Monday, 23 November 2020

சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்ல கூடாது?ஆண்கள் மட்டுமே தான் செல்ல வேண்டும்...! 

சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்ல கூடாது?ஆண்கள் மட்டுமே தான் செல்ல வேண்டும்...! 

அதர்வண வேதத்தில் மாபெரும் தேர்ச்சி பெற்ற , சபரிமலை  ஐயப்ப சமஸ்தானத்தில் பூஜை செய்யும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த என் அன்பு நண்பர் கிருஷ்ண சுவாமி நம்பூதிரிகள் கடந்த முறை இலங்கையில் எனது அழைப்பை ஏற்று களுதாவளை ருத்ர வேள்விக்கு வருகை தந்தார். அந்த சமயம் அவர் என்னுடன் ஐயப்பனின் விரத  மஹிமை பற்றி  பேசிய போது அவர்கள் சொன்ன ரகசியங்கள் எல்லாமே என்னை வியக்க வைத்தது. இன்று அந்த விடயங்களை நம் சித்தர்களின் குரலில் ஆழமாக பகிர்கிறேன்.....

பந்தள தேச மன்னரின் வளர்ப்பு மகனே மணிகண்டன், இவன் தனது 12 வயதிலேயே வேத சார்ஸ்த்திரங்கள், புராணங்கள், வில், வாள் வித்தை, கம்பு, சிலம்பம், களரி போன்ற அனைத்து கலைகளையும் கற்றுத்தேர்ந்த மாவீரனாய் திகழ்ந்தான். இவன் வாள், வில் வித்தை மற்றும் களரியில் வல்லவன்.

தனது அவதார நோக்கமான மகிசமூகி என்னும் அரக்கியை வதம் செய்த பிறகு, தான் நைஸ்ட்டீக பிரம்மச்சாரியாக (உச்சகட்ட பிரம்மச்சரியம்) தவம் செய்ய சென்ற இடம் தான் சபரிமலை.

சபரிமலை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு திருத்தலம். இது ஒரு தாந்த்ரீக் கோவில். இங்கு பூஜை செய்பவரை தாந்த்ரீகள் என அழைப்பர். இவர்கள் அதிகம் முத்திரைகளை பயன்படுத்துவர். அதாவது அதிகம் அறிவியலை பின்பற்றும் ஒரு கோவில்.

மற்ற கோவில்கள் போல் இது வருடம் முழுக்க இயங்காது. கார்த்திகை மாதம் துவங்கி தை மாதம் வரை தான் நடை திறக்கப்படும். இந்த நாட்களிலும் அனைவரும் சாதாரணமாக சென்று விட முடியாது.

ஐயப்பனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இரு முடி கட்டி தான் செல்ல வேண்டும். இதற்கு துளசி மணி மாலை, தாமரை மாலை மற்றும் ருத்ராட்ச மாலை பயன்படுத்துவர்.

48 நாள் கடைப்பிடிக்க வேண்டிய விரத விதிமுறைகள்!
************************************************************

1 - தினம் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். மாலையும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளித்த பின் ஐயனின் வழிபாட்டை மேற்கொண்ட பின் உணவு உட்கொள்ள  வேண்டும்.

2 - மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும், எப்பொழுதும் ஐயனையே நினைத்து சரணங்களை சொல்லி வர வேண்டும். இழி சொற்களை உதிர்க்கக்கூடாது.

3 - பாய், தலையணை, மெத்தைகளை பயன்படுத்த கூடாது. தரையில் தூய்மையான ஒரு பருத்தி துணி விரித்து அதன் மேல் தான் உறங்க வேண்டும்.

4 - அசைவம் உண்ணக்கூடாது, மது புகை போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்த கூடாது, முடி வெட்டவோ, முகச்சவரம் செய்யவோ, நகம் வெட்டவோ, தன்னை அலங்காரம் செய்யவோ கூடாது.

5 - இது ஒரு மிக முக்கிய கட்டுப்பாடு, பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது இல்லறத்தில் ஈடுபடக்கூடாது. திருமணம் முடிக்காதோரும் சரி திருமணம் முடித்தோரும் சரி தனது சுக்கிலத்தை வெளிப்படுத்தக்கூடாது.

6 - வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலம் வந்தால் அவர்களை பார்க்காமல் இருக்க வேண்டும், அருகில் செல்லக்கூடாது. தொட்டுப் பேசக்கூடாது.

7 - பிறர் வீட்டில் உண்ணவோ உறங்கவோ கூடாது. கடைகளில் உண்ணக்கூடாது. அதிக காரம் மசாலா கலந்த உணவுகளை உண்ணக்கூடாது. உப்பு, புளி, காரம் மிதமாகவே பயன்படுத்த வேண்டும். பசித்தால் பழங்கள் காய்கனிகள் கொட்டை பருப்புகள் போன்ற இயற்கை உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும்.

8 - அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது.

9 - ஒரு வேலை மணி மாலைகள் அறுந்தால் அதை சரி செய்து மீண்டும் அணியலாம். அதில் எந்த தவறும் இல்லை.

10 - காலணிகளை அணியக்கூடாது.

ஐயப்பனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளே இவைகள்.

48 நாள் கடும் விரதத்தின் நன்மைகள் !
******************************************

1 - ஆண்களுக்கு வரும் Azoospermia (விந்தணு பூஜ்ஜியம் ஆகும் இருக்கும் நிலை), விந்தணு நீர்த்துப்போதல் போன்ற மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு அதிக உடற்சூடு ஒரு முக்கிய காரணம். இப்பொழுது பலர் இதற்கு இலட்ச இலட்சமாய் செலவழித்து வைத்தியம் பார்ப்பதை நீங்களே அறிவீர்கள். உடல் சூட்டைக்கூட விந்தணுவால் தாங்க முடியாது என்பதனாலே தான் இறைவன் சற்று உடலை விட்டு தள்ளி விதைப்பையை படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்களா ! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உடலில் தேங்கிய உள்ள அதிகப்படியான உஷ்ணம் குறைகிறது. அதுமட்டும் அல்லாமல் பிரபஞ்ச சக்தி அந்நேரத்தில் அவனுக்கு அபரிதமாக கிடைக்கிறது. அவன் உடல் எலும்புகள் வரை ஊடுருவி இருந்த அதிகப்படியான வெப்பம் இந்த குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது படிப்படியாக குறைந்து விந்தணு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வெளி வர பேருதவி புரிகிறது.

2 - மனதை அமைதியாக வைத்துக்கொண்டு இறை சிந்தனையில் இருக்கும் போது அவனது உடலில் உள்ள அனைத்து ராஜ உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கிறது. மனதை சரியாக வைத்துக்கொள்வதன் மூலம் ஆழ்ந்த தூக்கம் வந்து அவன் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிறது. மேலும் தீஞ்சொற்களை பேசாமல் இருப்பது மூலம் அவனை சுற்றி நேர்மறை சக்திகள் அதிகரிக்கின்றன.

3 - தரையில் பருத்தி துணி விரித்து தலையனை வைக்காமல் படுப்பதன் மூலம் இரத்த ஓட்டங்கள் சீர் பெறுகின்றன. உடற்சூடு அதிகம் ஆகாமல் இருக்கும். பூமிக்கும் உடலுக்கும் உள்ள மின்காந்த சக்திகள் சமநிலைபெறும்.

4 - அசைவம் உண்ணாமல் போதைப்பொருள் பயன்படுத்தாமல் இருக்கும் போது அவனது உடலில் உள்ள கல்லீரல் பலம் பெருகிறது. இதனால் அவனது Body metabolism சீர்பெறுவதுடன், கோபம் குறைந்து எடுத்த செயல் யாவினும் தெளிவானதொரு முடிவு எடுக்க முடிகிறது. 48 நாள் போதை பொருட்களை பயன்படுத்தாமல் விட்டால் எளிதில் அவன் போதை பழக்கம் போன்ற அனைத்து தீய பழக்கங்களில் இருந்தும் வெளி வர முடியும். இதற்காக ஐயப்பனுக்கு மாலை போட பரிந்துரை செய்யும் மருத்துவர்களும் உண்டு.

5 - பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்கும் போது, அதாவது இல்லறத்தில் ஈடுபடாமல் இருக்கும் போது, சுக்கிலம் வெளிப்படாமல் இருக்கும் போது, காம எண்ணத்தினுள் நுழையாமல் இறை சிந்தனையுடன் மட்டுமே இருக்கும் போது உச்சி முதல் பாதம் வரை உள்ள அவனது அனைத்து அவயங்களில் உள்ள செல்களும் புதுப்பிக்கப்பட்டு நல் சிந்தனை, ஆரோக்கியமுடைய புது மனிதனாய் உரு மாறுகிறான். இதனால் Azoospermia போன்ற அனைத்து விந்தணு குறைபாடுகளும் குணமாகி குழந்தையின்மை என்ற பேச்சுக்கே இங்கு இடம் இல்லாமல் போகும். வருடத்தில் ஒரு மண்டலம் தன்னை சீர்படுத்திக்கொள்வதால் வருடம் முழுக்க அவனால் இல்லறத்தில் ஆரோக்கியமாக ஈடுபட முடியும். இல்லறம் நல்லறமாக இருக்கும் போது எப்பொழுதும் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியுமே நிலவும். அனைத்திற்கும் மேலாக பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பவனுக்கு பிறக்கும் குழந்தை முன்னோர்களின் திறமைகளை தனது மரபணுவில் கொண்டு தெளிந்த அறிவுடைய தெய்வீக அம்சம் பொருந்திய குழந்தை பிறக்கும்.

6 - வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலம் வந்தால் அவர்களை பார்க்க கூடாது, நெருங்க கூடாது, தொட்டு பேசக்கூடாது. மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் காந்தம் போன்றவர்கள் இவர்களால் பிறர் சக்தியை எளிதாக ஈர்த்துக்கொள்ள முடியும். எனவே ஒரு ஆண் அருகில் வந்தாலோ தொட்டாலோ இவனது சக்திகள் குறைந்துவிடும் என்பதால் இதை சொன்னார்கள்.

7 - பிறர் வீட்டில் உண்ணாமல் உறங்காமல் இருக்கும் போது, அவர்களுக்கு நல்ல உணவே கிடைக்கும், நல்ல சக்திகள் அவரது வீட்டினுள்ளேயே தங்கும். மசாலா உணவை தவிர்ப்பதன் மூலம் காம இச்சைகள் கட்டுப்படும்.

8 - அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும் போது, இவன் வளர்த்து வந்த பிராண சக்தி விரையம் ஆகாமல் இருக்கும்.

9 - துளசி மணி மாலைகள், தாமரை மாலைகள், ருத்ராட்சங்கள் இவனது காம உணர்வை கட்டுப்படுத்தும்.

10 - 48 நாள் காலணிகளை பயன்படுத்தாமல் இருக்கும் போது. இவனது பாதம் பூமிப்பந்தின் மீது நேரடியாக படும். இதன் மூலம் பூமிக்கும் இவனுக்கும் உள்ள மின்காந்த ஓட்டம் சீர்பெறும், நிலம் பஞ்சபூத சக்தி இவனது உடலில் அதிகரிக்கும் வயிறு, மண்ணீரல் சீராக இயங்கத்துவங்கும். மேலும் வெறும் காலில் நடப்பது மூலம் பாதத்தில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு உச்சி வரை இரத்த ஓட்டமும் சக்தி ஓட்டமும் சீர் பெற்று ஒரு முழுமையான ஆரோக்கியம் நிறைந்த மனிதனாக இவனால் வாழ முடியும்.

48 நாள் இந்த கடும் விரத முறைகளை கடைப்பிடிபதன் மூலம் ஆண்களுடைய Testosterone Harmone சீர் பெற்று, அவனின் ஆண் தன்மை அதிகரிக்கிறது. Azoospermia போன்ற அனைத்து விந்தணு குறைபாடுகள் சரியாகிறது. அது மட்டுமா இவனால் அறிவில் சிறந்த மரபு திறமைகளை ஜீன் வழியே பெற்ற வீரம் செரிந்த அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும்.

இப்படி ஐயப்ப வழிபாடு முழுக்க முழுக்க ஆண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.  அவனது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரமான விதை இருந்தால் தானே செழிப்பான விருட்சம் வளரும் !

இப்படி ஆரோக்கிய வித்து இருந்தால் தானே ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும்.

லட்சக்கணக்கான ஆண்கள் மட்டும் ஒரே இடத்தில் இருப்பதால். இவர்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கும். Testerone Harmone குறைபாடு உள்ளவர்களுக்கு இது அதிகரித்து பிரச்சனைகள் தீரும். ஆண்களின் ஆன்ம பலம் அதிகரிக்கும்.

ஐயப்பனை பம்பை நதிக்கரையில் எடுத்து வளர்க்கத் துவங்கிய பின் தான் பந்தள மன்னர் ராசசேகரனுக்கே குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி பெண்களை ஏன் அனுமதிப்பதில்லை என அவரிடம் நான் கேட்ட போது என் குரு என்ன சொன்னார் தெரியுமா?

ஆயிரம் ஆண்டுகளாகவே இங்கு பெண்களை அனுமதிப்பதில்லை.

200 ஆண்டுகளுக்கு முன்பே 1816 ல் பென்ஜமீன் ஸ்பயன் பர்டு, பீட்டர் அயர் கார்னர் என்ற இரு ஆங்கிலேய ஆய்வாளர்கள் திருவிளாங்கூர் கொச்சி மாகாணங்களில் கள ஆய்வுகளில் ஈடுபட்டு மக்களின் கலாச்சாரம் பாரம்பரியத்தை  MEMOIR OF THE SURVEY OF THE TRAVANCORE AND COCHIN STATES என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள். அதில் சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். பூப்பெய்தலுக்கு முன் பேரிளம் பெண்ணிற்கு பின் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக பதிவு செய்துள்ளார்கள். கேரள அரசும் இதை அங்கிகரித்து முக்கிய சாசனமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

அதாவது 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டும் அனுமதி இல்லை. மற்ற பெண்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை. பூப்பெய்தல் முன் பருவமும் பேரிளம் பெண்ணிற்கு பின் பருவமும் அனுமதிக்கிறார்கள். ஒரு பெண்ணின் கருமுட்டை மாதவிடாய் மூலம் வெளி வரத்துவங்கிய நாட்களில் இருந்து அது நின்று போகும் காலம் வரை அனுமதி இல்லை. இது அவர்களது Fertile காலம்.

சரி இப்பொருது மாதவிடாய் என்றால் என்ன என்று பார்ப்போம். பெண்களுக்கு இரண்டு கருமுட்டை பை உள்ளது. இதில் ஒவ்வொறு மாதமும் வலது பக்கம் இருந்து ஒரு கருமுட்டை இடது பக்கம் இருந்து ஒரு கருமுட்டை வெளியேறும்.

இப்பொழுது கருமுட்டை கருமுட்டைப்பையில் 14 நாட்கள் வளர்கிறது. வளர்ந்த கருமுட்டை felopian tube வழியாக கருப்பையை 7 நாட்களில் அடைகிறது.

இந்த கருமுட்டையை வரவேற்று வளர்க்க தனது உடலில் உள்ள சத்துக்களை எடுத்து சிவப்பு கம்பளம் விரித்து கருப்பை வரவேற்கிறது. இந்த காலத்தில் ஒரு ஆண் விந்தணுவுடன் சேரவில்லை எனில், அந்த சிவப்பு கம்பளத்துடன் அந்த கருமுட்டை 7 நாட்களில் வெளியேறும்.

ஆக மொத்தம் 14 + 7+ 7 = 28 நாட்கள். ஆகவே தான் 28 நாட்களுக்கு ஒரு முறை 3 நாட்கள் மாதவிடாய் காலமாக உள்ளது.

பெண்களை நிலவுடன் ஒப்பிடுவார்கள். நிலவும் மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே தெரியும். நிலவின் ஒளி கருப்பையை வலுவடையச்செய்யும்.

மாதவிடாய் காலத்தில் எப்படி இருக்கு வேண்டும் என பெண்களுக்கு சில வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

1 - இந்த காலத்தில் பெண்கள் காந்தம் போன்றவர்களாய் மாறுவார்கள். இவர்களின் பிராண சக்தி கழிவுகளை வெளி தள்ள மூலாதாரத்தை நோக்கியே செயல்படும். அந்த மூன்று நாள் இவர்கள் Receiving Antenna வாக மாறுவார்கள். தன்னை சுற்றி உள்ள நல்ல சக்திகளாக இருந்தாலும், கெட்ட சக்திகளாக இருந்தாலும் எளிதாக ஈர்த்துக்கொள்வார்கள். எனவே தான் மூன்று நாள் ஓய்வில் ஒரு இடத்தில் இருக்கச்சொன்னார்கள். மாலை நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது என சொன்னார்கள். இந்த காலத்தில் வரும் இரத்த வாடை கெட்ட சக்திகளை ஈர்க்கும் வல்லமை பெற்றது. எனவே தான் வெளியில் சென்றால் கரிகட்டையும் இரும்புத்துண்டும் கொடுத்து அனுப்புகிறோம். இந்த கரித்துண்டும் இரும்பும் கெட்ட சக்திகளை ஈர்த்துக்கொண்டு அவர்களை காப்பாற்றும். இரத்த வாடை மிருகங்களையும் ஈர்க்கும்.

இப்படி இவர்களது உடல் அனைத்து சக்திகளையும் ஈர்க்கும் தன்மையுடன் இருக்கும் போது கோவிலுக்கு வந்தால் அங்கு உள்ள விக்ரக சக்திகளுக்கு சிதைவு நிலை ஏற்பட்டு பிறருக்கு எந்த பலனும் இல்லாமல் போகும் என்பதனாலேயே கோவிலுக்கு செல்லக்கூடாது என சொன்னார்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களின் சக்தியும்(Energy Level) காணாமல் போகும். யாரேனும் இந்த காலத்தில் இவர்களை தொட்டாலோ அருகில் வந்தாலோ அவர்களது உடலில் சக்திகள் குறைந்து ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்பதனாலே தான் யாரையும் தொடக்கூடாது என சொன்னார்கள்.

2 - குளிக்க கூடாது. குளித்தால் வெப்பம் குறைந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. பின் அது உள் தங்கி கட்டிகளாக மாறிவிடும்.

3 - சணல் சாக்கில் உறங்க வேண்டும். இது வெப்பத்தை பாதுகாத்து கழிவுகளை முழுமையாக வெளியேற்ற உதவி புரியும்.

4 - தனியாக பொருட்களை பயன்படுத்தியதும், சக்தி நிலையில் யாருக்கும் எந்த மாற்றமும் ஏற்படாமல் அனைவரும் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே தான்.

5 - எந்த வேலையும் செய்யாமல் ஓய்வில் இருக்கும் போது இயக்க சக்திகள் அவர்களது கருப்பைக்கு சக்தியை கொடுத்து கழிவுகளை முழுமையாக வெளியேற்றும். ஓய்வில் இல்லாமல் வேறு வேலைகளில் இருந்தால் கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் pcod pcos போன்ற பல்வேறு நீர்கட்டிகளாக மாறும். இதை கழிவுகள் என்று சொல்ல முடியாது. அந்த கருமுட்டையை வளர்த்த உடல் சேகரித்து வைத்த ஊட்டப்பொருட்கள் எனலாம்.

இன்னும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விதித்த அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் அறிவியல் காரணங்கள் உண்டு. இது அனைத்தும் அவர்களது நன்மைக்காகவே என்பதை நமக்கு மறைத்துவிட்டார்கள். 

சபரிமலைக்குபெண்களைஅனுமதித்தால் !
***********************************************

இப்படி சபரிமலையில் ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வழிபாட்டு முறையில் பெண்களை அனுமதித்தால், பெண் உடலில் ஆண் Harmone அதிகரித்து அப்பெண்ணிற்கு குழந்தை பிறக்காமல் போகும்.

லட்சக்கணக்கான ஆண்கள் ஒன்று சேரும் கூட்டத்திற்குள் பெண்களை அனுமதித்தால் ஆண்களின் ஆன்ம பலம் சீர்குலைக்கப்படும். ஆண் சக்தியின் வீரியம் குறையும். ஆண்கள் எதற்காக செல்கிறார்களோ அதன் பலன் கிடைக்காமல் போகும்.

பெண்களை சபரிமலைக்குள் அனுமதித்தால் ஆணின் ஆண் தன்மை சீர்குலையும். பெண்ணின் பெண் தன்மை சீர்குலையும்.

மற்ற ஆயிரம் காரணம் சொல்லப்பட்டாலும் இதுவே முதன்மை காரணம்.

இப்படி ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட வழிபாட்டு முறையை கொண்ட கோவிலுக்கு பெண்கள் ஏன் செல்ல வேண்டும்? பெண்கள் மட்டுமே அனுமதிக்கும் பல கோவில்கள் நமது நாடு முழுவதும் உள்ளது. கேரளாவில் கண்ணனூர் அருகில் தளிம்பரம்பா என்று இடத்தில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி, ஆண்களுக்கு அனுமதி கிடையாது.

ஒரிசாவில் கேந்திரபாதா என்னும் இடத்தில் சதபையா என்னும் கிராமத்தில் மஞ்சுபாரதி கோவிலில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. இங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் ஒரு மலைக்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.

மற்ற மதத்திலும் இது போல் வழிமுறைகள் உள்ளது! மும்பையில் உள்ள ஹாஜி அலி என்ற மசூதியில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. இது போல் இமயம் முதல் குமரி வரை லட்ச உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்னமும் நாடு முழுவதும் ஆண்களை மட்டும் அனுமதிக்கும் கோவில், பெண்களை மட்டும் அனுமதிக்கும் கோவில் இலட்சக்கணக்கில் உள்ளது.

நமது கலாச்சாரத்தை அழித்தொழிக்க மெக்காலே கல்விமுறை போட்ட திட்டத்தின் நீட்சியே இது ! இந்த நொடி வரை கலாச்சார சீரழிவு அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.

நம்மை அழிக்கத்துடிக்கும் உலகவல்லாதிக்க தீய சக்திகளுக்கு இவை எல்லாம் நன்றாக தெரிந்ததால் தான் சில வெளிநாட்டு அமைப்புகள் மூலம் இயங்கி பெண்களுக்கு அனுமதி பெற்றுத் தந்து கொஞ்ச நஞ்சம் மிச்சம் இருக்கும் ஆண்மையையும் காயடிக்க முயற்சி செய்கிறார்கள்.

PETA விற்கு நமது காளைகள் மேல் என்ன அக்கறை வந்ததோ அதே அக்கறை தான் இன்று நம் பெண்கள் மீது வந்துள்ளது.

இவர்களின் நோக்கம் ஆணின் ஆண் தன்மையையும், பெண்ணின் பெண் தன்மையையும் குறைத்து இருவரையும் மலடாக்க வேண்டும். சில நாட்களுக்கு முன் வந்த LGBT சட்டம், பெண் வேறு ஒரு ஆணுடன் இருந்தாலும் குற்றமல்ல போன்ற தீர்பை பெற்றதும் இவர்கள் தான்.

மேல் இடத்தில் இருந்து உத்தரவு வந்தாலும் பெண்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என பூஜைகளை நிறுத்திவிட்டு 18 படிக்கட்டின் கீழ் அமர்ந்து வழி மறித்த தந்த்ரீகளுக்கு எனது பாராட்டுக்கள்.

உச்சநீதி மன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னும் பெண்கள் படியில் கால் வைக்க முயன்றால் சபரிமலை மூடப்படும் என்ற பந்தள மன்னர் உத்தரவிற்கு தலை வணங்குகிறேன்.

ஒரு ஆண் நன்றாக இருந்தால் தான் குடும்பம் நன்றாக இயங்கும். பெண்கள் நன்றாக இருக்க முடியும்.

பெண்கள் செல்லக்கூடாது என்று சொன்னது ஒரு ஆண் வீரமும் வீரியம் பொருந்திய ஆணாக இருந்து அடுத்த தலைமுறையை அறிவிற்சிறந்த வீரம் பொருந்திய தெய்வீக குழந்தையை உருவாக்கவே!

இப்படி ஒரு குழந்தை வந்துவிடக்கூடாது என்று பயந்து போன உலக வல்லாதிக்க தீய சக்தி தான் இதை சீர்குலைக்க திட்டமிட்டு காய் நகர்த்திவருகிறது.

ஒரு சமூகத்தின் மிகச்சிறந்த வாழ்வியல் முறைக்கு கட்டுப்பாடுகள் இன்றியமையாதவை, இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றால் மனிதன் மனிதனாக இருக்க மாட்டான். நாடு நாடாக இருக்காது.

எனவே இந்த நாடு ஒழுக்கம் நிறைந்த நல்வழிப்பாதையில் பயணிக்க உண்மையான ஆன்மீகம் ஒன்றே, ஒரே வழி ! சிறந்த வழி !

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
                                   - குறள் 131

நமது உயிரை விட ஒழுக்கத்தை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். இப்பேர்பட்ட பரம்பரையில் வந்த நாம், நம் முன்னோர்களின் கட்டுப்பாடுகளுக்கு அடிபணிந்தே நடக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு பாடல் ஞாபகம் வருகிறது

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது!

நம் முன்னோர்கள் ஏன் பெண்கள் செல்லக்கூடாது என்று சொன்னது பெண்களின் நன்மை மற்றும் சமூகத்தின் நன்மைக்கும் சேர்த்தே என இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Sunday, 22 November 2020

உலகம் முழுவதும் பிரபலமாகும் இந்து பாரம்பரிய பெருமைகள்!!!

உலகம் முழுவதும் பிரபலமாகும் இந்து பாரம்பரிய பெருமைகள்!!!

1)சோவியத் ரஷ்யாவின் ஒரு ஊர்தான் செர்னோபில். இங்கே இருக்கும் அணுவுலை கசிந்து அணுக்கதிர்வீச்சு அந்த ஊர் முழுக்கப் பரவ ஆரம்பித்தது.

அந்த அணுக்கதிர் வீச்சை கட்டுப்படுத்துவதற்கு நம்முடைய பாரத நாட்டிலிருந்து உப்பு கலந்த மாட்டுச் சாணமும் கோமியமும் டன் கணக்கில் சேகரிக்கப்பட்டு விமானங்களில் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தன.இதன் மூலமாக அணுக்கதிர்வீச்சு உலகம் முழுக்க பரவாமல் தடுக்கப்பட்டது.

2)அமெரிக்க உணவு கழகத்தினர் உலகம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஜாதி அல்லது சமுதாய மக்கள் காலம் காலமாக சாப்பிட்டு வரும் உணவு வகைகளை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்கள்.  நூறு வருடங்களாக இந்த ஆராய்ச்சி தொடர்ந்தது.

நாம் வாழ்ந்து வரும் பூமியில் ஆறுமாதம் பகலும் ஆறுமாதம் இரவும் உள்ள நாடுகள் வட ஐரோப்பாவில் உள்ளன.

மழையே பெய்யாத நாடுகள்  பாரசீக வளைகுடா பகுதியிலும் வடக்கு ஆப்பிரிக்கா கண்டத்திலும் இருக்கின்றன .

வருடத்தில் ஒன்பது மாதங்கள் குளிரும் பனியும் மட்டும் உள்ள நாடுகளும் உள்ளன.

எல்லா நாடுகளிலும் வாழும் எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான சரிவிகித சத்துக்கள் உள்ள உணவு இந்த பூமியில் எங்காவது, யாராவது ,காலம் காலமாக சாப்பிட்டு  வருகிறார்களா? என்பதை ஆராய்ச்சி செய்வது தான் அமெரிக்க உணவுக் கழகத்தின் ஆராய்ச்சியின் நோக்கம்.

அவர்களுடைய இந்த ஆராய்ச்சியின் நோக்கம் 2000- 2010 களில் வெற்றி அடைந்தது.உலகில் வாழும் எல்லா சீதோஷண நிலையிலும் வாழ்ந்து வரும் அனைத்து விதமான மனிதர்களுக்கு தேவையான சத்துள்ள உணவுகள் நமது பாரத நாட்டில் மட்டுமே பல நூற்றாண்டுகளாக மக்களால் உண்ணப்பட்டு வருகின்றன என்பதைக் கண்டு அமெரிக்க உணவு கழகம் ஆச்சரியப்பட்டது.

நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள "பழைய சோறுடன் கூடிய வெங்காயமும்" & "தயிர் சாதமும்" தான் அந்த அனைத்து  சரிவிகித சத்துக்கள் உள்ள  உணவுகள் ஆகும்.

தற்போது சென்னையிலும் மற்ற தமிழ்நாட்டு மாநகரங்களிலும் நட்சத்திர உணவு விடுதிகளில் இந்த இரண்டு உணவு வகைகளும் கிடைக்க ஆரம்பித்துள்ளன.

3)1984ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் இருந்த ஒரு அமெரிக்க நிறுவனம்( யூனியன் கார்பைடு) விபத்துக்கு உள்ளானது. அதில் இருந்து வெளியான நச்சுப் புகையால் போபால் முழுவதும் சுமார் மூன்று லட்சம் மக்கள் படிப்படியாக  இறந்தார்கள்.

அதேசமயம் போபாலில் உள்ள ஒரே ஒரு தெரு மக்கள் மட்டும் சிறிது கூட அந்த விஷ வாயு நச்சுப் புகையால் பாதிக்கப்படாமல் முழு ஆரோக்கியத்தோடு தப்பித்தார்கள்.அந்தத் தெருவிலுள்ள ஒரு பிராமணக் குடும்பம் "அக்னிஹோத்ரம்" என்ற பாரம்பரிய யாகம் சிறிய அளவில் அன்று முழுவதும் நடத்தினார்கள். அதில் இருந்து உண்டான ஹோமப்புகை அந்த பெருமக்கள் அனைவரையும்  காப்பாற்றியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பல்கலைக் கழகங்கள்  "அக்னிஹோத்திரம் செய்வது" பற்றிய  ஆராய்ச்சிகளையும்,

அக்னிஹோத்ரம் செய்வதால் உண்டாகும் ஆரோக்கியம் மேம்பாடு பற்றியும் ,விவசாய மறுமலர்ச்சி பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டே இருக்கின்றன.ஐரோப்பிய நாடுகளில் அக்னிஹோத்ரம் பற்றிய டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் பல்கலைக்கழகங்களில் ஆரம்பித்துள்ளார்கள்.

4)சர்வதேச மருந்து நிறுவன மாஃபியாக்களால் உருவாக்கப்பட்ட டெங்கு வைரஸ் காய்ச்சலுக்கு நமது தமிழ் நாட்டு மூலிகைகள் மூலமாக  தயாரிக்கப்பட்ட மருந்துகள் டெங்கு வைரஸ் பரவல் தடுக்கப்பட்டது. மைக்ரோ பயாலஜியும், பயோ டெக்னாலஜியும் நமது நாட்டு மூலிகைகளைப் பற்றிய ஆராய்ச்சியை மேல் நாடுகளுக்கு கொடுப்பதற்காக உண்டாக்கப்பட்ட  படிப்புகள் ஆகும்.

5)பஞ்சபூத  தலங்களில் ஒன்றான சிதம்பரத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த புவியியல் வல்லுநர்கள் பல ஆண்டுகள் பல கோடி டாலர்கள் செலவு செய்து ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் நடராஜரின் கால் பெருவிரல் தான் இந்த பூமியின் மையப் புள்ளி என்பதை ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடித்தார்கள்.இந்த ஆராய்ச்சியின் முடிவாக உலகம் முழுவதும் பூமி பற்றிய ஆராய்ச்சி மையங்கள் மற்றும் அணு பற்றிய ஆராய்ச்சி மையங்களில் நடராஜர் சிலையை  ஸ்தாபித்துக் கொண்டே  இருக்கிறார்கள்.

6)இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலும் உள்ள கடல் பகுதியை செயற்கைக்கோள் மூலமாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில் ராமர் பாலம் கடலுக்குள் மூழ்கி இருப்பதை கண்டுபிடித்தார்கள். ராமர் பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை.மனிதர்களுடைய முயற்சியால் 17 , 50,5121 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது என்பதையும் கண்டுபிடித்தார்கள்.3 கிலோ மீட்டர் அகலமும் 30 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட இந்த ராமர் பாலம் விஞ்ஞானபூர்வமாக மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து விட்டார்கள். ராமாயணம் நிகழ்ந்தது உண்மை என்பது இதன் மூலம் நமக்குத் தெரிகிறது.

7)15 8 1947 அன்று நாம் கிறிஸ்தவ இங்கிலாந்திடம் இருந்து அரசியல் சுதந்திரம் பெற்றோம்.இந்த நாளுக்கு சில வாரங்களுக்கு முன்பாக மூன்று ஸ்பெஷல் கப்பல்கள் மூலமாக நம்முடைய நாட்டில் இருந்து ஏராளமான ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு கடத்தப்பட்டன.

அந்த ஓலைச் சுவடிகளை இன்றும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ,பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கின்றன.

இந்த ஆராய்ச்சியின் மூலமாக பாதாள நகரம் கட்டக்கூடிய டெக்னாலஜியை ஜெர்மனி கண்டுபிடித்து விட்டது.

ரேடாரில் சிக்காத விமான தொழில் நுட்பத்தை அமெரிக்கா கண்டுபிடித்துவிட்டது.

வேற்றுக்கிரக மனிதர்களின் தொடர்பு கொள்ளும் முறைகளுக்கான ஆராய்ச்சி பல மடங்கு வெற்றி அடைந்தாலும் அவை வெளியிடப்படவில்லை;கால எந்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் பல மடங்கு முன்னேற்றமடைந்து இருக்கின்றன! ஆனாலும் அவை வெளியிடப்படவில்லை;

இன்னும் பல ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

8)டெல்லி அருகில் உள்ள குருக்ஷேத்திரம் என்ற இடத்தில் வேதியியல் இயற்பியல் வல்லுநர்கள் செய்த ஆராய்ச்சியின் முடிவாக மகாபாரதப் போர் நடைபெற்றது உண்மைதான் என்ற செய்தி அறிவியல் பூர்வமான நிரூபணம் ஆகியிருக்கிறது. இன்றைய அணுசக்தி தொழில்நுட்பமே அன்றைய பிரம்மாஸ்திரம் ஆகும். குரு சேத்திரம் பகுதியில் அணுக்கதிர் வீச்சு உள்ள மண் பானை ஓடுகள் இதற்கு ஆதாரங்களாக கிடைத்தன.

9)அமெரிக்காவின் இராணுவ உளவு செயற்கைக் கோள்கள் உலகத்தை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும்போது பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கடந்து செல்லும்போது மட்டும் மூன்று வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அதன் பிறகு சிறிதும் பாதிப்பில்லாமல் வழக்கம்போல் இயங்கி வந்ததை அமெரிக்க ராணுவ அமைப்பு கண்டுபிடித்தது.

பூமியின் எந்தப் பகுதியை கடக்கும்போது இவ்வாறு மூன்று வினாடிகள் ஸ்தம்பித்து போகிறது என்பதை பல ஆராய்ச்சிகள் மூலமாக அதன் பிறகு கண்டுபிடித்தார்கள்.

அது நம்முடைய தமிழ்நாட்டில் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு என்ற ஆலயத்திற்கு நேர் மேலாக இருக்கும் வான்பகுதியை கடக்கும் போது இவ்வாறு மூன்று வினாடிகள் ஸ்தம்பிக்கின்றன என்பதை கண்டுபிடித்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

எதனால் இவ்வாறு 3 வினாடிகள் ஸ்தம்பிக்கின்றன ?என்பதை கண்டுபிடிக்க மேலும் பல ஆராய்ச்சிகள் செய்தார்கள். அதில் கிடைத்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன!

ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல் என்பதை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும் அமெரிக்க ராணுவமும் ஏற்றுக்கொண்டது.

சூரிய குடும்பத்தில் உள்ள சனி கிரகத்திலிருந்து கண்களுக்கு தெரியாத கருநீலகதிர்கள் புறப்பட்டு பூமியில் அருள்மிகு  அருள்மிகு  தர்ப்பண ஈஸ்வரர்   திருக்கோயில், திருநள்ளாறு என்ற பகுதியை வந்தடைகின்றன என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு!!!

மேலும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பாரத நாட்டில் இந்து மக்களால் கொண்டாடப்படும் சனிபெயர்ச்சி நாளன்று சனி கிரகத்திலிருந்து மிக அதிகமான அளவுக்கு அடர்த்தியான கருநீலகதிர்கள் இந்த ஆலயத்தை வந்தடைகின்றன.

சனிப்பெயர்ச்சி நாளை மையமாகக் கொண்டு பிந்தைய 23 நாட்களும் முந்தைய 22 நாட்களும்  கருநீல கதிர்வீச்சு அடர்த்தியாக சனி கிரகத்திலிருந்து  இந்த ஆலயத்தின் மீது பாய்கிறது என்பதையும் கண்டறிந்தார்கள்.  சுமார் 6 ஆண்டுகள் முயற்சி செய்து இந்த ஆராய்ச்சி முடிவு அவர்களுக்கு கிடைத்தது.

10) இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர்  ஆரம்பமானது. ரஷ்யாவை எல்லாவிதத்திலும் படுதோல்வி  அடைய வைக்க வேண்டும் என்ற வெறியில் அமெரிக்கா தன்னுடைய முழு சக்தியையும் செலவிட தொடங்கியது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பக்கூடிய குழுவினர்களை அமெரிக்க விண்வெளி அமைப்பு நாசா தயார் செய்தது.ஒரு குழுவில் மூன்று பேர் வீதம் மொத்தம் மூன்று குழுவினரை தயார் செய்தது.

நிறைவாக அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் நிர்வாகிகள் அந்த ஒன்பது பேருடைய பிறந்த குறிப்புகளை துல்லியமாக பரிசோதித்து கண்டறிந்தார்கள்.

இந்த குறிப்புகளுடன் கேரளாவுக்கு வருகை தந்து "இதில் எந்த குழுவினரை ராக்கெட் மூலமாக நிலாவுக்கு அனுப்பினாள் அவர்கள் வெற்றிகரமாக நிலாவிற்கு சென்று திரும்பி பூமிக்கு வருவார்கள் ?"என்று ஜோதிட ஆலோசனை கேட்டார்கள். கேரளாவின் முன்னணி நம்பூதிரி ஜோதிடர்கள் தேர்வு செய்த  குழுவினரையே நாசா நிலவுக்கு அனுப்பி  வைத்தது! அதில் வெற்றியும் பெற்றது!!!

11)  அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் அஸ்ட்ராலஜி என்ற அமைப்பு  அதன்பிறகு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேத ஜோதிடம் என்ற பட்டப்படிப்பு படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

12) பிரிட்டிஷ் அசோசியேசன் ஆப் அஸ்ட்ராலஜி என்ற அமைப்பும் இங்கிலாந்தில் அதன்பிறகு உருவாக்கப்பட்டது.

13) சுவிட்சர்லாந்தில் வேத ஜோதிடம் பற்றிய ஆராய்ச்சிகள் செய்வதற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பிரம்மாண்டமான அமைப்பை அதன்பிறகு உருவாக்கினார்கள்.

14) நமது நாட்டில் வெளியாகும் பஞ்சாங்கங்கள் இன்று நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மிகுந்த பக்கபலமாக இருக்கின்றன.

16) குஜராத்தின் கடற்கரைப் பகுதியிலிருந்து 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் துவாரகை கடலில் மூழ்கி இருப்பதை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை கண்டுபிடித்தது.இதன் மூலமாக மகாபாரதம் நடைபெற்று சுமார் 5121(2020)ஆண்டுகள் ஆகின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகிவிட்டது.

17) பாரத நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பாக கிறிஸ்தவ இங்கிலாந்துக்கும் திப்புசுல்தானுக்கு நடைபெற்ற போரில் திப்பு சுல்தான் படைகள் தீ கணைகளால் ஆங்கிலேயப் படைகளை பலமுறை தாக்கின. அதன்பிறகு அந்த தீ கணைகளை கிறிஸ்தவ இங்கிலாந்தின் ராணுவ ஜெனரல்கள் எடுத்துக்கொண்டு சென்று இங்கிலாந்தில் மேம்படுத்தி னார்கள். அதுவே இன்றைய ஏவுகணை தொழில் நுட்பமாக முன்னேற்றம் அடைந்தது.

18) ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று பொய்யை நாம் வரலாற்றில் படிக்கிறோம். அதற்கு முன்பாகவே நம்முடைய பாரத நாட்டில் புனே மாநகரத்தில்  பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தன்னுடைய பறக்கும் எந்திரத்தை பறக்க வைத்து காட்டினார் ஒரு இந்து. அவர் பெயர் தால் படயே.   அப்போது கிறிஸ்தவ இங்கிலாந்து இந்தியாவை சுரண்டி கொண்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த இந்து  விஞ்ஞானியும் அவருடைய கண்டுபிடிப்பும் காணாமல் போய்விட்டது. ஆதாரம், Vedic world heritage Volume XIV

Tuesday, 3 November 2020

Rest room must in Petrol bulk.

இந்தியாவில் ஹோட்டல்கள் மட்டுமல்லாது ஓவ்வொரு பெட்ரோல் பங்க்களும் சரியான பராமரிப்புள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை பொதுமக்களின் உபயோகத்திற்காக கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது மத்திய அமைச்சகத்தின் விதியாகும்.

நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கிறோம்.

அதனால் அடுத்த முறை அவசரம் எனில், உங்கள் கூகிள் மேப்பில் பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்ககளை கண்டுபிடியுங்கள்.

இந்த இலவசமாக  கழிவறை உபயோகப்படுத்தும் வசதி அங்கு இல்லை என்றாலோ, இருந்தும் நம்மை உபயோகப்படுத்த தடுத்தாலோ, பூட்டி வைத்து சாவி ஓனரிடம் உள்ளது என்று சிப்பந்திகள் மறுத்தாலோ, கழிப்பறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லையென்றாலோ, உங்கள் மொபைல் போனில் அந்த  பங்க்  மற்றும் கழிப்பறையின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, பங்கின் பெயர், முகவரியுடன் தேதி குறிப்பிட்டு கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) - ல்  உள்ள ஸ்வஸ்தா மொபைல் ஆப் (Swachhta@PetroPump App) மூலம் புகார் பதிவு செய்யலாம்.

பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு (Ministry of Petroleum and Natural Gas, Government of India)  மூலம் 3 நாள்களுக்குள் நேரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் இந்தச் செய்தியை பகிர்ந்திடவும்  கேட்டுகொள்கின்றேன்.
#share

Tuesday, 27 October 2020

இந்து சமய ஆசாரத்தில் மகளிருக்கு உள்ள அங்கீகாரம்:

இந்து சமய ஆசாரத்தில் மகளிருக்கு உள்ள அங்கீகாரம்:

1) திருமணம் ஆகாத தனி மனிதனுக்கு சபையில் உயர் அங்கீகாரம் கிடையாது.

2) மனைவி இல்லாதவன் யாகம் செய்யக்கூடாது.

3) மனைவி இல்லாதவன் கும்பாபிஷேகம் போன்ற யாகங்களில் பங்கேற்க தகுதி கிடையாது.

4) மனைவி இல்லாதவன் தானம் செய்ய முடியாது.

5) மனைவி இன்றி செய்யும் தானம் பலன் தராது.

6)மனைவி இல்லாதவன் பித்ரு கடன்களை செய்ய வாய்ப்பற்றவன்.

7) மனைவி இல்லாதவன் கோயில் உள்ளே சென்று ஸ்வாமியை தீண்டி பூஜை செய்ய அருகதை அற்றவன்.

8) மனைவி இல்லாதவன் பஞ்சாயத்தில் தலைமையாக உட்காரும் தகுதி இல்லாதவன்.

9) மனைவி இல்லாதவன் நேரில் வந்தால் சகுனப் பிழை என பொருள்.
( இதுவே ஒத்தை பிராமணன் என திரிக்கப்பட்டது)

10)மனைவி இல்லாதவனுக்கு ஆகமங்களின்படி ஆச்சார்ய தீக்ஷை கிடையாது.

11) மனைவி இல்லாதவனுக்கு கும்ப மரியாதை கிடையாது.

12) மனைவி இன்றி ஒற்றை நபராக பசுவை வணங்கக்கூடாது.

13) மனைவி இன்றி ஒற்றை நபராய் புண்ணிய தீர்த்தம் ஆடுதல் கூடாது.

14)மனைவி இன்றி பெரியோர்களை நமஸ்கரிக்கக் கூடாது. அதாவது முழு பலன் இல்லை என்பதாகும்.

   இப்படி பல பல நியதிகள் உள்ளது. இவை இல்லற வாழ்வியல் அல்லது அந்நிலை சூழலில்  உள்ளவர்களுக்கே.

மனைவி என்ற பெண் உடன் இல்லையெனில் இல்லறத்தான் இந்து சாஸ்திரங்களின் படி வெறும் ஜடமே.மனைவி என்ற பெண் உடன் இல்லையெனில் இல்லறத்தான் இந்து சாஸ்திரங்களின் படி வெறும் ஜடமே   '  ,
         #பெண்களை தாய் உள்ளம் கொண்ட கருணை கடல்களை பார்த்து #விபச்சாரிகள் என கூறும் திருமணம் நடக்காத குடும்பம் என்பது என்ன என்றுதொரியத  #திருமாவளவன் பேன்றவர்களுக்கு பெண் தெய்வாங்களின் #சாபம் கிடைக்கட்டும் #சமர்பணம்