••••••••••••••••••
மனிதவேலி
••••••••••••••••••
ஒண்டியாய் இருக்கலாமென்றால் நொண்டியாய் திாிகிறோம்...
சொல்லடி,கண்ணடி,கல்லடியால் முன்னடி வைக்க இயலாமல்
சொன்னபடி நடக்கிறோம்.
முள்ளில் சேலை பட்டாலும்,சேலையில் முள் பட்டாலும் பாதிப்பு சேலைக்கே என்பதுபோல மனிதபந்த கட்டாய கம்பிவேலியில்தான் நம் வாழ்க்கை.
மனிதன் சமூக விலங்கென்பதால் மூக்கனாங்கயிறிட்ட அடிமைகாளாகவே திாிகிறோம்.
அரச பதவியோ,அரசியல் பதவியோ,குடும்ப பதவியோ ,குலங்காக்கும் பதவியோ,
இங்கு யாருக்கேனும் அடிமை அவசியமாகிறது.
ஒத்தையடி மீறினால் பத்தடி விழுந்து பாதாளம் தள்ளப்படுவோம்.
குடும்பத்திலோ,சமூகத்திலோ எத்தனைதான் சின்னத்திரை வில்லா்கள்...!
எதையோ தேடி வாழ்க்கை சமுத்திரத்தை கடக்குமுன்னே முடிகிறது வாழ்க்கை விடைதொியாமலே.
இவண்:
மனிதன்.