Sunday, 25 June 2017
Thursday, 22 June 2017
திரு.அருள்குமாா் பதிவு...
நெஞ்சினித்த நண்பரே - வாழ்க்கையின்
பாகமாய் சேர்ந்துவிட்ட அன்பரே
நட்பெனும் ஊரிலே நட்டுவைத்த பூவரே ,
புன்னகை செய்து பூமிதனில் வாழ்கவே இனிமையும் புதுமையும் வரமாகட்டும் எண்ணியது போல் யாவும் ஜெயமாகட்டும் !!!
--------------------------------------------------------------------
விடியலை நோக்கி செவிலியம்
*********************************
எத்தனை எத்தனை வாதங்கள் - பிரதிவாதங்கள் What's app பரிமாற்றங்கள் எண்ணிலடங்கா.
அவரவர் தத்தம் அணி சார்ந்து, தனிநபர் நட்பு, நம்பிக்கை அடிப்படையில் தேர்தல் திருவிழாவில் சுற்றி வந்தனர்.
தேர்தல் திருவிழா முடிந்து விட்டது . வழக்கம்போல் இயல்பு நிலைக்கு - இது தான் எங்கள் செவிலியம் என கூடு விட்டு பறந்தவையெல்லாம் ஓர் கூட்டுக்குள் திரும்பியது , இதுவே எங்கள் செவிலியம்.
இவ்வளவு பரபரப்பு, எதிர்பார்ப்பு ஓர் சமூகத்திற்கு ஏன்?
சமூகத்தின் வளர்ச்சிக்கு கிடைத்த ஓர் வாய்க்காலை சரிவர உபயோகபடுத்தி தங்களை வழிநடத்தும் தலைமையை ஏற்படுத்தவே இத்தனை எதிர்பார்ப்பு.
எதிர்பார்ப்பு மாற்றத்தை அளிக்குமா ? அல்லது ஏமாற்றத்தை அளிக்குமா ?
என்பது செயல்பாடுகளை முன்னெடுக்கும் போதே தெரியவரும்.
ஓரளவிற்காகவது ஏதாவது சமுதாய வளர்ச்சிக்கு செய்யமாட்டார்களா என்பதே பெரும்பாலரின் எதிர்பார்ப்பு.
எதிர்நோக்கியுள்ள சவால்கள் நிறைய உள்ளது. ஒரே பதிவில் அனைத்தையும் குறிப்பிடலாகது. ஒவ்வொன்றாக.
சங்கத்தின்
*************
கட்டமைப்பை முதலில்
************************
வலுப்படுத்துவது.
*******************
* முதலில் மொத்தம் எத்தனை மருத்துவமனையில் கிளை சங்கம் உள்ளது.
* இரண்டாண்டுகள் உறுப்பினர் சந்தா இதுவரை வசூல் செய்யபடவில்லை.
எனவே அனைவரிடத்திலும் உறுப்பினர் சந்தாவை வசூல் செய்ய வேண்டும்.
* புதியதாக உறுப்பினர் படிவம் தயாரித்து உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
* சங்க அடையாள அட்டை அனைத்து செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும்.
* அனைத்து செவிலியர்களும் தாமாக முன்வந்து இது நம் சங்கம் என்ற உணர்வுடன் - உறுப்பினராக இணைத்து கொள்ள வேண்டும். அது அவரவர் கடமையும் கூட.
* உறுப்பினர் விபரங்களை - பணிபுரியும் மருத்துவமனை விபரங்களை அனைவரும் அறியும் பொருட்டு தமிழ்நாடு அரசு செவிலிய சங்கம் என்ற இணையத்தள முகவரியை ஏற்படுத்தி - உறுப்பினர் விபரங்களை மருத்துவமனை வாரியாக பதிவு செய்திடல் வேண்டும்.
* 10000 × 200 = 20 லட்சம், முறையே இரண்டாண்டுகளுக்கு 40 லட்சம் வருகின்றது.
* மேற்கண்ட தொகையில் கிளைச்சங்கத்திற்கு 50 % போக மீதம் 20 லட்ச ரூபாய் மாநில சங்க நிர்வாகத்தின் கீழ் வரும்.இத்தொகையை வைத்து அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.
* சங்கத்தின் வங்கி கணக்கை இதுவரை செயலாளர், ஒரு பொருளாளர் என இருவர் மட்டுமே கையாண்டு வந்தனர். இனி செயலாளர் மற்றும் இரண்டு பொருளாளர் என மூவர் இயக்க உள்ளனர். இது வெளிப்படை தன்மையை அதிகரிக்க உதவுக்கூடும்.
* சங்க நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு பயணகட்டனம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகை எவ்வளவு என்பதனை தற்போதைய செலவினங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்து அதனை பொதுக்குழு தீர்மானத்தில் கொண்டு வரவேண்டும்.
* சங்கத்தின் தனிநிலை விதிகள் (Bye-laws) - மாநில தலைவர், செயலாளர் கையொப்பமிட்ட நகல்களை அனைத்து கிளை சங்கத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
* வரவு - செலவினங்களை வெளிப்படை தன்மையோடு அனைத்து மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
செய்வீர்களா நீங்கள்?
செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் .
சங்க உணர்வாளனில் ஒருவன்
சேலம் V.அருள்குமார்
Tuesday, 13 June 2017
வளா்மதி அக்கா வெற்றி கவிதை...
வாழ்த்து மடல்
💐💐💐💐💐💐💐
அன்னையின் உள்ளம்
யானையின் பலம்
வேங்கையின் வேகம்
ஆமையின் விவேகம்
பருந்தின் கூா்மை
தமிழா் விருந்தோம்பலின் உறைவிடம்
அனைத்தும் ஒருசோ்ந்த
எங்கள் அன்னையே
( திருமதி.வளா்மதி)
உள்ளன்பு நிறைந்த
உன்னத நோக்குடன்
செவிலியத்துக்கு உழைக்க
ஒன்று பட்ட தமிழக செவிலியத்தால் தோ்ந்தெடுக்கப்பட்ட
ஒப்பிலா தாயே...!
களைகள் குறைந்து
பயிா்கள் செழித்த
பசுமை நிறைந்த
தஞ்சை நெற்களஞ்சியமே
வாருங்கள் வரவேற்கிறோம்
வளருங்கள் செவிலியத்தை நெற்களஞ்சியமாய்...!
மாற்றணியினரையும்
அரவணைத்து அரும்பெரும் சாதனை செய் தாயே...!
ஒற்றுமை நிறைந்த
தமிழக செவிலியத்தை மேலும்
ஒன்றிணைத்து
செழிப்பாக்கு தாயே...!
தமிழக செவிலியம்
எத்திசையும்
எதிா்பாா்க்கும் ஏராளமான நலன்களை
இமைபொழுதில்
செயலாக்கு தாயே...!
மூன்று நொடியாம் மூன்றாண்டுகளில்
முன்னூறாண்டில்
செய்யதக்க சாதனைகளை
செய்துமுடித்து
வரலாற்றில் பெயரெடுந்திடு தாயே...!
சுயநலமின்றி செவிலியத்தில்
உம் பாதச்சுவடுகளை பதித்து ஆலமரமாய்
வளா்ந்து சுயநலமற்ற
சேவைசெய்யும்
விழுதுகளை ஏற்படுத்திடு தாயே...!
எதிா்பாக்குது நமது செவிலியம் உம்மிடம் ஏராளமாய்...
பத்தாண்டு வரலாற்றுக்கு முந்தைய செவிலிய வரலாற்றை மீண்டும்
எழுதிடு தாயே...!
உன் சேவைக்கு உறுதுணையாய்
உம்முடன் கரம் கோா்க்கிறது ஒட்டு மொத்த தமிழக செவிலியம்...
தொடங்கட்டும் உம் சேவை...!
உம்மால் செழிக்கட்டும் தமிழக செவிலியம்...
வாழ்த்தி வணங்குகிறோம் தாயே...!
இவண்:
K.Elankovan
Friday, 9 June 2017
தம்பி இராஜ்குமாா் என்னைப்பற்றிய கவிதை...
பண்பையும் பாசத்தையும்
நிறைவாய் கொடுத்து...
அன்பையும் அறிவையும்
அதிகமாய் வைத்து
ஆண்டவன் அனுப்பிய
ஆப்பநாட்டு ஆண்மகனே...
உனக்கான இந்நாளில்
உனக்காகவே சில வரிகள் இதோ...
அன்பாய் எடுத்துரைத்து
பக்குவமாய் கடிந்துரைத்து
உரிமையாய் அறிவுரைக்கும்
உண்மையான உறவே...
உன்னை
அண்ணனென்று சொல்வதா
ஆசானென்று சொல்வதா
என்னவென்று சொன்னாலும்
என் தலைவன் நீயேதான்..!
கதிரவனை வெல்லும்-உன்
கடமை உணர்ச்சி
கயவருக்கும் உதவும்-உன்
கருணை உள்ளம்
இமயத்தை உருக்கும்-உன்
இரக்க குணம்
இதுவே தொடரட்டும்
இறைவனும் நீ தான்..!
ஆயிரமாயிரம் இதயங்களின்
அன்புமகுடம் நீ தான்..!
அவர்கள் வெற்றிபாதையின்
கலங்கரை விளக்கமும் நீ தான்..!
ஊக்கமெனும் காற்றை சுவாசித்து
உறுதியெனும் நாற்றை பயிர்வித்து
வெற்றியே அறுவடை செய்யும்
வெற்றியாளனும் நீயே தான்..!
வீரமே உன் முகம்
வீறுதமிழ் உன் நாக்கு
சூழ்ச்சிகள் எது வந்தாலும்
சூரணாக நீயே வெல்வாய்..!
வருடங்கள் ஒவ்வொன்றும் உன்
வளர்ச்சிகளே எண்ணி நிற்கும்..!
பதவிகள் ஒவ்வொன்றும் உன்
பாதம்தொடவே காத்திருக்கும்..!
புதிரான இந்த உலகை
புரிதலோடு அணுகி
அழியா புகழ் பெற்று
அணையா ஒளி வீசிட
வாழ்த்துகிறேன் அண்ணா
உனக்கான இந்நாளில்..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
Saturday, 3 June 2017
Thursday, 1 June 2017
கவிதை-அம்மா பாப்புராஜன் மறைவு கவிதாஞ்சலி
_*அம்மா.*_
_*தெய்வத்திருமதி.பாப்புராஜன் அவா்களின் மறைவு நாளன்று எழுதிய கவிதாஞ்சலி...*_
--------------------------------------------------
_*வீரசகாப்தம்*_
_*விடைபெற்றது...*_
-----------------------------------
_வீறு நடைக்கு பேறு பெற்ற மதுரை மங்கையின் மானுடள் மண்ணுக்குள்...!_
_சிறந்த பொது வாழ்க்கை அகராதியின் முதல் பக்க வீரமங்கையின் ஆன்மா இளைப்பாறுகிறது இறைவனிடத்தில்...!_
_மண்ணில் வாழ்பவா் கோடி,வாழ்ந்தவா் கோடி,மறைந்தவா் கோடி...!_ _பலாின் மனதில் வாழ்பவா் சிலரே...!_
_அச்சிலாிலும் சிலராய் என் செவிலிய வீரத்தாய் நீரே...!_
_சிறந்த குணத்தால் செவிலியா்கள் மனதில் நீங்கா இடத்தில் நீரே...!_
_கற்றது கையளவு,கல்லாதது உலகளவு...ஆம் தாயே யாம் உம்மிடம் கற்றது கையளவு....உம்மிடம் கற்கவேண்டியது உலகளவு...!_
_மதுரை மண்ணின் மாணிக்கமாய், செவிலிய தியாகத்திருவுருவாய் திக்கெட்டும் நீரே...!_
_மண்ணில் சிலைநிறுவ ஆகும் தாமதம் எனினும் உமக்கு எங்கள் மனக்கோயில் கட்டியுள்ளோம்...இனி நித்தம் உமக்கு ஆராதனையே...!_
_கண்ணில் கனிவும்,நெஞ்சில் உறுதியுடன்_
_உன் பெயா் நிலைக்க_ _செவிலியம் காத்தாய்...!_
_காலன் உம் உயிா்பிாித்த கணம் எங்கள் உணா்விலும் கலந்தாயே...!_
_மண்ணில் தன்னிகாில்லா தனித்தன்மையால் உமது ஆயிரமாயிரம் செவிலிய சேனையின் மனதில் நித்தம் வாழ்கிறாயே...!_
_உமது சேவை இனி சொா்க்கத்திலும் தொடரும்...உம்மிடம் கற்ற தன்னலமற்ற சேவை எங்கள்மூலம் இம்மண்ணிலும் தொடரும்..._
_உம் ஆன்மா இறைவனுடன் இளைப்பாற ஒட்டுமொத்த இந்திய செவிலியமும் கண்ணீருடன் வணங்குது தாயே...!!!_
_அக்கண்ணீா் கடலில் சில துளியாய்..._
_ஒட்டுமொத்த இந்திய செவிலியா்களுடன்..._
_இந்த அடியேனும்..._
_*K.இளங்கோவன்,*_
_*முதுகுளத்தூா்.*_
😰😰😰😰😰😰😰😰😰😰