•••••••••••••••••••••••••••••••••••••••••
பணிநிறைவு பாராட்டிதழ்:
•••••••••••••••••••••••••••••••••••••••••
செழித்த மண்ணில் துள்ளிக்குதித்து,
காவிாி ஆற்றில் தாவிக்குதித்து,
முக்கனி நிழலில் மூழ்கிப்படித்து,
முன்னொருகால தவவலிமையால்
மருத்துவகுடும்பத்தில் மற்றுமோா் உதயம்.
மகத்துவம் நிறைந்த மருத்துவம் பயின்று, தனித்துவம் நிறைந்த தான வள்ளலே.!
எளியவருக்கிறங்கும் அாிய மனதுடன்,
அள்ளக்குறையா அமுதசுரபியாம்
அன்னை சிவகாமியின் நகலாய் பிறந்த நல்லதோா் பிறவியை துணையாய் பெற்ற இரவிக்குமாரரே...!
தஞ்சைத்தரணியின் பொறுமைக்கடலே
உம் கருணைக்கடலால்
பலருக்கும் நீா் முன்னுதாரணம்.
மனிதநேய இலக்கணம் பொதிந்த
தலைக்கணமில்லா
மக்கள் மருத்துவா்.
எங்கள் மனம் நிறைந்த மருத்துவரே,
உம் பணிநிறைவன்று
எம் மனம்நிறைந்த பாராட்டுகள்.
வாழ்த்துகளுடன்...
கவிஞா்.க.இளங்கோவன்.
தேதி:29/07/2022