உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போக நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!
நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் ஏதாவது ஒரு விதத்தில், எப்படியாவது காணாமல் போய் விடாதா, என்ற எண்ணத்தோடு தான் இரவு தூங்க செல்வோம்.
காலை கண் விழிக்கும் போது, துன்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை அமைவதற்கு மிக மிக சுலபமான முறையில் சொல்லப்பட்டுள்ள ஒரு பரிகாரம் தான் இது.
இதை வீட்டில் இருக்கும் பெண்களும் செய்யலாம், ஆண்களும் செய்யலாம். தவறொன்றும் கிடையாது.
உங்களுடைய வாழ்க்கை
இனிப்பாக மாறும்.
இந்த இனிப்பு காரியத்தை உங்கள் கைகளால் செய்து பார்த்துவிட்டு, உங்களுக்கு பலன் தெரிந்தால், தொடர்ந்து இதை உங்களுடைய வாழ்நாள் முழுவதும் செய்யலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை இனிமையாக தொடங்குகிறேன்.
சில பேர் கோவிலில் வேண்டிக் கொள்வார்கள், என்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போனால், குறிப்பிட்ட அளவு வெல்லத்தை சொல்லி, அதாவது ஒரு கிலோ வெல்லத்தை உன்னுடைய கோவிலுக்கு வந்து குளத்தங்கரையில் கரைத்து விடுகின்றேன் என்று, இறைவனிடம் வேண்டுதல் வைப்பார்கள்.
அந்த வெல்லம், தண்ணீரில் கரைவது போல், நம்முடைய கஷ்டமும் கரைந்து போய்விட வேண்டும் என்பதற்காக வேண்டிக்கொள்ளும் வேண்டுதல் தான் இது.
இதேபோல்தான் நம்முடைய வீட்டிலும் வெல்லத்தை வைத்து
ஒரு எளிய பரிகாரத்தை செய்யப்போகின்றோம்.
இரவு எல்லா வேலையும் முடித்து விட்ட பின்பு,
நிலை வாசல்(தலை வாசல்)எனும் பிரதான வாசற்கதவை அடைப்பதற்கு முன்பு, இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
இந்த பரிகாரத்தை செய்து விட்டு, முடிந்தவரை வாசல் கதவை திறக்க வேண்டாம்.
எல்லாரும் உறங்கி விட்ட பின்பு கதவை திறக்க அவசியம் இருக்காது. (கதவைத் திறக்கவே கூடாது என்று சொல்லவில்லை. அனாவசியமாக திறக்க வேண்டாம். அவசியமாக, தேவை இருந்தால் திறந்து வெளியில் செல்லலாம். தவறொன்றும் கிடையாது. பயப்படத் தேவை இல்லை.)
சமையலுக்கு பயன்படுத்தும்
சாதாரண வெல்லத்தை உங்களுடைய வீட்டில் வாங்கி தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த வெல்லத்தில் இருந்து ஒரு சிட்டிக்கை வெல்லத்தை எடுத்துக்கொண்டு
நிலை வாசப்படிக்கு வெளிப்பக்கமாக சென்று, உங்களுடைய வலது பக்கம் அந்த வெல்லத்தை போட்டு விட வேண்டும்.
அதாவது நில வாசப்படி தாண்டி வெளியே செல்லும் போது உங்களது வலது பக்கம் எதுவோ, அந்த பக்கத்தில் வெல்லத்தை போடவேண்டும்.
நிலை வாசற்படிக்கு வெளியில் சென்றுதான் போட வேண்டும்.
அதாவது வாசல்படிக்கு உள்பக்கம் இருந்து வெல்லத்தை வெளியில் வீசக் கூடாது.
வாசல்படிக்கு வெளிப்பக்கம் நின்று வெல்லத்தை, வலது பக்கம் போட்டு விடுங்கள். புரிந்தது அல்லவா?
நிலை வாசப்படியை கடந்து வெளியில்
செல்ல வேண்டும்.
உங்களது முகம் வெளிப்பக்கம் பார்த்தவாறு நிற்க வேண்டும்.
வெல்லத்தை உங்களது வலது பக்கம் போட்டுவிட வேண்டும். அவ்வளவு தான்.
திரும்பி கதவை அடைத்துவிட்டு நீங்கள் தூங்கச் செல்லலாம்.
மறுநாள் காலை அந்த வெல்லம் கண்டிப்பாக இருக்காது.
எறும்பு பூச்சி, பொட்டு ஏதாவது ஒன்று எடுத்து சென்றிருக்கும்.
எதுவுமே எடுக்காமல்
அந்த வெல்லம்
அப்படியே இருந்தாலும் தவறு கிடையாது.
அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவை இல்லை.
எப்பவும் போல உங்களது வாசலை கூட்டி தெளித்து கோலமிட்டு கொள்ளலாம்.
இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து தினம்தோறும் செய்து வரும்போது, உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அந்த வெல்லம் எப்படி கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போகிறதோ, அதேபோல் காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுடைய மனசு லேசாகும் பாருங்கள்.
அடுத்த நாள் காலை விடியும்போது, உங்களுடைய கஷ்டங்கள் தீர்ந்தது என்ற மனநிறைவு உங்களுக்கு வந்து விடும்.
ஒரு முறை முயற்சி
செய்து தான் பாருங்களேன்!
கஷ்டம் தீருவதற்கு
கோடி ரூபாயை கொடுக்கச் சொல்லவில்லை.
ஒரு சிட்டிகை வெல்லம். அவ்வளவு தான்.
இன்று இரவிலிருந்தே, உங்கள் வீட்டு வாசலில்
ஒரு சிட்டிகை அளவு வெல்லத்தை போட்டு விட்டு, தூங்கச் செல்லுங்கள்!
நாளை காலை உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போவதை உணர ஆரம்பிப்பீர்கள்!