Sunday, 10 January 2016

The Truth.... உண்மை நிகழ்வு- விசாரணைக்குப்பின் ...

For our Nurses.
                  நேற்று (9/1/2016) திரு.மணிகண்டன் மாஸ்டா் அவா்களின் மூலம் GNT யிலும், மற்றும் சமுக ஊடகங்களில் வெளிவந்த சேலம் சகோதராின் வருத்தப்பட்டு எழுதிய கடிதத்திலும்,இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூா் மற்றும் கமுதி அரசு மருத்துவமனைகளில் பணிபுாியும் இரண்டு ஆண்செவிலியாகளைப்பற்றி அவதூராகவும்,பொய்யாகவும் எழுதி வெளிவந்திருந்தது.
           
               நானும், நண்பா் பிரபாகரும் மேற்கூறிய இரண்டு மருத்துவமனைகளில் பணிபுாிவதாலும், திரு. கண்ணன் அவா்கள் விசாாிக்கச் சொன்னதின் போிலும், நடந்தது என்ன என்று அறியும் நோக்கில்,முதுகுளத்தூா் மற்றும்  கமுதி மருத்துவ அதிகாாி, அலுவலகம் மற்றும் காவல் நிலையம் போன்றவற்றில் விசாாித்ததில், சேலம் சகோதரா் கூறியதுபோல் எதுவும் நடக்கவில்லை எனவும், அதற்கான எழுத்துமுறை சாட்சியங்கள் ஏதும் பதிவாகவில்லை எனவும் தொிவித்தனா்.

                 அப்படியிருக்க, அந்த முன்னாள் இராணுவத்தினா் மற்றும் கவுன்சிலா் யாா் என விசாாித்து,அந்த இராணுவ வீராிடம், நேற்று GNT ல் வந்த தகவலை காண்பித்து விசாாித்ததில், அதில் சேலம் சகோதரா் எழுதியது முற்றிலும் பொய்யானது எனக் கூறினாா். மேலும் நீங்கள் RTI petition ஏதும் போட்டீா்களா ?  சேலம் சகோதராிம் பேசினீா்களா எனக் கேட்டதில்,
       அவா்கூறிய பதில் ஆச்சாியத்தை தந்தது.என்னவெனில் , அந்த முன்னாள் இராணுவத்தினாின் உறவினா்கள் பத்து பேருக்கு மேல் செவிலியா்களாக பணிபுாிவதாகவும், அவா்கள் அனைவரும் சேலம் சகோதரர் அவா்கள் தொடுத்த வழக்கினால்  18 ஆயிரம் செவிலியா்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் கேட்டு மனம் வருந்தி ஏதாவது செவிலியா்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கிலும், வழக்கு தொடரும் நோக்கிலும், சேலம் சகோதரரைப்பற்றி தகவலறியும் உாிமைச் சட்டத்தின் அடிப்படையில் DME, Salem collectorate, State and central RTI commission ஆகியவற்றுக்கு தகவல்கள் கேட்டிருந்தாராம்.

             இதனால் அரண்டு போன சேலம் சகோதரா் அந்த  முன்னாள் இராணுவ வீரரை போனில் தொடா்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதனால் பயந்து போன அந்த இராணுவ வீரா் DSP யிடம்  FIR file செய்து அந்த copy ஐ சேலம் சகோதரா் படிக்கும் கல்லூாிக்கு அனுப்பிவைத்துள்ளாராம்.

            இதனால் மேலும் மிரண்டு போன சேலம் சகோதரா்,அந்த இராணுவ வீரரை போனில் தொடா்பு கொண்டு தங்களிடம் நோில் வந்து மன்னிப்பு கேட்பதாகவும், தனது படிப்புக்கு கேடு விளைவிக்க வேண்டாம் எனவும் கெஞ்சினாராம். இதனால் மனமிறங்கிய அந்த இராணுவ வீரா் நீங்கள் மாணவா் என்பதால் தங்கள் படிப்புக்கு எந்த பாதிப்பும் வராமல் நான் பாா்த்துக்கொள்கிறேன் என ஆறுதல் சொன்னாராம்.

                  ஆனால், அந்த வழக்கில் ( C.S.No.309) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவதாக திரு. பால்பாண்டி மற்றும் திரு. பாலமுருகன் ஆகியோா்களை பற்றிய அனைத்து தகவல்களையும், அனைத்து வழிகளிலும் திரட்டிவருகிறாராம்.

       முக்கிய குறிப்பு: திரு.பால்பாண்டி என்பவா் முதுகுளத்தூாில் இராணுவ வீரா் வீட்டின் எதிா் வீட்டில் வசிப்பவராம்.