Thursday, 18 January 2018

இராமேஸ்வரம் திருத்தல புராணம்.

இராமேஸ்வரம் திருத்தல புராணம்.

சிவமய க்ஷேத்ரம்

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

சேதுக்கரை எனும் தனுஷ்கோடி!

வங்கக்கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் தனுஷ்கோடி இங்கு குளித்தால்தான் காசியாத்திரை முடிவுபெறுகி றது என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ராமர் இந்த தனுஷ்கோடிப் பகுதியில் இருந்துதான் இலங்கைக்குப் பாலம் அமைத்துச் சென்றார் என்பதால் இது சேதுக்கரை என்றும் அழைக்கப்படுகி றது. சேது என்ற வடமொழிச் சொல்லுக்குப் பாலம் என்று பொருள்.

இலங்கையில் ராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்ட பிறகு ராமன், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் தங்களது வானரப்படைகளுடன் இந்தச் சேதுப்பாலம் அணை வழியாகத்தான் ராமேஸ்வரத்துக்கு வந்தனர். இவர்களுடன் ராவணனின் தம்பியான வீபிஷணனும் வந்தான். வந்தவன் ராமனிடம் சேது அணையை உடைத்து விடுமாறு வேண்டுகோள் வைத்தான்.

ஸ்ரீராமன், விபீஷணனின் வேண்டுகோளை ஏற்று தன்னுடைய வில்லின் முனையால் (தனுஷ்வில், கோடி முனை) சேது அணையை உடைத்ததால் இவ்விடத்துக்கு தனுஷ்கோடி’ என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபீஷணன் ராமனை சரணாகதி அடைந்த இடமும் தனுஷ்கோடிதான். விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாக முடிசூட்டப் பட்டதும் இங்குதான்.

இந்த சேதுக்கரையைக் காப்பதற்கும் ராமலிங்கத்தைப் பராமரிப்பதற்காகவும் கங்கைக்கரை குகனின் வழிவந்த மாவீ ரர்களை ஸ்ரீராமர் நியமித்தார். அவர்களே சேதுவுக்கு அதிபதியாகி விளங்கிய சேதுபதி என்றழைக்கப்பட்டனர்.

பாதாள அமுதமாகிய சேதுக்கடலும் கயிலாய தீர்த்த மகாசக்தியும் இங்கு ஒன்றாகக் கலக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா ? இது ஓர் அரிய தகவல் மட்டுமல்ல, பிரமிப்புக்குரிய விஷயமும் கூட!

அதாவது சேதுக்கரையின் கடல்நீர் சுமார் இரண்டு லட்சம் மைல்கள் சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கடல் நீரோட்டத்தின் வேகம் அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி தினங்களில் அதிகம் பெறுவதால், அந்த வேகத்தில் கடலின் அடிவரை சுழற்சி கண்டு அடி யிலுள்ள மூலிகைகளின் உயிர்ச்சத்துகளைச் கடலின் மேல் மட்டத்துக்குக் கொண்டு வருகிறது. இந்த மூலிகைகளின் ஜீவசத்துகள் அமிர்தத்துக்கு நிகரானவையாக உள்ளன.

இந்த மாற்றத்தால் உண்டாகும் காந்தசக்தியும் மருத்துவக் குணமும் இந்த உயிர்ச் சத்துகளை போஷித்து வளர்க்கும் உயரிய மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது. அதன் காரணமாகவே இந்தச் சேதுதீர்த் தம் புனிதமாகக் கருதப்படுகிறது. எனவே புனித தீர்த்தமாகிய சேதுவில் நீராடி, அவர்களுடைய பூர்வ புண்ணிய பாவங்களையும் போக்கிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.

ராமேஸ்வரத்திலுள்ள அக்னி தீர்த்தத்தையும் சேது தீர்த்தமாகவே கருதி பக்தர்கள் நீராடுவதும் உண்டு.

தனுஷ்கோடியில் அர்த்தோதயம், மகோதியம் ஆகிய இரு நாட்களிலும் நீராடினால் மிகவும் புண்ணியம். மேலும் இந்த இருதினங்களிலும் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளை இங்கு செய்வதால் இறந்தவர்களுக்கான பாபவிமோசனமாக அமையும் என்ற நம்பிக்கை காலங்காலமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தனுஷ்கோடியில் சேதுமாதவப் பெருமாள் என்ற திருப்பெயரில் ஸ்ரீராமனுக்கு ஓர் ஆலயம் இருந்துள்ளது. வைஷ்ணவர்களால் போற்றப்படும் நூற்றியெட்டு வைணவத் தலங்களுக்கு நிகராகக் கருதப்படுவது இந்த ஆலயம்.

இங்கு ஏற்பட்ட புயலின் காரணமாக இந்த ஆலயமும் கடலில் மூழ்கிவிட்டது. இந்தச் சேது தீர்த்தமும் கடலால் சூழப்பட்டு விட் டதால் ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தத் தைச் சேது தீர்த்தமாக ஏற்றுப் புனித நீராடி வருகிறார்கள் பக்தர்கள்.

அடுத்து நாம் செல்லப்போவது ராமநாத சுவாமி கோயிலுக்குத்தான்.

அலையில்லாத கடலான அக்னி தீர்த்தம் !

கோயிலுக்குள் செல்லும் முன்பாக முத லில் நீராடலுக்கு அக்னி தீர்த்தம்.

ஸ்ரீராமபிரான் சீதையைத் தீக்குளிக்குமாறு ஆணையிட, அதன்படியே கற்பின் கனலான சீதை தீக் குண்டத்தில் இறங்கியபோது, அக்னிதேவனை சீதையின் அந்தக் கற்பு நெருப்பு சுட்டதாம்.

சீதாப்பிராட்டியாரின் அந்த கற்புவெப்பத்தைத் தாங்கமுடியாத அக்னிதேவன் இந்தச் சமுத்திரத்தில் வந்து நீராடி தன்னைத் தகித்த வெப்பத்தைத் தணித்துக் கொண்டான் என்கிறது புராணம்.

ஆம் ஆச்சரியம் தான் ! இங்கே கடல்நீரில் நீராடும்போது இன்றும் கடல்நீர் வெது வெதுப்பாகத்தான் இருக்கிறது. ராமனின் கட்டளைக்கேற்பவே இன்றும் கடலில் அலையே இல்லை.

இந்தக் கடல் மண்ணில் காந்த சக்தி இருப்பதால் இந்த வெதுவெதுப்பு என்கிறார்கள் அறிவியலாளர்கள். அந்த அக்னி தீர்த்தத்தில் நீராடி, இதன் கரையிலேயே பித்ருக்களுக்கான சடங்குகளைச் செய் கின்றனர் பக்தர்கள்.

அக்னி தீர்த்த நீராடலை முடித்துக் கொண்டு புறப்பட்டால் அடுத்தது ராமநாத சுவாமி ஆலயம் தான்.

தினந்தோறும் கங்கா அபிஷேகம் : 

ஆலயத்தின் எல்லாத் திசைகளிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம், வங்கக் கடலின் தென்கோடியில் குடிகொண்டு இருக்கும் ராமநாத சுவாமியின் அருளைப் பெற தினந்தோறும் நாடெங்கிலுமிருந்து, கூட்டம் கூட்டமாக வந்து கொண்டேயிருக் கிறார்கள் பக்தர்கள்.

கடவுள் அவதாரமான ஸ்ரீராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட விசேஷம் கொண்டவரல்லவா இந்த ராமநாதர் !

இந்த ராமநாத சுவாமி ஆலயத்துக்குள் புனிதத் தீர்த்தமாகக் கருதப்படும் 22 தீர்த்தங்கள் உள்ளன.

பக்தர்கள் ஒவ்வொருவரும் சந்நிதிக்குப் போகுமுன் இந்தத் தீர்த்தங்களில் நீராடி விட்டு இறைவனைத் தரிசித்து அவரின் அருளாசியைப் பெற வேண்டுமென்பது ஐதீகம்.

இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் ராம லிங்க சுவாமிக்கு அவரின் திருமேனியைத் தீண்டி பூஜை செய்யும் உரிமை அர்ச்சகர்களைத் தவிர மூன்றே பேருக்குத்தான் இருக்கிறது.

ஜகத்குரு ஸ்ரீசிருங்கேரி மகாசந்நிதானம், ஜகத்குரூ ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி கள் மற்றும் ராமபிரானின் ரவி குல வழித் தோன்றலாகக் கருதப்படும் நேபாள மன்னர் ஆகிய மூவர்தான் இந்தப் பெருமை பெற்றவர்கள்.

இங்கு இறைவனின் சந்நிதியில் பூஜை செய்பவர்கள் ஸ்ரீ சிருங்கேரி மகாசந்நிதானத்திடம் சிவாச்சாரிய தீட்சை பெற்ற கர்நாடக மாநிலத்து அந்தணர்கள்.

கோயிலில் ஸ்ரீ ராமநாத சுவாமிக்குத் தினந் தோறும் கங்கை நீரால்தான் அபிஷேகம் நடைபெறுகிறது. இறைவனின் இந்த அபிஷேகத்துக்காக வடநாட்டு பக்தர் ஒருவர் தவறாமல் கங்கை நீரை மிகப் பெரிய அளவில் சீலிட்டு ராமேஸ்வரத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஸ்ரீராமநாத சுவாமி ஆலய மேற்கு வாசல் கோபுரம் மிகக் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. கோயிலைச் சுற்றிலும் உயர்ந்த மதிற்கூவர். இந்த உயர்ந்த மதில் சுவர்கள் கிழக்கு மேற்காக 865 அடி நீளமும் தெற்கு வடக்கில் 657 அடி அகலமும் உடையது.

கருங்கற்களைக் கொண்டு அமைக்கப் பட்ட மேற்கு கோபுரம் 78 அடி உயரம்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமநாதபுர அரசர் உடையான் சேதுபதியும் நாகூரைச் சேர்ந்த வைசியர் ஒருவரும் இணைந்து இந்த மேற்கு கோபுரத்தையும் மதில் சுவரையும் நிர்மாணித்திருக்கிறார்கள்.

தெற்கு மற்றும் வடக்குக் கோபுரங்கள் காஞ்சி ஸ்ரீ சங்கரமடத்திலிருந்து கட்டப்பட்டுள்ளன.

கேழ்வரகின்( கேப்பை) பயன்கள்...

அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில், சர்வதேச அளவில் இன்றைக்கு கேழ்வரகுதான் 'நைட் வாட்ச்மேன்’. அப்படி என்ன கேழ்வரகுக்குச் சிறப்பு?

ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை... இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, அடிப்படையில் அரிசியைப் போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் உணவு தானிய மாகும். இட்லி, தோசை, இடியாப்பம் என நெல் அரிசியில் செய்யும் அத்தனை பண்டங் களையும் இதிலும் செய்ய முடியும். ஆனால், நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவை இல்லை. இதில் விவசாயிகளுக்கு நன்மை இருக்கிறது சரி; சாப்பிடும் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? இருக்கிறது... உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக் காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான் இதன் முதல் விசேஷம். கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனாலேயே உர நிறுவனங்களின் பாச்சா, கேழ்வரகில் அதிகம் பலிக்கவில்லை என்பதால், எந்தக் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியமாக நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம். . பாரம்பரிய சிறுதானியமான கேழ்வரகில் உள்ள சிறப்புகள்பற்றி தொடர் ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் கிருஷ்ண பிரசாத் கேழ்வரகைப் பற்றிச் சொல்லும் தகவல்கள் பிரமிக்க வைக்கின் றன.

''கேழ்வரகு பிறந்த இடம் தமிழகம் அல்ல என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் தமிழக நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடை யது கேழ்வரகு. இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி கேழ்வரகுக்கு இருக்கிறது. நாட்டுக் கேழ்வரகிலேயே வெண்ணிறக் கேழ்வரகு, கறுப்புக் கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, மூன்று மாதக் கேழ்வரகு, தேன்கனிக்கோட்டைக் கேழ்வரகு என்று ஏறத்தாழ 60 வகைகள் இருக்கின்றன. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் கேழ்வரகுத் திருவிழா எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது'' என்கிறார் கிருஷ்ண பிரசாத்.

அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங் களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம் (பார்க்க அட்டவணை). பாலைக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ் வரகில் உண்டு. ஆனால், பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும். இதனாலேயே எல்லோருக்கும் நல்ல தானியம் கேழ்வரகு என்றாலும், வளரும் குழந் தைகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் மிகமிக அவசிய மான உணவு கேழ்வரகு.

குழந்தை ஒரு வயதைத் தொடும்போது கேழ் வரகை ஊறவைத்து முளைகட்டி, பின் உலர்த்திப் பொடி செய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுத் தால், சரியான எடையில் குழந்தை போஷாக்காக வளரும். ஆந்திர மாநிலத்தில் வறுமையில் பீடித்திருந்த கிராமங்களில் இந்திய முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வரை உள்ள - மெலிந்துபோன நலிந்த ஊட்டச் சத்து இல் லாத குழந்தைகளுக்கு - இந்த முளை கட்டிய கேழ்வரகை தினசரி உணவாகக் கொடுத்து வந்தனர். ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக் குழந்தைகள் உடல் எடையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ''மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான ஊட்டச் சத்தை வழங்க கேழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும் கிடையாது'' என்றார்கள் அந்த அமைப்பினர்.

ஒரு முறை மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டுக்கு ஒரு கருத்தரங்குக்காகச் சென்று இருந்தேன். மதிய விருந்தில், தட்டில் பரிச்சயம் இல்லாத பல ஜந்துக்கள் கறி மசாலா வாடை இல்லாமல் கவிழ்ந்துகிடந்தன. கொஞ்சம் பயத்தில் தலை சுற்றிய நிலையில், 'எங்காவது கொஞ்சம் சோறு தென்படுகிறதா?' என்று தேடிப் பார்த்தபோது, ஹாலிவுட்டின் வில் ஸ்மித் மாதிரி இருந்த ஓர் ஆப்பிரிக்க நண்பர், ''இதைச் சாப்பிடுங்க...' என்று ஒரு குவளையில் கஞ்சி கொடுத்தார். இஃப்தார் நோன்புக் கஞ்சி மாதிரி இருந்த அந்தக் கஞ்சியைக் கொஞ்சம் தயக்கதுடன் நான் உறிஞ்சினால், அட, நம்ம ஊர் கேழ்வரகுக் கஞ்சி! 'இது எங்கள் ஊர் தானியம். எங்க பாட்டன் சொத்து. எங்களுடைய சிக்ஸ் பேக் உடம்புக்கும் சிறுத்தை மாதிரி ஓட்டத்துக்கும் இந்தக் கஞ்சிதான் காரணம்' என்று சொன்னார் அந்த நண்பர். கேழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில்தானாம். அதிக விலை இல்லாத ஊட்ட தானியமான இது தான் இன்று வரை வறுமை யில் வாடும் தெற்கு சூடான், செனகல், பெனின் போன்ற ஆப்பிரிக்க நாட்டின் பிர தான உணவு. இன்றைய ஒலிம்பிக்கில் கால்பந்திலும் ஓடுகளப் போட்டிகளில் வில் எனப் பறக்கும் வேகத்துக்கும் கேழ்வரகின் கால்சியமும், அதில் உள்ள அமினோ அமிலங் களும்கூட காரணம் என்றால் அது மிகை யாகாது.

கேழ்வரகில் 'மித்தியானைன்’ எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது இதன் கூடுதல் சிறப்புக்குக் காரணம். தனியாக இந்த 'மித்தியானைன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பேணவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த 'மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இந்த 'மித்தியானைன்’கொண்ட கேழ்வரகு பெரி தும் உதவும். அதற்காக நாளைக்கே கடைக்குச் சென்று, இந்த 'மித்தியானைன்’ கேப்சூல்ஸ் இருக்கிறதா என்று தேடாதீர்கள். தனியாக 'மித்தியானைன்’ புரதத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு என்று சொல்கின்றனஆய்வு கள். ஆதலால், மொத்தமாக 'மித்தியானைன்’ உள்ளடக்கிய கேழ்வரகை, கூழாக, அடையாக, தோசையாகச் சாப்பிட்டுப் பழகுங்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம்... சமீபத்திய ஆய்வுகளில் மூட்டு வலி முதல் ஆண்மைக் குறைவு வரை பல நோய்களுக்குக் கேழ்வரகு உணவு நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு. இனிமேலும் கேழ்வரகைத் தவிர்ப்பீர்களா என்ன?

- பரிமாறுவேன்...

தித்திப்பால்!

கஞ்சியில் தொடங்கி தோசை, இட்லி, பொங்கல், அடை, புட்டு, இடியாப்பம், களி, கூழ், ஊத்தாப்பம் வரை கேழ்வரகில் சமைக்கலாம். சரி, விசேஷமாக ஒரு அயிட்டம்? கேழ்வரகுத் தித்திப்பால்!

கேழ்வரகை ஊறவைத்து, பால் எடுத்து, அதில் பனைவெல்லம் சேர்த்து கஞ்சி காய்ச்சி, அதில் கொஞ்சமே கொஞ்சம் நெய்யோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்தால், அது கேழ் வரகுத் தித்திப்பால். குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாமல் போகும்போது, ஏழாம் மாதத்தில் திட உணவைத் தொடங்குவது வழக்கம். அந்தப் பருவத்தில் இருந்து உணவில் இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கேழ்வரகு சாப்பிடுவது சிலருக்கு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கலாம். ஆகையால், கேழ்வரகு உணவுடன் குளுமைக்காக பாலோ, மோரோ, நெய்யோ சேர்த்துச் சாப்பிடுவது நல்லது!

Wednesday, 17 January 2018

துளசியின் மகிமை...

துளசியை பாலுடன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை  நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

1 டம்ளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், உடலின் வெப்பதை குறைத்து,  காய்ச்சலை விரைவாக குறைக்கிறது.

துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இதயத்தின் நலனை ஊக்குவித்து,  இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் நன்றாக சென்று வருவதற்கு உதவுகிறது.

சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை குறைத்து, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

துளசி, பால் கலந்த பானத்தில் உள்ள சிறந்த டையூரிடிக், யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து சிறுநீரகத்தில் கற்கள்  உண்டாவதையும், அதை கரைக்கவும் உதவுகிறது.

சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத்  தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை  தடுக்க உதவுகிறது.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து  பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

சூடான பாலில் துளசி கலந்து குடிப்பதால், அது தொண்டை கரகரப்பு, சளி, வறட்டு இருமல் மற்றும் தலைவலி போன்ற  பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

துளசி.
-----------

மருத்துவர்கள் வெறும் மருத்துவர்களாக மட்டும் அல்லாமல். மனோ தத்துவ நிபுணர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு அம்மாக்கு புற்று நோய் மிக முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. அவங்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யபட்டது. ஆனால். அந்த அம்மாவை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்.  உங்களுக்கு என்ன தான் ஆபரேஷன் பண்ணாலும்….. ரொம்ப. அது உங்களுக்கு முற்றி போனவுடன் தான்.  ஆபரேஷன் பண்ணியிருக்கு. அதனால. நீங்க அதிக பக்ஷம் இன்னும் 3 மாதங்கள் தான் உயிரோடு   இருப்பீங்கனு. அந்த மருத்துவர் சொல்ல. அதை கேட்டு பயத்தாலேயே தினம், தினம் அவுங்க செத்து கொண்டு இருந்தார்கள்.

எனது நண்பர்  பில்டர் சதீஷ் சொன்னதின் பேரில். நான் அவங்களை நேரில் சென்று பார்த்து கவுன்சிலிங் கொடுத்து. தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய  துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவங்களுக்கு சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரை தெரியுமா. உலகின் மிக கொடிய நோயான பயத்தை.

  இப்பொழுது அந்த அம்மா. பயபடுவதே இல்லை. நான் கூறியபடியே. தினமும் முதலில் துங்கி எழுந்தவுடன். அவுங்க. சிரித்த முகத்துடன் கண்ணாடியை பார்கிறார்கள். எனக்கு இன்றிலிருந்து எல்லாம் நன்றாகவே இருக்கும். நான் நீண்ட நாள் வாழுவேன் என்று உரக்க. தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள். பிறகு பத்து  நிமிடம் வஜ்ராசனம். அதை செய்த பிறகு. வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் இருந்து துளசி நீரை எடுத்து  அருந்துகிறார்கள். உடல், மனம் இரண்டுமே ஆரோக்யமாக இப்பொழுது அவங்களுக்கு இருக்கு.

சென்ற 2015  ஏப்ரல் மாதம் அந்த அம்மாவிற்கு மருத்துவர் 3 மாதம் கெடு விதித்தார்.

இன்றுவரை அந்த அம்மா ஆரோக்யமாக இருக்காங்க.
மரபணு மாற்றப்பட்ட காய்கள், பழங்களை தெரிந்தோ, தெரியாமலோ நாம் உண்பது புற்று நோய் வருவதற்கான முக்கிய காரணம். வடக்கே பல இடங்களில் புற்று நோயாளிகளுக்கு என்று தனியாக சிறப்பு ரயில் விடும் அளவு புற்று நோயாளிகள்  அங்கு இருக்கிறார்கள்.

புற்று நோய் என்று அல்ல. 448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி.

துளசியின் மகத்துவம் பாப்போம்.

ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம்   ஊர வைக்க  வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். ஆரம்ப  நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய்  மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட  உண்மை.

சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம்.

ஏன்? செம்பு பாத்திரம்.

தாமிர சக்த்து  [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு  சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குனப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி  செய்யும் சக்தி தாமிரத்திர்க்கு  உண்டு. தாமிர பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே.  உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர்.
  துளசி நீர், புற்று நோயை குணபடுத்தும் என்று சித்த மருத்துவமோ, ஆயுர் வேத மருத்துவமோ. சொல்லியிருக்கா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீ சொல்லும் இந்த செய்தி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா? கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பண்ணி சரி பண்ண. புற்று நோய் ஒன்னும் bp, சுகர்  அல்ல. அது ஆட் கொல்லி நோய். என்று. உங்களில் பலர்  கேட்பது புரிகிறது. உங்களது கேள்வி. மிக நியாயமானதும் கூட. துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் கீழே.

http://www.ndtv.com/india-news/tulsi-enters-us-lab-to-fight-cancer-548197
Tulsi  Cures  Cancer  என்று google ளில் டைப் செய்து பாருங்கள். இதே போல். பல ஆய்வுகளின் முடிவை google  சொல்லும்.

வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும்
தினமும் ஒரு டம்ப்ளர் துளசி நீரை பருகுங்கள். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்யத்திற்கு அவ்வளவு நல்லது.