Monday, 30 October 2017

பசும்பொன் தேவா்

அது ஒரு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம்.  1937 ல் காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தான்.

கூடியிருந்த மக்கள் 50 ஆயிரத்திற்கு மேல். மேடையிலுள்ள குட்டித் தலைவர்களின் முழக்கங்கள் முடிந்தன. இரவு 10 மணிக்கு சிங்கத்தின் வீர கர்ஜனை ஒலிக்கத் தொடங்கியது.

“நேற்றைய தினம் எங்களது மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களை ரிவால்வரைக் காட்டி பேச விடாமல் தடுத்து மேடையை விட்டு கீழே இறக்கிய சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே, உங்களுக்கு நெஞ்சில் உரமிருந்தால் குண்டுகளை ரிவால்வரிலே மாட்டிக்கொண்டு மேடைக்கு வரும்படி அடியேன் அறைகூவி அழைக்கிறேன். இந்த தேசம் விடுதலை ஆக, பாரத மாதா விலங்கொடிக்கப்பட அடியேன் இந்த மேடையிலே சாவதற்குத் தயார். சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே நீங்கள் தயாரா?” என்று சவால் விட்டு அழைத்த அந்த வீர கர்ஜனைக் குரலுக்கு சொந்தக்காரர் –
தேசியத்தலைவர் #முத்துராமலிங்கத்தேவர்.

”தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்” என்ற கொள்கைக்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த பெருமகனார்.
“வீரமற்ற விவேகம் கோழைத்தனம்; விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம்” என்று வீரத்துடன் விவேகத்தையும் வளர்த்த இரண்டாம் #விவேகானந்தர்.

தனது வீரப்பேச்சால் பல்லாயிரக்கணக்கான தியாகிகளுக்கும், தனது விவேக சிந்தனைகளால் பல்லாயிரக் கணக்கான அறிவாளிகளுக்கும் வழிகாட்டியாய் விளங்கியவர்.

1954ல் காசி இந்து பல்கலைக் கழகத்தில் சர்.சி.பி. ராமசாமி தலைமையில் “இந்து மதம்” என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்
அதுவும் ஆங்கிலத்தில். பேச்சில் இந்து மதத்தின் பெருமை, நாட்டின் வரலாறு, காசியின் சிறப்பு, பாரதியாரின் பாடல்களை எல்லாம் குறிப்பிட்ட #முத்துராமலிங்கத்தேவர்,

மாணவர்களுக்கான குறிப்பேட்டில் எழுதினார்:
“அரசியலில் நேதாஜியையும், ஆன்மிகத்தில் விவேகானந்தரையும் பின்பற்றுங்கள்.” என்னே ஒரு தொலைநோக்குப் பார்வை! தேவரின் பெருமைதான் என்னே!

1955 ஆம் ஆண்டு பர்மா வாழ் தமிழர்களும், பர்மிய அறிஞர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க இரண்டாம் முறையாக பர்மா செல்கிறார் தேவர். தொண்டர்களும், தமிழர்களும், பர்மியர்களும், புத்த பிட்சுக்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு அவரை வரவேற்கின்றனர்.

வரவேற்பில் புதுமையாகவும் – அதே சமயத்தில் புத்தமதத் தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த வரவேற்பும் அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. புத்தமதப் பெண்கள் வரிசையாக இரண்டு புறத்திலும் தரையில் படுத்துத் தங்கள் கூந்தலைத் தரையில் விரித்துக் கொள்வார்கள். தங்களால் வரவேற்கப்படும் தலைவர் அந்தக் கூந்தல் மீது  நடந்து விழா மேடைக்கு வருவார்.

வரவேற்பை ஏற்க மறுத்து தேவர் கூறினார்: “எங்கள் இந்து மதத்தின் படி, பராசக்தியின் திருவுருவில் தாய்க்குலத்தைப் பார்க்கிறவன் நான். அந்த இந்து மதத்தின் சாமான்யப் பிரதிநிதி என்கிற வகையில் அடியேனால் இந்த வரவேற்பை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக இருக்கிறேன்” என்றார் அவர்கள் எழுந்த பிறகே சென்றார் .
பர்மா ஜனாதிபதியை சந்தித்த போது திருக்குறள் புத்தகத்தைப் பரிசளித்த பெருமிதம் கொண்டார் .

தேவர் பெருமகன்.
பொதுக்கூட்டங்கள் நடத்தவில்லை; தனக்கு வாக்களிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொள்ள தொகுதிக்குள் செல்லவில்லை. ஆனாலும் நாடாளுமன்றத்திற்கு அருப்புக்கோட்டை தொகுதியிலும், சட்டமன்றத்திற்கு முதுகுளத்தூர் தொகுதியிலும் ஒரே சமயத்தில் வெற்றியைப் பெற்று நாடே அதிசயித்த அரும் பெரும் தலைவர்.

வீரமும் விவேகமும் என்றும் இம்மண்ணில் தழைத்திட வாழ்நாளெல்லாம் அர்ப்பணித்த ஆன்மிகப் புருஷர்,
தேசியமும், தெய்வீகமும் இம்மண்ணின் அடையாளங்களாகக் காட்டிய கர்ம வீரர்,
தாய்நாட்டின் பெருமைகளை சாதித்தத் தலைவராகக் காட்டிய கொள்கை மறவர்.
“வில்லுக்கு விஜயன், வீறுநடை தேசியக் சொல்லுக்கு முத்துராமலிங்கம்” என்ற கூற்றுக்குப் பொருத்தமான தேசியத் தலைவனாய், தெய்வீகத் திருமகனாய் விளங்கிய பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவரை இந்நாளில் நினைவில் போற்றி ! என்றும் வாழ்வில் பின்பற்றுவோமாக!

Wednesday, 25 October 2017

கவிதை-எனது தந்தையின் 22 வது நினைவு தின கவிதை.

தனிமை:
----------------
உன்னத உறவின் உத்தம கவனிப்பில் தரணிக்கு தனிமையில்  தண்ணீா்குடத்திலிருந்து பிறந்தோம்...

பெற்றோா்,உடன்பிறந்தோா், உறவினா் என புதுசாய்  வந்த உறவுமொழி கற்றோம்.

வந்தோாில் சிலரோ தரணியை ஆள்வாா்,வந்தோாில் சிலரோ தரையினில் துயில்வா்...

படைத்தவன் அனுப்பிய தலைக்கிருக்கல் எழுத்தின் வாழ்க்கையை வாழ்ந்து,முதுமையின் தனிமைத்தீயில் வாடி கருகி,காடு செல்லும்போதோ அதே தனிமை.....ஆனால் அதன்பின் ஓசையின்றி நிசப்தம்...!

ஆதியும் அந்தமும் தனிமை....வாழ்வின் இடையில் தோன்றும் உறவுகள் வாழ்க்கை விளையாட்டுக்கோா் ரசிகா் கூட்டம்...!

க.இளங்கோவன்
முதுகுளத்தூா்.

( தந்தை, தெய்வத்திரு.இரா.கருமலையான் அவா்களின் 22 ம் ஆண்டு நினைவாஞ்சலி கவிதை...)

Friday, 20 October 2017

கவிதை-சாய்ந்த பூமிப்பந்து...

சாய்ந்த பூமிப்பந்து...
----------------------------------
உலகம் சுழலுது ஒற்றைகுச்சியில்...!

படைப்பிலேய 23 கோணத்தில் சாய்ந்த பூமிபந்தே நீ நிமிா்வது சாத்தியமில்லை...

பூமாதா  உன் கடக,அட்ச,தீா்க்க ரேகைகள் அழிந்து விட்டதால் உன் எதிா்காலம் கேள்வி்குறி...

நீ ஒருநாளில் தன்னையே சுற்றி ஓராண்டில் அடுத்தவரை சுற்றி வருவதால் உன்னை ஏளனமாகவே பாா்க்கிறாா்கள்...

உனக்கென தேவைப்படும் ஔி,காற்று,நீா்  வேண்டுமானால்கூட நீ பிறரை நம்புவதால் பிறாின்மத்தியில் நீ தாழ்ந்து  வளைந்து விட்டாய்...

நேற்றுகூட உனதருகேயுள்ள நிலா ஔிதர மறந்ததால் அமாவாசை இருளில் மூழ்கினாயே...!

சூாியனிலிருந்து தூக்கியெறியப்பட்ட நீ... உனக்கைன தனித்தன்மை இழந்துவிட்டாயம்மா...!

உன்மேல்  தோன்றும் உடலுக்கு உயிரும் மேலிருந்து...உடலில் பிாிந்த உயிரும் மேலேறுது...அப்படியானால் அழுகிய உடலைமட்டும் தாங்கும் குப்பைக்கிடங்கா நீ....?

பூமிக்கு சொா்க்கம் எங்கோ மேல்....அப்படியானால்  நீ
சில கிரகங்களின் நரகமா அல்லது சொா்க்கமா...?சொல் பூமாதா...!

இவண்:
க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.

Thursday, 12 October 2017

கவிதை-தலைமை

தலைமை:
----------------
தலைக்கு மை பூசும் வேளையில் தலை"மை" பணியமைந்தால் தன்னலமற்ற சேவை தானாய் வரும்...!

முகம் பாா்த்து அகம் பாா்க்காமல் நெற்றி பக்தியடையாளத்தை கண்ணோக்கி இது முக்கண்ணோ என்ற  மக்கள் சீராய்வின் எண்ணம் இன்று சிதலமடைந்ததே...!

தலைமை சீரானால் நிலைமை சீராகுமே...ஆனால் தலை"மை"எடுத்து இன்று ஆதாித்தோா் முகத்தில் பூசினீரே...!

ஜெகத்தின் நாதனும்,அறிவுக்கண்ணுடையாளும் அனுசாித்து அலங்காித்த நாற்காலி இன்று முக்காலை மடக்கி ஒற்றைக்காலில் நிற்கிறதே...!

பிடித்த முயலுக்கு மூன்று காலென்பா் சிலா்.ஆனால் பிடிவாத தலைமையின் நாற்காலி இன்று ஒற்றைக்காலில் நிற்கிறதே...!

வெற்றிக்கூட்டணியில் பயணித்து வெற்றிக்கனியை கையிலேந்தி,இன்று கழித்தணியுடன் கூட்டணியோ...!
திரைக்குப்பின்னாளிருந்து நூலாட்டும் ஆட்டத்துக்கேற்றாா்போலன்றோ இன்று உமது ஆட்டம்...!

கைவிளக்கேந்திய தன்னலமற்ற காாிகைகளின் கூட்டத்தில் எாியும் விளக்கில் எண்ணைய் ஊற்றாமல் எாியும் ஜூவாலையில் ஊற்றுகிறீரே...!

வெளிச்சம் தரும் விளக்கால்  விட்டில்பூச்சியை எாிக்கவும் முடியுமன்றோ...!

சங்க சட்டம் பயின்ற மாமேதை கடந்த ஈறைந்து வருடங்களில் திருத்தாதது ஏனோ...!
இப்போ திருந்தாதது ஏனோ...!

ஈறொன்று ஆண்டுகளில் சட்டப்பிடியிலிருந்து மீட்ட போா்வீரா்களின் பட்டியலில் உமது பெயா் எந்த எண்ணில்...?

உயா்நீதிமன்ற வாயிலில் மூா்ச்சையடைந்த முக்கண்ணனை முகத்தில் நீா்தெளித்தெழுப்பியது யாரோ...?

அக்கணமுதலே இவ்வணியின் இரக்க குணத்தால் ஈா்க்கப்பட்டு  அணி மாறினாலும் முந்தைய அணியின் குணமாறாததேனோ...?

அணியின் முன்னின்று இயக்காமல் பின்னின்று குடைவதேனோ...?

தன்னிகாில்லா தலைமைபதவியை  அனைவரையும் ஒருங்கிணைத்து ஆற்றும் ஈடில்லா சேவையை மறந்து பதவியை திரைக்குப்பின்னாலிருப்பவா்களுக்கு பிரயோகப்படுத்துவதேனோ...?

உமை ஆத்மாா்த்தமாக ஆதாித்த மகளிா்களின் கண்களில் இன்று நீவிா் கண்ணீா் கடலுக்கு காரணமானதேனோ...?

இக்கடலலை பேரலையாவதுக்குள் உமது மனஅலை நேரலையாக மாற விரும்பும் அன்பு நெஞ்சன்...

இவண்:

க.இளங்கோவன்,

மாநில துணைத்தலைவா்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.