Tuesday, 5 January 2016

நமது செவிலிய சங்கம் பற்றி திரு.மணிகண்டன் திருநெல்வேலியிலிருந்து....

For Tamilnadu Government Nurses.

நமது மரியாதைக்குரிய மூத்த செவிலியர்கள் நிறைய பேர் நமது சங்கத்தின் நிலைமை என்னவென்றும் , பணியில் இருந்து ஓய்வு பெற்ற திருமதி.லீலாவதி முன்னாள் சங்க மாநில செயலர் மற்றும் தலைவர் திருமதி.அறிவுக்கண் ஆகியோர் தான் இன்றளவும் பதவியில் தொடர்ந்து வருகின்றனர் என்று மிகவும் ஆதங்கபட்டனர்.

அவர்களிடம் ஏதாவது வினவினால் நீதிமன்ற வழக்கை குறிப்பிட்டு அதனால் தான் தொடர்கின்றோம் என கூறுவதாகவும் குறிப்பிட்டார்கள்.

இதுகுறித்து நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு வந்த உடனே நமது மூத்த வழக்கறிஞரிடத்தில் தெளிவான ஆலோசனை பெறப்பட்டுவிட்டது.

சங்க விதியின்படி பணியில் உள்ளவர்கள் மட்டுமே உறுப்பினராக தகுதி பெற்றவர்.

பணியில் இல்லாதவர்கள் நமது சங்கத்தில் உறுப்பினராக கூட  தகுதியில்லை.

இரண்டாவதாக
ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற சங்கத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் யாரும் பதவியில் இருக்க கூடாது என்பது, பொதுவாக ஒரு சங்கத்திற்கு அரசு அங்கீகாரம் அளிக்கும் போது நமது அரசு வழங்கும் அடிப்படை வழிகாட்டல்.

இவையனைத்தும் தொடர்ந்து பத்தாண்டுகள் பதவி வகித்த இருவருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.

வருகின்ற மே மாதம் மாநில பொதுத்தேர்தலும் அதனை தொடர்ந்து,
வருகின்ற மாநில அரசு 7 வது ஊதியகுழுவிற்கு அரசு அங்கீகாரம் பெற்ற சங்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் ,பரிந்துரைகளை பெறுவதற்கும் ஊதியகுழுவை ஏற்படுத்தும்.

அந்த ஊதியகுழுவில் நமது பரிந்துரைகளை எழுத்துபூர்வமாக  மாநில அரசிற்கு எடுத்து செல்ல பணியில் உள்ளவர்கள் மட்டுமே முறையீடு செய்ய முடியும்...

நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி ஏறத்தாழ 5 மாதங்களுக்கும் மேலாகி விட்டது.

இடைக்கால உத்தரவில் இரண்டு வாரங்களுக்குள் சங்கத்தின் சார்பில் பதில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தபட்டது.
ஆனால் இன்று வரை பதில் மனுதாக்கல் செய்யபடவில்லை.

அதுமட்டுமில்லாமல் நம்மிடத்தில் தொடர்பு கொண்டு பேசிய மற்ற சகோதர,சகோதரிகளிடத்தில்

"இனிவரும் காலங்களில் சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மற்றும் சங்க பொதுகுழு கூட்டம் இருப்பின் அதனை 1 மாதத்திற்கு முன்பாக மாநிலம் முழுவதும் உள்ள செவிலியர்களுக்கு தெரிவித்தல், சங்க வரவு -செலவினங்களில் வெளிப்படைத்தன்மை "

உள்ளிட்ட உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளிப்பின் அதனை ஏற்றுகொண்டு வழக்கை திரும்ப பெற்று கொள்கிறோம் என்று பலமுறை தெரிவித்தாகிவிட்டது.

பதிலே இல்லை.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நமது சங்கம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பு வழங்கியுள்ளதே அதனை உறுப்பினர்களிடத்தில்
(நீதிமன்றம் கூறியதை எதையும் மறைக்காமல்)
சேர்க்க வேண்டியது,இது நாள் மற்றும் தற்போது
யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்களது கடமை.

ஒரு சிலர் மூத்த செவிலியர்கள் பலமுறை முயற்சித்தும் அதற்கு பலன் இல்லை.

மற்றொறு புறம் வழக்கை தவறான முன்னுதாரணமாக காட்டி சங்க பொறுப்புகளை பணியில் உள்ளவர்களிடத்தில் இன்றுவரை ஒப்படைப்பு செய்யாமல் இருப்பது ஒரு தவறான முன்னுதாரணம்.

ஆனால் ஒவ்வொரு முறையும் நமது செவிலியர்களிடத்தில் திட்டமிட்டு தவறான தகவல்கள் மட்டும் கணகச்சிதமாக ஒரு சிலர் தங்களின் சுயநலத்திற்காக பரப்பி வருகின்றனர்.

சங்கம் ஒப்படைப்பு சம்பந்தமாக அந்த லீலாவதி அம்மையாரிடத்தில் எதுவும் கேள்வி கேட்க முடியவில்லை பா ...
அப்படி ஏதாவது கேட்டாலும் அந்த அம்மையார் சம்பந்தமில்லாமல் பேசுறாங்க பா...என்று புலம்பல்.
நீங்க தைரியமாக கேள்வி கேட்க வேண்டியது தானே என்றால் ...
எங்கப்பா கேள்வி கேட்டால் உடனே அந்த அம்மையார் தப்பு தப்பா தவறான தகவல்களை செவிலியர்களிடத்தில் பரப்பி விடும்!  அவர்கள் சொல்வதை நம்பவதற்கும் செவிலியர்களில் ஒரு சிலர் எப்போதும் தயாராகவே உள்ளனர்.

பெரும்பாலான மாவட்ட சங்க தலைவர்கள் மற்றும் செவிலிய கண்காணிப்பாளர்கள் எல்லாம் அந்த அம்மையாருக்கு வேண்டபட்டவர்கள்,
அதனால் அந்த அம்மையார் தவறான தகவல்களை பரப்பினால் அடுத்து வரக்கூடிய மாநில நிர்வாகிகள் தேர்தலில் நிறைய பேர் எங்களுக்கு வாக்களிக்காமல் போய் விடக்கூடும் என்று அச்சபடுகிறோம் என்றும் ஒரு சில சங்க முன்னோடிகளிடத்திலிருந்து பதில்.

அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி கொண்டு இருக்கட்டும்.

நமது தரப்பில் நீதிமன்ற நிர்வாக நடைமுறைகள் சென்று கொண்டு இருக்கின்றது.

உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் வாயிலாக வழக்கில் சம்பந்தமட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி வைக்கபட்டுள்ளது.

6 வாரத்திற்குள் அனைவரும் பதில் அளிக்க வேண்டும்.

ஏறத்தாழ நான்கு வாரங்கள் முடிவுற்றுள்ளது.

அதன் பின்னர் வழக்கு விசாரனைக்கு வரும்.

அப்போது நிச்சயமாக ,
ஓய்வு பெற்று 6 மாதங்களாகியும் இது வரை பணியில் உள்ளவர்களிடத்தில் சங்க நிர்வாகத்தை ஒப்படைக்கவில்லை என்பதனை எழுத்துபூர்வமாக மரியாதைக்குரிய நீதியரசர் அவர்களின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்லபடும்.

நீதிமன்றத்தின் ஆணைக்கு பிறகு தான் இவர்கள் ஒப்படைப்பார்கள் என்றால்
10 ஆண்டுகள் சங்க தலைமை பொறுப்பில் இருந்தவர்களுக்கு அழகில்லை.

இது மிகவும் சாதாரண விடயம். பணி ஓய்வு பெற்ற உடன் பொதுக்குழுவை கூட்டி சங்க நிர்வாகத்தை ஒப்படைத்திருக்க வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டம் இதற்கு கூட நியாயம் கேட்டு  சென்னை உயர்நீதிமன்ற கதவை தட்ட வேண்டியுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் அல்லது அதிகபட்சமாக பிப்ரவரி மாதத்திற்குள் நீதிமன்ற நடவடிக்கையினால் சங்க தலைமை நிர்வாகம் சீர்பெறும்.

எவ்வளவு எதிர்மறையான உண்மைக்கு புறம்பான தவறான தகவல்கள் பரப்பினாலும் இனிவரும் காலங்களில் சங்க நிர்வாகம் முறையாக செயல்பட சட்டபூர்வமான நடவடிக்கை தொடரும்.

இவையனைத்திற்கும் மேலாக நமது  தொகுப்பூதிய செவிலியர்களின் பணிநிரந்தரம்.

தற்போது பல்வேறு சிரமங்களுக்கிடையே தொகுப்பூதியத்தில் பல ஆண்டுகள் நிரந்தர பணிக்காக காத்து உள்ளனர்.

தன்னலமற்ற பொதுநலன் கொண்ட சங்க தலைமை வாய்க்கபெற்றால் அவர்களின் நிரந்தர பணி விரைவில் சாத்தியபட வாய்ப்பு உள்ளது.

ஆயிரம் மாற்று கருத்துகள் இருப்பினும்
தனிசங்கம் காண வேண்டிய சூல்நிலைக்கு தள்ளபட்டிருந்தாலும் இப்போது உள்ள பணியில் உள்ள தொகுப்பூதிய செவிலியர்கள் அரசு பணி பெறுவதற்கு ஒரு சில அந்தந்த Batch யை சார்ந்த ஆண் செவிலியர்கள் உழைப்பு ஒரு புறம் இருப்பினும் அரசு செவிலிய  சங்கத்தின் பங்களிப்பும் இருந்தது.

அரசு செவிலிய சங்கத்திற்கு வல்லமை பொருந்திய மரியாதைக்குரிய திருமதி.பாப்புராஜன் அம்மையார் போன்றோர் இருந்திருப்பின் தொகுப்பூதிய செவிலிய சங்கம் என்ற ஒன்று தேவையில்லை.

சங்கத்தின் மாண்பும், கெளரவுமும் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் விரைவில்  ஸ்தாபிக்கபடும் என்று நமது செவிலிய சொந்தங்களிடத்தில் தெரிவித்து கொள்கிறோம்.

ஆதார நகல்.

உயர்நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதியரசர் அவர்களின் சம்மன்.