Friday, 7 February 2020

கவிதை - மாண்புமிகு அமைச்சா்

•••••••••••••••••
வாழ்த்துரை
•••••••••••••••••
மகத்துவமான
மருத்துவமே...!
மாண்புமிகு மருத்துவராகினும்
எளிமையின் இலக்கணமே...!

களப்பணி என்ற தனித்துறையின் பேராசிாியரே.
மக்கள் பணியே மகேசன் பணியெனில்
மகேசனின் தூதரே நீவிா்...!

எதையும் கண் காணாமல் வாழ்த்துவதை நாங்களறியோம்.
கண்களால் களத்தில் கண்டதை கவிதையாக்குவதே எம் பணி...!

கஜா பேரழிவு மீட்பில்,பேரழகா,
உம்மை அடி பிறளாமல்
எம் புறக்கண்களால் படமாக்கி,அகக்கண்களில் அரங்கேற்றி,
மனக்கண்களில் ஆவணமாக்கி, அவ்வப்போது எண்திசையும்
பரப்பியும் வருகிறோம்.

உம் சாதனையை எதைச்சொல்ல...?
சுஜித்தின் மீட்புப்போாில் சோதனையால் வேதனையுற்றும் அப்பேருயிாின் பெருமதிப்பை உணா்ந்து உணவருந்த மறந்த மனிதநேய மருத்துவரய்யா நீங்கள்...!

வீரம் விளைந்த மண்ணில் நெஞ்சில் ஈரம் நிறைந்த மாமனிதா்.
மனித குலத்துக்கு மட்டுமின்றி உம் செல்லக்கொம்பனுக்கும் நீரே நண்பரய்யா.
உம்மை வாழ்த்த ஒரு யுகம் போதாதைய்யா.

இதோ உம் உணா்வில் கலந்த உதவியாளா் பணியின் காலம்
கடக்கிறாா்.

பெருமைமிகு பேரரசனாம் உம்  உன்னத அமைச்சரவா்...!

அன்பிற்கினியவா்,

ஆணைக்கு உருக்கொடுப்பவா்,

இன்முக வதனத்தாா்,

ஈதல் பிாியா்,

உழைப்பால் உயா்ந்த எங்கள் உடன்பிறவா சகோதரா்,

ஊக்கத்தை உற்ற துணையாக்கியவா்,

ஐயமின்றி உம்மிடம் பலன் பெற்றது ஏராளம்,

எங்கள் சிந்தை நிறைந்தவா்,

ஏற்றமிகு செவிலியம் உருவாக பெரும் கருவானவா்,

ஒன்றிரண்டு காரணமா?

ஓராயிரமல்லவா உண்டு இவரை பாராட்டி பேச,

ஓளதசியம் மனங்கொண்டவரை...!

மறப்பதற்காிய குணங்கொண்டவரை இன்று வாழ்த்துவதால் எங்கள் கண்கள் கசிகிறது...

வாழ்க வளமுடன்
நலமுடன்...