Saturday, 31 December 2022

மாதத்தின் முதல் நாள் மற்றும் வருடத்தின் முதல் நாள் கட்டாயம் வாங்க வேண்டிய பொருட்கள்(ஏதாவது ஒன்று)

மாத சம்பளம் வாங்கியதும் முதலில் வாங்க வேண்டிய பொருட்கள்:

1) இனிப்புகள்
2) பழங்கள்
3)சாக்லேட்
4) ஐஸ்கிரீம்
5)தேன்
6) சா்க்கரை,வெல்லம்,
கற்கண்டு
7) வாசனை மலா்கள்
8) கல் உப்பு
9)வெள்ளி


மாத சம்பளம் வாங்கியதும்  செய்ய கூடாதவை:

1) கடன் தரக்கூடாது
2)கடன் வாங்க கூடாது
3) மருந்து மாத்திரைகள் வாங்க கூடாது
4) எண்ணெய் வாங்க கூடாது

வருடத்தின் முதல் நாள் வாங்க வேண்டிய பொருட்கள்:

1) வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப்பொருட்கள்
2) மஞ்சள்
3)குங்குமம்
4) கல் உப்பு
5)Spices(ஏலம்,கிராம்பு,அன்னாசிப் பூ,பட்டை,சோம்பு)
6)வாசனை மலா்கள்( மல்லிகை,முல்லை,ரோஜா,தாமரை)
7) வாசனை திரவியங்கள்( அத்தா்,புணுகு,ஜவ்வாது,அரகஜா/அஞ்சனைக்கல்)
8) இனிப்பு(சா்க்கரை,வெல்லம்,கல்கண்டு,தேன்)
9)பழங்கள்
10) பால்,தயிா்,வெண்ணெய்,நெய்

Thursday, 28 July 2022

கவிதை. தஞ்சை டீன் பணி நிறைவு

•••••••••••••••••••••••••••••••••••••••••
பணிநிறைவு பாராட்டிதழ்:
•••••••••••••••••••••••••••••••••••••••••
செழித்த மண்ணில் துள்ளிக்குதித்து,
காவிாி ஆற்றில் தாவிக்குதித்து,
முக்கனி நிழலில் மூழ்கிப்படித்து,
முன்னொருகால தவவலிமையால்
மருத்துவகுடும்பத்தில் மற்றுமோா் உதயம்.

மகத்துவம் நிறைந்த மருத்துவம் பயின்று, தனித்துவம் நிறைந்த தான வள்ளலே.!

எளியவருக்கிறங்கும் அாிய மனதுடன்,
அள்ளக்குறையா அமுதசுரபியாம்
அன்னை சிவகாமியின்  நகலாய் பிறந்த  நல்லதோா்  பிறவியை துணையாய் பெற்ற இரவிக்குமாரரே...!

தஞ்சைத்தரணியின் பொறுமைக்கடலே
உம் கருணைக்கடலால்
பலருக்கும் நீா் முன்னுதாரணம்.

மனிதநேய இலக்கணம் பொதிந்த
தலைக்கணமில்லா
மக்கள் மருத்துவா்.

எங்கள் மனம் நிறைந்த மருத்துவரே,
உம் பணிநிறைவன்று
எம் மனம்நிறைந்த பாராட்டுகள்.

வாழ்த்துகளுடன்...
கவிஞா்.க.இளங்கோவன்.
தேதி:29/07/2022

Thursday, 21 July 2022

கவிதை-இயற்கை

••••••••••••••••••
இயற்கை:
••••••••••••••••••
ஆதியாகி
அந்தமாகி,
இராப்பகலாகி
ஈா்ப்பாகி,
உயிராகி,உணா்வாகி,
ஊணாகி
எட்டு திக்காய்,
எட்டா மலையாகி,
ஏாியாகி,மாாியாகி
ஐம்புலனாய்,
ஐந்திணையாய்
ஐம்பூதங்களாய்
ஐங்கரனுமாகி,
ஔியாய்,ஓசையாய்
ஓதும் மறைபொருளாகி
சீராய்,சிறப்பாய்,
வசந்தமாகி
அசறாமல் சுழலும்
அண்டம் நிறைந்த
அனைத்துமான
இயற்கையே.
உம்மை உம் தடம்மாறாமல்
உண்மையாய்
தன்மையாய்
பின்பற்றி
எம் சந்ததி வளா்ப்பேன்.

கவிஞா்.க.இளங்கோவன்.
தேதி:21/07/2022

Sunday, 19 June 2022

பெற்றோா்களுக்கு முக்கிய அறிவுரைகள்

*பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட  பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும்  இனிமையாகவும்  இருக்கும்*

1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்)

2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்.
உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (மதிக்கத்தெரியாது)

3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும்.  என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள்.

4- *பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை . கையில் பணம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், உரிமையும் உங்களுக்கு நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம். முழுவதும் பகிர்ந்தால் நீங்கள் நிற்க வேண்டியது நடுத்தெருவில்தான்.*

5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள் அவற்றை சொல்லி காட்டவேண்டாம் உங்கள் கடமையை செய்தீர்கள் அவ்வளவே.

6 -கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள் தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமா இருந்து வாருங்க .அங்கே அதிகம் தங்க வேண்டாம்.

7- எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை - கணவனை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள் உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுங்க. பிள்ளைகள் வீட்டிற்கு சென்றால், கூடவே உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர், சீப்பு, சோப், போன்றவற்றை எடுத்து செல்லுங்கள்.

8- அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்கவேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானபடவேண்டாம்.
அவர்கள் வாழ்வது உங்க வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை நவீன கார்போரேட் வாழ்க்கை நீங்கள் 1000 ரூ பெரிதாக நினைத்தவர்கள் அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள் எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள்.

9- அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் உங்க அறிவுரைகளை தவிருங்கள்.

10-உங்களை விட அறிவிலும் திறமை யிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள். அல்லது நீங்கள் முட்டாள்களாகவே நடியுங்கள். அப்பொழுதுதான் பிழைப்பீர்கள்.

*அதிக அறிவுரைகள் இக்கால சந்ததியினருக்கு அறவே பிடிக்காது*. நீங்கள  நன்கு படித்திருந்தாலும் நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் முன் தற்குரிகளே. தலையாட்டும் பொம்மைகளே.
பகிர்வு

Thursday, 12 May 2022

16 செல்வங்களைப் பெரும் வழிகள்...!

*பதினாறு செல்வங்களைப் பெரும்_வழிகள்...!*
🙏🌾📜🌾🙏🌾
இதோ 16 வகையான செல்வங்கள்.

1. புகழ்
2. வெற்றி
3. பணம் (பொன்),
4. இரக்கம்
5. அறிவு
6. அழகு
7. கல்வி
8. நோயின்மை
9. வலிமை
10. நல்விதி
11. உணவு
12. நன் மக்கள்
13. பெருமை
14. இனிமை
15. துணிவு
16. நீண்ட ஆயுள்

16 செல்வங்களைப் பெரும் வழிகள் :-

1. #புகழ் :

யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.

2. #வெற்றி :

வெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. நம்மை நாமே வெற்றி கொள்வதாகும். இன்றைய நிலையை விட நாளைய நிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

3. #பணம் (பொன்) :

செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவைகளில் பணமும், பொன்னும் ஆகும்.அவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள் தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது.

4. #இரக்கம் :

இருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு ஏதுமில்லை. இது தான் இன்றைய நிலை. அன்பு காட்டுவது, அரவணைப்பிற்கு கூட பணம் கேட்கும் காலம். இருப்பினும் வெகு சிலர்U இரக்கம் காட்டி பல ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனைப்போல் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றனர்.

5. #அறிவு :

கல்வியும், அறிவும் வேறு வேறு என்று உணர வேண்டும். படித்துத் தெரிந்து கொள்வது கல்வி. அறிவோ பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டு வருவது. அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும்.

6. #அழகு :

பார்த்தவுடன் கவருகின்ற தன்மையை அழகு என்று பெரும்பாலோர் எண்ணிக்கொண்டு சற்று கருப்பாக, குண்டாக இருப்பவர்கள் ‘தாங்கள் அழகில்லையே’ என்று தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள் பலவகையான அழகுகள் இருப்பதை தெரிந்துகொண்டால் இந்த மாதிரி தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் வரவே வராது.சில வகை அழகுகள் இதோ ! குரல் இனிமை, கவரும் பேச்சு, தாளம் போட வைக்கும் பாட்டு, நளினமான நடனம், உடை அழகு, அறிவு, அன்பு, கருணை காட்டுதல் இன்னும் பல.

7. #கல்வி :

கல்வி பெரிதாக தேவைபடாவிட்டாலும் அடிப்படை கல்வி மிகமிக அவசியம். அதுவும் படித்து மனப்பாடம் செய்யும் ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. அதோடு செய்முறை பயிற்சி வளமான துணையோடு கையும் கொடுக்கும். வளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.

8. #நோயின்மை :

நல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும். ‘நோயின்மை’ ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிசமாகும். எங்கே நோய் இல்லையோ அங்கே மகிழ்ச்சி பொங்கி வழியும்.

9. #வலிமை :

உடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். வலிமை பெற அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. வெறும் 5 முதல் 10 நிமிடங்களே போதுமானது.

10. #நல்விதி :

நல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது.
’விதி’ என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். ஆக விதி என்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதை நமக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனத்தில் இருக்கின்றது.

11. #உணவு :

உடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் வேளா வேளைக்கு நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும். உணவு , உடலும் அருவும் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகும்.

12. #நன்_மக்கள் :

பொதுவாக குழந்தையாக இருக்கும்போது சூது, வாது ஏதும் தெரிவதில்லை.தீ ஜுவாலை கூட கவர்ச்சி மிக்க பொருளாகத் தெரியும். தீ கங்கு கூட சாப்பிடும் பழமாகத் தெரியும். ஆனால் அவர்களை நன்மக்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் , அவர்களை நன்றாக உபயோகித்துக் கொள்வது மக்கள் கைகளிலும் இருக்கின்றது.

13. #பெருமை :

பிறர் பெருமைபட வாழ்தல் ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் சாதனையாகும். ஆனால் ‘தற்பெருமை’ என்பது அறவே விரும்பத் தகாததாகும். பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்களைச் சுற்றிலும் ஒரு கூட்டம் வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேறு பல எதிர்பார்ப்போடும் இருப்பார்கள். உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.

14. #இனிமை :

பேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

15.துணிவு :

துணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம்.

16. #நீண்ட_ஆயுள் :

மேற்கூறிய எல்லா (16) செல்வங்களை பெற்றுவிட்டோம்.. !

#குறிப்பு: இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்..

அன்பான வாழ்க்கை வாழ பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அன்பு மிகுந்த பாரதத்தை உருவாக்குவோம்.....!

https://youtu.be/7fb-tAnrwMM

*எமது இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள் நாள்தோறும் ஆன்மீக நற்ச்சிந்தனை தகவல்கள்*

Wednesday, 27 April 2022

நன்மை தரும் நவக்கிரகங்கள்​

நன்மை தரும் நவக்கிரகங்கள்​

நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன.

சூரியன் - ஆரோக்கியம்,

தலைமைப் பதவி

சந்திரன் - கீர்த்தி, சிந்தனை சக்தி

அங்காரகன் - செல்வம், வீரம்

புதன் - அறிவு, வெளிநாட்டு

யோகம்,

நகைச்சுவை உணர்வு

வியாழன் - நன்மதிப்பு, போதிக்கும்

ஆற்றல்,

சுக்ரன் - அழகு, அந்தஸ்து,

நல்வாழ்க்கை

சனி - சந்தோஷம்,

ஆயுள் விருத்தி

ராகு - பகைவர் பயம் நீங்குதல்,

பணவரவு அதிகரித்தல்

கேது - குல அபிவிருத்தி

Sunday, 17 April 2022

30+40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிடவேண்டிய வாழ்க்கையின் சுவாரசியமான 10விஷயங்கள்!...

*30+40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிடவேண்டிய வாழ்க்கையின் சுவாரசியமான 10விஷயங்கள்!...*

#அனுபவம்:- 1
30 வயதிற்கு மேல் கட்டாயம் திருமணம் முடித்திருக்க வேண்டும், தாய் தந்தையின் உதவியை நாடியோ அல்லது மனைவி, உடன் பிறந்தோர், சொந்தக்காரர், போன்ற யாரிடமும் உங்கள் சொந்த செலவிற்காக நிற்க கூடாது, உங்களுக்கு என ஒரு வருமானம் தரும் தொழில், வேலையோ கட்டாயம் இருக்கவேண்டும், 30 வயதிற்கு மேல் நிலையான வருமானம் வேலையும் இல்லையென்றால் நீங்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள், அது உங்களை மேலும் துன்பப்படச்செய்யும்...

#அனுபவம்:- 2
பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் வயசு போனால் திரும்ப வராது, கூடவே மகிழ்ச்சியும் போய்விடும், 40 வயதிற்குள் உலகம் வேண்டாம், நம்ம இந்தியாவிற்குள்... நீங்கள் சுற்றுலா மேற்கொள்ள வேண்டும், மனைவி மக்களுடன் சென்றால் இன்னும் ஆனந்தமே... புது புது இடம், இனம், மக்கள், மொழி, என புதிய கலாச்சாரம் உங்களை ஆச்சரியப்பட செய்யும், இவ்வுலகில் இப்படிப்பட்ட மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்...

#அனுபவம்:- 3
ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால், 40 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும், இங்கே யாருதான் பிடித்த வேலையை செய்கிறார்கள் என்கிறீர்களா? நாம் செய்யும் வேலையில் ஒரு நேர்மை, ஒரு நியாயம், இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

#அனுபவம்:- 4
தோல்வி!
தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான். ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள அனுபவமின்றி தவிக்கும் நிலை ஏற்படலாம்...

#அனுபவம்:- 5
முதலீடு!
சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை கொண்டு கூட வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும், அல்லது யாருக்கும் தெரியாமல் வங்கியில் சேர்த்து வைப்பதும், நல்லது நீங்கள் பணம் சேமிக்கிறீர்கள் என்று உங்கள் குடும்பத்தினருக்கு தெரிந்தால் அதற்கு என ஏதாவது  புதிதாக முளைக்கும் அதனால்தான் வருமானத்தின் கால் பங்கை சேமித்து வைப்பின்... அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்கு உதவிடும்...

#அனுபவம்:-6
30 வயதிற்குள் நேர்மையான மற்றும் உண்மையான நட்பை தக்க வைத்துக்கொள்ளுங்க,
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் உங்களுக்கு தோள் கொடுக்க ஓரு தோழமை வேண்டும், 40 வயது வரை உங்களுக்கு நண்பர்களே இல்லையென்றால் உங்கள் குடும்பத்தினரை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள் வேற வழியே இல்லை...

#அனுபவம்:- 7
பிடிக்காவிடில் பிரிவு!
ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா? வேண்டவே வேண்டாம். முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.

#அனுபவம்:- 8
சேமிப்பு
பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள். எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.

#அனுபவம்:- 9
கைதேர்ந்தவர்!
நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும். அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும், அதில்தான் உங்களின் (கெத்து) மதிப்பு அடங்கியிருக்கிறது...

#அனுபவம்:- 10
நீங்கள் நீங்களாகவே இருங்கள்! 30 வயது வரை எப்படி இருந்தீரோ! 40 வயதிலும் அப்படியே இரும்... இந்த சமூகம் உங்களை நன்கு கவனிக்க கூடியது, மற்றவர்களுக்காக, அல்லது பணத்திற்காக உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டால், இருக்கும் மரியாதையும் போகுமே தவிர உங்களுக்காக யாரும் சிலை வைக்க போவதில்லை, ஆதலால் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

"நிச்சயமாக துன்பத்தில்தான் இன்பம் இருக்கிறது, பிரச்சினையையும், துன்பமும் உங்களுக்கு மட்டுமல்ல... மேற்கூறிய யாவும் 30 வயதிலிருந்து 40 வயதிற்குள் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய உங்கள் வாழ்க்கையின் கட்டாயமாகும், பணம் மட்டுமே சந்தோஷத்தை ஒருநாளும் கொடுக்காது, பணத்தால் கிடைக்கும் சந்தோஷம் நீண்ட நாளும் நிலைக்காது, நாம் செய்யும் செயலும், நமது குடும்பமும், சுற்றும் சுற்றியுள்ள நட்பும், ஆகச்சிறந்த நமக்கு வேண்டிய மகிழ்ச்சியை இவைகளும் கொடுக்கும்."...

*🍃Sri Yoga & Naturopathy*🍃

*யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp  9952133415*

Friday, 8 April 2022

கவிதை-முன்னாள் அமைச்சருக்கு

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
நெஞ்சிருக்கும்வரை தங்களின் நினைவிருக்கும்,

உயிருள்ளவரை தங்கள் உதவிகளின் உணா்விருக்கும்.

உலகில் நானுள்ளவரை  முக்குல உறவே அண்ணா உம் நினைவிருக்கும்,

உம்  அசைவுகள் யாவும் என் எண்ண ஓட்டத்தை என்றும் நிறைந்திருக்கும்,

உம்மீது எங்களுக்குள்ள அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்,

உன் மருவருகையை எம் விழிகள் வழியெங்கும் வைத்து காத்திருக்கும்,

உம் பிறந்தநாளாம் இன்று உம் தங்கை வாழ்த்தின் வருகை சற்று சோா்ந்திருக்குமே தவிர ஓய்ந்திராது.

இன்று நீவிா் பெற்ற வாழ்த்து மழையின் முடிவில் வானவில்லாய் என் வாழ்த்துரை.

வாழ்க வளமுடன் அண்ணா.💐💐💐

அன்புடன்...

K.வளா்மதி,
மாநில பொதுச்செயலாளா்,
தமிழ்நாடுஅரசு நா்சுகள் சங்கம்.

Thursday, 7 April 2022

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

Monday, 28 March 2022

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

இராமேஸ்வரம்
திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின்
மகிமைகளும்!

இராமேஸ்வரம் தல வரலாறு ஶ்ரீராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றார்.

ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ஶ்ரீராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.

எனவே...

ஶ்ரீராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது.

மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்.

1. மகாலெட்சுமிதீர்த்தம்

இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது.

இதில் ஸ்ஞானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

2. சாவித்திரி தீர்த்தம்,

3. காயத்ரி தீர்த்தம்,

4. சரஸ்வதி தீர்த்தம்.

இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது.

இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

5. சேது மாதவ தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம்.

இதில் ஶ்ரீராமபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

6. நள தீர்த்தம்,

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது.

இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

7. நீல தீர்த்தம்,

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது.

இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

8. கவாய தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது.

இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

9. கவாட்ச தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்குஅருகில் உள்ளது.

இதில் நீராடுவதால் நரகத்திற்கு
செல்ல மாட்டார்கள்.
மன வலிமை, தேக ஆரோக்கியம்,
திட சரீரம் கிடைக்கும்.

10. கந்நமாதன தீர்த்தம்,

சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது.

இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

11. சங்கு தீர்த்தம்,

ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில்
பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

12. சக்கர தீர்த்தம்.

ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது.

இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது.

இதில் நீராடுவதால்
பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன்,
பில்லி சுனியமும் நீங்கும்.

14. சூர்ய தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது.

இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

15. சந்திர தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது.

இதில் நீராடுவதால்
ரோக நிவர்த்தி அகலும்.

16. கங்கா தீர்த்தம்,

17. யமுனா தீர்த்தம்,

18. காயத்ரிதீர்த்தம்,

இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்குஎதிரில் அமைந்துள்ளது.

இவைகளில் நீராடுவதனால் பிணி,
மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

19. சாத்யாம்ருத தீர்த்தம்,

திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது.

இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

20. சிவ தீர்த்தம்,

இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது.

இதில் ஸ்ஞானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

21. சர்வ தீர்த்தம்,

இந்ததீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாத சுவாமி சன்னதி
முன் உள்ளது.

இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம்.

கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள்.
இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

22. கோடி தீர்த்தம்.

இந்த தீர்த்தமானது ஶ்ரீ இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது.

அதனால் ஶ்ரீராமனாவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது.

அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது.

இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இதற்கு கட்டணம் உண்டு. 

பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.

கோடி தீர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது
என்பது சம்பிரதாயம்.