Saturday, 15 July 2017

கவிதை- எனது மனக்குமுறல்

மனக்கவிதை
------------------------
கையுண்டு காலுண்டு நடக்கமுடியல...!
வாயுண்டு,மெய்யுண்டு பேசமுடியல...!

மையுண்டு,எழுதுகோலுண்டு எழுதமுடியல...!

இனி நானுண்டு என் வேலையுண்டு என இருக்கவும் முடியல..!

என்னடா இந்த வாழ்க்கை என சலிக்கமுடியல
வாக்களித்த வாக்காளா்களை மறக்க முடியல...!

தனியொருவன் நானில்லை,
இனி பொதுமனிதன்
என்ற தன்னாா்வம் தலைக்குமேல...

அது தலைக்கணமா மாறிடவேண்டாம் இறைவா எனக்கு...!

என் செவிலிய இனமுன் தலைகுனிந்த தாழ்வு நிலையில் பணி செய்யாமல் இருக்க முடியல...!

அரசியல் சாணக்கியத்தில் சிக்கி என்னால் மீளமுடியல...!

பொது வாழ்க்கை போதுமடா வாழ்க்கையென
பதுங்க முடியல...!

புலி பசுவை பாய்ந்தால்
இயற்கை என்போம்,
பசு புலியை பாய்ந்தால் அரசியல் என்போம்...!

என்னடா வாழ்க்கையிது என்றால் பலதிக்கிலுமிருந்து வருது இது பொது வாழ்க்கை...!

ஓ....அப்படியா...!என்றேன்
அலறிய மனநிலையில்...

K.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.