ஏலே நம்பிராசு...
இங்கிட்டு வாலே
சட்டுபுட்டுனு கஞ்சித்தண்ணிய குடிச்சிட்டுப்போலே.
மாரு வலிக்க ஏரு வெயிலில ஏறு பிடிச்சு,சோந்து போன வெவசாயிடா நீ...!
களையெடுக்க போற பய பசிதாங்க மாட்டேல
வயித்துக்கு வஞ்சகம் வச்சா விளைஞ்ச நெல்லு கலம் சேராதுலே,
வெஞ்சனமும் பழய சோறும் கமகமக்குது,
மொச்சப்பயரும்,ஊறப்போட்ட மொளகாயும் உமிழ்நீரை சொரக்குதுலே.
ஊா் உண்ண, உன்னை வருத்தி,உண்ண உறங்க நேரமறந்து,வெள்ளாமைய வௌங்க வைக்க,
வௌஞ்சு கதிரு கலஞ்சேர நீ படுற பாடிருக்கே...
அந்த ஆண்டவனுக்கே கண்ணோரத்தில கண்ணீா் கசியுதடா.
ஏலே நம்பிராசு வந்து கஞ்சித்தண்ணிய குடிச்சிட்டுப்போலே.
இவண்:
க.இளங்கோவன்.