Friday, 8 January 2016

மணிகண்டன் மாஸ்டா் அவா்கள் அருள்குமாா் சாா்பில் GNT க்கு அனுப்பியது ...

[1/9, 11:12 AM] SN Manikandan. tvnli: வருத்தத்துடன் இப்பதிவு.

For our Nurses.

இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நிர்வாக ரீதியாக  என்னை துன்புறத்த வேண்டும் என்ற நோக்கில் எமது உயர்கல்வி குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும்
D.M.E. அலுவலகத்திற்கும்  முறையே இரண்டு தகவல் அறியும் உரிமை சட்ட படி மனுக்கள் குறிப்பிட்ட முகவரியில் இருந்து வந்துள்ளது.

இரண்டு அலுவலகத்திலிருந்தும் இராமநாதபுர மாவட்டத்திற்கு குறிப்பிட்ட முகவரிக்கு பதில் பதிவு தபால் மூலமாக அனுப்பி வைக்கபடுகின்றது.

அக்குறிப்பிட்ட முகவரிக்கு சொந்தக்காரர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்.
அவரது மனைவி அப்பகுதியில் கவுன்சிலர்.
இருண்டு பேரும் பொது வாழ்க்கை மற்றும் மக்கள் நலப்பணியில் தம்மை ஒப்படைத்து கொண்டவர்கள்.

அவர்கள் கடிதத்தை பெற்றவுடன் நாம் எந்தவித கடிதமும் அனுப்பவில்லையே ,இதற்கும் நமக்கும் கடுகளவும் சம்பந்தமில்லையே ,அப்புறம் எவ்வாறு நம்வீட்டு முகவரிக்கு கடிதம் எனறு் யோசிக்கிறார்.

கடிதத்தில் உள்ள தகவல்கள் Nursing Profession. யை சார்ந்தவை என்பதால் அருகில் உள்ள முதுகுளத்தூர் மற்றும் கமதி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரிக்கிறார்.
சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு ஆண் செவிலியர்கள் என முடிவுக்கு வருகிறார் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்.

சேலத்தில் உள்ள என்னுடைய முகவரியும் தெரிந்து கொண்டு என்னுடைய Cellphone யையும் தெரிந்து கொண்டு தொலைபேசியில் என்னை அழைத்து
தம்பி உங்க மீது நான் எந்த புகாரும் DME அலுவலகத்திற்கு அளிக்கவில்லை பா.
என்னுடைய முகவரியை தவறாக உனக்கு எதிராக பயன்படுத்தியுள்ளார்கள் ,DME & Salem Collector office லிருந்தும் என் வீட்டிற்கு கடிதம் வந்துள்ளது.

இக்கடிதத்தை நான் அனுப்பவில்லை என
மேற்குறிப்பிட்ட இரண்டு அலுவலகத்திற்கும் நான் நேரடியாக வந்து சாட்சியம் அளிக்க எந்த நேரமும் தயாராகவே உள்ளேன் பா என்று எனக்கு ஆறுதல் அளித்தார்.

காவல் துறையின் விசாரணையில் சந்தேகத்திற்கு உண்டான நமது இரண்டு ஆண் செவிலிய சகோதரர்கள்
நாங்கள் தான் ஓய்வு பெற்ற இராணுவ வீரரின் முகவரியை தவறாக பயன்படுத்தினோம் என்று தங்களின் குற்றத்தை ஒப்பு கொண்டனர்.

ஓய்வு பெற்ற இராணுவ வீரர் அவர்கள்
என்னிடத்தில் எனக்காக இவ்வளவு உதவி செய்ததோடு மட்டுமில்லாமல்
பொது வாழ்க்கையில் ஈடுபட்டால் இதுபோன்ற தடைகள் வரத்தான் செய்யும் அதை கண்டு மனம் தளராதே என்று ஆறுதல் அளித்ததோடு மட்டுமில்லாமல்
DME & SALEM COLLECTORS OFFICE ற்கும் தன்னுடைய முகவரியை இரண்டு ஆண் செவிலியர்கள்  தவறாக பயண்படுத்தி அருள்குமாருக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர் என உண்மை நிலையை விளக்கி பதில் கடிதம் அளித்துள்ளார்.

என்னிடத்தில் அந்த இரண்டு ஆண் செவிலியர்களும் மன்னிப்பு கேட்கின்றனர் மருத்து அதிகாரி அவர்களும் அவர்களுக்காக என்னிடத்தில் புகாரை திரும்ப பெற்று கொள்ளுங்கள் என்று கேட்கின்றனர்
இதில் பாதிக்கப்பட்ட நபர் நீ தான்
உனது பதில் யாது?
என்று கேட்டார்.

நீங்கள் அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு அவர்களை மன்னித்து காவல் துறை புகாரை திரும்ப பெற்று கொள்ளுங்கள் அய்யா
அதுவே அவர்கள் இருண்டு பேருக்கும் நீங்கள் அளிக்கும் மிகப்பெரிய தண்டனை என்று எமது கருத்தை தெரிவித்தேன்.

அவரும் அவ்வாறே அவர்கள் இருவருக்கும் மன்னிப்பு வழங்கி காவல் துறையில் அளித்த புகாரை திரும்ப பெற்றுகொண்டார்.

செவிலிய துறையில் எவ்வளவோ குறைகள் இருக்க நமக்குள்ளே இப்படியா.

முன்பு தனியார் பயிற்சி செவிலியர்கள் என்னை பழிவாங்க வேண்டும் என அப்பப்பா  DMS & DME அலுவலகத்திற்கு இது போன்ற மொட்டை கடிதம் எழுதுவார்கள்.

அந்த வரிசையில் இப்போ நம் சகோதரர்கள்.

காவல்துறை விசாரணையில்
அவர்கள் கூறிய காரணம் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு.

உங்களை  போன்ற சகோதரர்கள் செவிலிய மன்றத்தில் தேர்தல் நடத்தும் முறை தவறு
குறைந்தபட்சம் வாக்குகளை KMC செவிலிய விடுதியில் வைக்க கூடாது மற்றும் வேட்பாளர் அல்லது முகவர் முன்னிலையில் தான் எண்ணபட வேண்டும் என என்னோடு சேர்ந்து குரல் கொடுத்து இருந்தால் நான் ஏன் உயர்நீதிமன்றம் போக வேண்டும்?

[1/9, 11:36 AM] SN. U. Kannan. WhatsApp: இவர்கள்தான் செவிலியர்கள் மீது பற்றுள்ளவர்கள் என தங்களை காட்டிக் கொள்பவர்கள். அது சரி மாஸ்டர் நீங்கள் இந்த பதிவை இங்கு ஏன் பதிவேற்றம் செய்தீர்கள் என தெரியவில்லை.இங்கு தனது சொந்த விஷயத்திற்கும், ஒரு விடுமுறை குறித்தும், பண பலன் குறித்தும் பதிவிட்டால் குறைந்தது 10 பேராவது பதிவு செய்வார்கள். ஆனால் இது போன்ற பொது விஷயங்களை பதிவிட்டால் எவரும் கண்டுகொள்வதில்லை தங்களின் முந்தைய பதிவுகளை போல. செவிலியத்திற்கு பல நல்ல காரியங்களைச் செய்தாலும் நம்மவர்களின் அறியாமை(?)யினால் ,பல ஆண் செவிலியர்கள் மற்றும் லீலாவதி அவர்களின் பரப்புரையாலும் கெட்ட பெயரையே சம்பாதித்துள்ள,இவ்வளவு பெரிய பதிவை நேரங்கெட்டு முகநூலில் பதிவிடும் நண்பன் அருள்குமாரும், அதை Copy செய்து இங்கு ஏதாவது நடக்கும் என நினைக்கும் தாங்களும் எப்போது திருந்துவீர்கள் என தெரியவில்லை. மற்றபடி செவிலியர்கள் உண்மை நிலையை உணர்வார்கள்  என நினைப்பது நம் மூடத்தனம். இப்போது எனது பதிவிற்காக பொங்குபவர்கள் பொங்கலாம் தாரளமாக.