நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதுடெல்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.
அதன்படி ஷியா வக்ஃபு வாரியம் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யப்பட்ட 14 மனுக்களில் ஒரு சில மனுக்கள் அரசியல் சாசன அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்பான நிர்மோகி அகாரா தாக்கல் செய்த மனு மிகவும் தாமதமானது என்று கூறிய நீதிபதிகள், நிர்மோகி அகாரா ஒரு தனி அமைப்பு தான் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
1. ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றொருவரின் மத நம்பிக்கை தலையிட முடியாது
2. அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்று கொள்கிறது
3.சர்ச்சைக்குரிய இடத்தில் 1949-ல் ராமர் சிலை வைக்கப்பட்டது.
4.ராம்லல்லா அமைப்புக்கு மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர அதிகாரம் உள்ளது
5.இந்து அமைப்பான நிர்மோகி அகாரா தாக்கல் செய்த மனு மிகவும் தாமதமானது
6.அயோத்தியில் பாபர் மசூதி காலி மனையில் கட்டப்பட்டதாக கூறப்படுவது தவறு
7.அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு இஸ்லாமிய கட்டடங்கள் எதுவும் இல்லை.
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
09.11.2019
SATURDAY.