Friday, 14 August 2020

கவிதை-74 வது சுதந்திர தினம்(2020)

_*அனைவருக்கும் 74 வது இந்திய சுதந்திர தின திருவிழா நல்வாழ்த்துக்கள்...*_🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

•••••••••••••••••••••••••••••••••
_*தாய் தேசத்தின் தந்தை:*_
•••••••••••••••••••••••••••••••••
_அன்னை நாட்டை_
_அன்னியன் ஆள_
_அடித்து துரத்தி_
_விடியல் பெற்றது_  _மகாத்மா வடிவில்_
_பராமாத்மாவே அன்றோ..!_

_பாரதநாட்டின் கடுந்தவத்தாலே_
_தேசத்தந்தையின் தெய்வீக செயலால்..._
_பெற்றோம் தேச சுதந்திர காற்றை...!_

_ஆங்கில மண்ணில்_
_பாாிஸ்டராகி_
_ஆப்பிாிக்க மண்ணில்_
_முதலடி வைத்து..._

_காலடி வைத்த_
_ரயிலடி உணா்ந்தாய்_ _கயவன்_
_காலனியின்_ _அவமானத்தாலே...!_

_அன்னை தேசத்தினின்று அன்னியனை விரட்ட_
_அகிம்சா மந்திரமே_
_அவசியமாய் உணா்ந்தாய்..._

_பாரதம் நுழைந்து பகட்டினை துறந்து எளியவனாகி எண்ணம் ஈடேற்றினாய்..._

_ஆயிரமாயிரம் உயிா்ப்பலி கொடுத்தும்,_
_அகிம்சா வழியால் அன்னியன் அரள..._

_உப்புக்கு வாி உனக்கேன் என்று_
_உடல்நிலை மெலிந்தும்,_ _உணா்வால்_
_வென்றாய்..._

_ஒத்துழையாமையால் உச்சியிலடித்து இந்திய மண் இந்தியனுக்கென்றாய்..._

_தாயக மண்ணை, வேற்றவன் ஆள அனுமதியில்லையென ஆவேசமடைந்தாய்._

_அகிம்சா ஆயுத_
_அணிவகுப்பாலே..._
_அன்னியா்களின் குலை நடுங்க வைத்தாய்...!_

_நாலு நூற்றாண்டு நயவஞ்சகத்தை_
_அரை நூற்றாண்டில்  அறுத்தும் எறிந்தாய்._

_இரவில் கிடைத்த ஔிரும் சுதந்திரத்தின் வயதோ இன்று 74._

_புதிய பாரதம்_
_புதிய விடியலில்._
_பட்டொளி வீசி பறக்குது பாரீா்_
_தேசமெங்கும் மணிக்கொடிப்பாட்டு._

_மண்ணையும் காப்போம், விண்ணையும் காப்போம்,_
_மனித நேயத்தின் மகத்துவம் காப்போம்._

_காப்போம் காப்போம்  பேணியே காப்போம்._
_அடைந்த சுதந்திரத்தை அசராமல் காப்போம்._

_கொரோனா போாில்_ _உலகம் முடங்கியும்,_
_பல்லுயிா் காக்கும்_ _முன்படை_
_எம் செவிலியம் அன்றோ..._

_அடக்கம் ஒன்றே அளவுகோளாய் கொண்டோம்._
_இருக்கும் இடம் தொியாமல் இனிதாய் சுழன்றோம்._

_கொடூரக் கொரோனாவை_
_வேறுடன் அறுக்கும்_
_போா்ப்படை அணியில்_
_முன்கள பணியில்..._

_மக்கள் உயிா்காக்கும் மாபெறும் பணியை விளக்கேற்றி,கைதட்டி,பூத்தூவிய உலகம்..._

_இன்று_
_உன்னத பணிதனை_ _அலங்காிக்க விரும்பி_
_தேசியக்கொடிதனை_
_கம்பத்தில் ஏற்ற_
_அன்பாய் அழைத்த, ஆசிாியக்கூட்டம்...!_

_செவிலிய பெறுமைதனை_  _விண்வரை உயா்த்திய_
_கல்வி புனிதா்களை_  _சிரம் தாழ்ந்து வணங்குகிறோம்._

_*ஜெய் ஹிந்த்.*_