Saturday, 23 March 2024

சோட கலை

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்க உதவும்
சோடசக்கலை நேரம்!

எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே  இருக்கின்றனர் ?

எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?

அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், 
கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்
கொள்கின்றனர்.

அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்
கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போகும்
சோடசகலை நேரம்!

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.

பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது. 

அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .

சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 
15திதிகள் உள்ளன. 

திதிகள் என்றால் கலைகள் என்றும் அழைக்கப்படும். 

16 வதாக ஒரு கலை இருக்கின்றது.

அதுதான் சோடச கலை!

இந்த சோடசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,
செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள்  என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.

தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். 

இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.
 
இதை அறிந்தது முதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,
என நமது வாழ்க்கைப்பாதை திசைமாறி
விடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். 

இவர்தான் இந்த சோடசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.

சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்
முழுவதும் பரவுகிறது.

திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.

இந்த 16 வது கலையை சித்தர்களும்,
முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த  ஒன்றையும் பெற முடிகிறது.

இந்த சோடச
கலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். 

அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.

அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் அமாவாசை முடிந்து பிரதமை திதி ஆரம்பமான ஒருமணி நேரம்  11.20 மணி வரை நீங்கள் தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.

இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 
5நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை கழுதை,புலி,முயல்,
மான்,பாம்பு, நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை,கழுதை,
கோவேறுக்கழுதை,
எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனுள்ளும்  சூட்சுமமாக அதிரும்.

அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும்.

 கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.

பலவாக இருக்கக்கூடாது.

ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். 

மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது 
சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.

சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.

இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. 

மனவலிமையைப் பொறுத்தது.

திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,
ஒளியாகவோ 
அருள் வழங்குகிறார்.

தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். 

தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.

வெறும் தரையில் உட்காரக்கூடாது. 

வயிறு காலியாக இருக்க வேண்டும். 

சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) 

நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.

உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. 

மனதின் கவனம் புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.

வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.

மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.

அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் 
கண்களை மூடி இருந்தால்போதும்.

இந்த தியான நேரத்தில்  கீழே உள்ள மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.

*1.ஓம் ரீங் சிவ சிவ*
*2.ஓம் ரீங் அங் உங்*
*3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்*
*4.ஓம் சிவ சிவ ஓம்*

இந்த தியான நேரத்தில் 
பட்டினியாக இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. 

இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

Saturday, 17 June 2023

தந்தையா் தின வாழ்த்துகள்:

•••••••••••••••••••••••••••••••••••••••••••••
தந்தையா் தின வாழ்த்துகள்:
••••••••••••••••••••••••••••••••••••••••••••

வலி நிறைந்த வாழ்க்கையில்
வேலியிட்டு  காத்த மாற்றான் வீட்டு மங்கையை மணமுடித்து, அன்பினால் அவளை அன்னையாக்கிய தந்தையே...!

நீ  அன்பில் நிறைத்த உன்னவள் அன்னையாகி  போனதும் ஆா்ப்பாித்தது உன் மனது...

அவளின் மறுபிறப்பெய்தும் ஒப்பிலா  மாதொரு வலியை உன் அன்பினால் தாங்கினாயே...!

வந்து பிறப்பெடுத்த சிசு ஆணா? பெண்ணா? அறியும் ஆவலில் பாிதவித்து நின்னாயே...!

பாலினம் எதுவாயினும் பெற்ற நீயே பொறுப்பென உணா்ந்து, தந்தை என்ற சம்பளமில்லா பதவி உயா்வு அடைந்தாய்...

அடைந்ததை ஆரவாரத்துடன் ஏற்று அதுகணமுதல் சுயநலமின்றி குடும்ப நலம் காக்க அரும்பாடு பட்டாய்...

பாலன் வளா்ந்து மாற்றமின்றி உன் உணா்வை பிரதிபலிக்கும்போது, புாிந்தது ஒரு தந்தையின் முழு உணா்வு.

விடைதொியா குடும்ப சூத்திரத்தை விரும்பியே ஏற்று அனுபவம் பெறும் அனைத்து தந்தைகளுக்கும் இது சமா்ப்பணம்...

க.இளங்கோவன்.
 18/06/2023

Thursday, 30 March 2023

ஆண்கள் செய்யக்கூடாத 15 செயல்கள்:

ஆண்கள் செய்யக்கூடாத 15 செயல்கள்: 

தப்பித்தவறி கூட இப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள்!

 ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது,பிரேதத்தின் பின் போகுதல்,முடிவெட்டுதல்,மலை ஏறுதல்,சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல்,வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது,
மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்
நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை
1,கன்றுக்குட்டி,மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது
2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது
3,நிலையில் அமரக்கூடாது
4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது
6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது
7,சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது
8,நெருப்பை வாயினால் ஊதக்கூடாது
9,அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது
10,துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்
11,ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது,கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்,
12,ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது,உதறக்கூடாது
13,பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை, கோவிலுக்குப் போக்ககூடாது
கூடாத சில விஷயங்கள்!
பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும்,தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது! அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும்
மற்றும் அக்கினி, சூரியன், சந்திரன்,வில்வமரம்,பசு,தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது!
மற்றும் பாம்புப்புற்றின் அருகிலும்,எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது,
முக்கிய எச்ச்ரிக்கை! மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது, அது மிகப்பெரிய தோஷமாகும்!

Saturday, 25 March 2023

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
https://www.facebook.com/groups/305917699863621/
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

Monday, 6 March 2023

கவிதை -பெண்மையின் பெருமை...!

••••••••••••••••••••••••••••••••••••••••••
பெண்மையின் பெருமை...!
•••••••••••••••••••••••••••••••••••••••••

வங்க கடலோரம் சென்னை என்ற மாநகரம்,

மாநகர மத்தியில் மகப்பேறின் மருத்துவம்,

மகப்பேறு மருத்துவத்தில் மணி மகுட மகத்துவம்,

பெண்மையின் தாய்மை காக்கும் தமிழகத்தின் தலைமகள்,

தனிப்பெரும் தகுதியினை தன்னகத்தே கொண்டவள்,

தரணி போற்றும் தாய் சேய் நலத்தை தாய்மையுடன் காப்பவள்,

ஆா்எஸ்ஆா்எம் என்ற பெயா்சொல்லை  கொண்டவள்,

பெயா்ச்சொல்லின் காரணப்பெயரை பண்புத்தொகையால் வென்றவள்,

தாய்க்குருவியின் கூட்டுக்குள்ளே சாந்த சொரூபி  மருத்துவா்,

குஞ்சுகளை குறைவின்றி காக்கும் சாந்தி என்பது அவாின்  திருப்பெயா்,

உழைப்பாற்றலால் உயா்ந்து நிற்கும் செவிலிய கண்காணிப்பாளரையும் யாம் மறவோம்,
சேனைப்படை செவிலியா்களையும் என்றென்றும் யாம் மறவோம்.

வாழ்க பெண்மை,
வளா்க அவா்களின் தனித்தன்மை.

அனைவருக்கும் சா்வதேச மகளிா் தின நல்வாழ்த்துகள்.💐💐💐

அன்புடன்...
க.இளங்கோவன்,
06/03/2023