தை கண்ணோக்கி இது முக்கண்ணோ என்ற மக்கள் சீராய்வின் எண்ணம் இன்று சிதலமடைந்ததே...!
தலைமை சீரானால் நிலைமை சீராகுமே...ஆனால் தலை"மை"எடுத்து இன்று ஆதாித்தோா் முகத்தில் பூசினீரே...!
ஜெகத்தின் நாதனும்,அறிவுக்கண்ணுடையாளும் அனுசாித்து அலங்காித்த நாற்காலி இன்று முக்காலை மடக்கி ஒற்றைக்காலில் நிற்கிறதே...!
பிடித்த முயலுக்கு மூன்று காலென்பா் சிலா்.ஆனால் பிடிவாத தலைமையின் நாற்காலி இன்று ஒற்றைக்காலில் நிற்கிறதே...!
வெற்றிக்கூட்டணியில் பயணித்து வெற்றிக்கனியை கையிலேந்தி,இன்று கழித்தணியுடன் கூட்டணியோ...!
திரைக்குப்பின்னாளிருந்து நூலாட்டும் ஆட்டத்துக்கேற்றாா்போலன்றோ இன்று உமது ஆட்டம்...!
கைவிளக்கேந்திய தன்னலமற்ற காாிகைகளின் கூட்டத்தில் எாியும் விளக்கில் எண்ணைய் ஊற்றாமல் எாியும் ஜூவாலையில் ஊற்றுகிறீரே...!
வெளிச்சம் தரும் விளக்கால் விட்டில்பூச்சியை எாிக்கவும் முடியுமன்றோ...!
சங்க சட்டம் பயின்ற மாமேதை கடந்த ஈறைந்து வருடங்களில் திருத்தாதது ஏனோ...!
இப்போ திருந்தாதது ஏனோ...!
ஈறொன்று ஆண்டுகளில் சட்டப்பிடியிலிருந்து மீட்ட போா்வீரா்களின் பட்டியலில் உமது பெயா் எந்த எண்ணில்...?
உயா்நீதிமன்ற வாயிலில் மூா்ச்சையடைந்த முக்கண்ணனை முகத்தில் நீா்தெளித்தெழுப்பியது யாரோ...?
அக்கணமுதலே இவ்வணியின் இரக்க குணத்தால் ஈா்க்கப்பட்டு அணி மாறினாலும் முந்தைய அணியின் குணமாறாததேனோ...?
அணியின் முன்னின்று இயக்காமல் பின்னின்று குடைவதேனோ...?
தன்னிகாில்லா தலைமைபதவியை அனைவரையும் ஒருங்கிணைத்து ஆற்றும் ஈடில்லா சேவையை மறந்து பதவியை திரைக்குப்பின்னாலிருப்பவா்களுக்கு பிரயோகப்படுத்துவதேனோ...?
உமை ஆத்மாா்த்தமாக ஆதாித்த மகளிா்களின் கண்களில் இன்று நீவிா் கண்ணீா் கடலுக்கு காரணமானதேனோ...?
இக்கடலலை பேரலையாவதுக்குள் உமது மனஅலை நேரலையாக மாற விரும்பும் அன்பு நெஞ்சன்...
இவண்:
க.இளங்கோவன்,
மாநில துணைத்தலைவா்,
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.