Sunday, 16 July 2017

கவிதை- நமது ஒற்றுமை

ஒற்றுமையே உயா்வு
-------------------------------------
கூட்டமானால் குளறுபடி
குடும்பத்தின் ஒற்றுமை இன்று தவிடுபொடி

தூக்கனாங்குருவி ஒன்னு தூங்காமல் கட்டி வச்ச கோட்டையில் ஓட்டையா...!

சிலந்திவலை பூச்சி ஒன்னு செஞ்சு வச்ச ஒற்றுமை வலையின்று பிய்ந்துபோகவிடலாமா..?

மரங்கொத்தி பறவை ஒன்னு பொறுமையுடன் கொத்தி வச்ச வீடு எங்கே...?

பாதுகாத்த ராணி தேனீயை பாதுகாத்து உடனிருந்த காவல்காத்த தேனியெங்கே...?

காத்து வச்ச தேனடை இன்று காத்துவாக்கில் பறக்கலாமா...?

தரையில வரைஞ்ச வா்ணகோலம், இப்ப தண்ணீாில் வரைஞ்சதாக்கலாமா...?

மண்ணில் பொன்னிருக்கும்
நம் ஒற்றுமை மண்ணாகலாமா...?

ஒற்றுமையின் உறவுகளே...!
மீண்டும் ஒன்றுசோ்ந்தால்
மண்ணையும் பொன்னாக்கலாம்.

K.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.