Tuesday, 18 August 2020

திரு உத்ரகோசமங்கை தல வரலாறு

🙏• உலகிலேயே சிவபெருமானுக்கு என்று முதலில் உருவாக்கப்பட்ட ஆலயம் உத்தர கோசமங்கை ஆலயம்.

• நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவான  கோயிலும் இதுதான்.

•   நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட கோயிலும் இதுதான்.

• ஆயிரம் சிவனடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்ற ஆலயமும் இதுவேதான்.

• மூவாயிரம் ஆண்டுகளாக பூத்துக்குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயமும் இதுதான்.

• தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவாவதற்கு காரணமான  இருந்த இடமும் இதுதான்.

• உலகிலேயே முதல் மரகத நடராஜர் சிலை நிறுவப்பட்ட ஆலயமும் இதுதான்.

இப்படி பல பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாக இருக்கும் ஆலயம் ஸ்ரீ ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோயில்.

🙏இக்கோயிலைப் பற்றி   சில சிறப்பு தகவல்கள் உங்களுக்காக :🙏

•🙏 உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சிலை "சுயம்பு லிங்கம்" மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்படுகிறது.

• இக்கோயில் மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

•  உத்தரகோசமங்கை என்னும் ஊரையே சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் அழைக்கப்படுகிறது.

•  இக்கோயிலில் உமாமகேஸ்வரர் சன்னதி முன்பு  தம்பதியர் இணைந்து வழிபாடு செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

•  திருவிளையாடல் புராணத்தில் வரும் "வழியில் மீன் பிடித்த படலம்" என்னும் வரியில் இத்தலத்தை தான் குறிப்பிட்டுள்ளனர்.

•  இந்நகரம் சிறிதுகாலம் பாண்டிய மன்னரின் காலத்தில் அவர்களது தலைநகரமாக விளங்கியது.

•  ஆரம்ப காலகட்டத்தில் சிவபுரம், தெட்சிண கயிலாயம் , சதுர்வேதி, மங்கலம் , இலந்திகைப்பள்ளி,  பத்திரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்கிரபுரம் , மங்களபுரி ஆதிசிதம்பரம்  என்றெல்லாம்  அழைக்கப்பட்டதாக வரலாற்று புத்தகங்கள்  குறிப்பிட்டுள்ளனர்.

•  இக்கோயில் மங்களநாதர் மங்களநாயகி இதுவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் அதற்கான முழுமையான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

•   இங்குள்ள மூலவருக்கு மங்களநாதர் , மங்களேஸ்வரர் , காட்சி கொடுத்த நாயகர்,  பிரளயாகேசுவர் என்னும் பெயர்களும் உள்ளன.

•  இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை , சுந்தரநாயகி போன்ற பல பெயர்களும் உள்ளன.

•  இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. மண்டோதரி பிறந்த இடமும் இந்த உத்தரகோசமங்கை தான் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்த குறிப்பின் மூலம் இத்தலம் இராமாயணத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட ஆலயம் என்று வரலாற்று ஆசிரியர்களால் ஆராயப்படுகிறது.

•  இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம்.

•   இக்கோயிலில் ஆதிகாலத்து வராகிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

•  பிரதோஷ நாளன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகிறார்கள். காரணம் இக்கோவில் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை கட்டி வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம் .

•  இத்தலத்தில் உள்ள கோயில் குளத்தில் உள்ள மீன்கள் கடல் வாழ் மீன்களாகும்.

•  சிவபெருமானால் பரதநாட்டியக் கலையை முதல்முதலாக உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இடம் இத்தலம் ஆகும்.