Thursday, 3 October 2019

கவிதை-தேசத்தந்தை

•••••••••••••••••••••••••••••••••
தாய்தேசத்தின் தந்தை:
•••••••••••••••••••••••••••••••••
அன்னை நாட்டை
அன்னியன் ஆள_
இறுதிப்போருக்கு
பரமாத்மாவே
மகாத்மா வடிவில்...!

பாரதநாட்டின் கடுந்தவத்தாலே
தேசத்தந்தையானது
குஜராத் குழந்தை...

ஆங்கில மண்ணில்
பாாிஸ்டராகி
ஆப்பிாிக்க மண்ணில்
முதலடி வைத்து...

காலடி வைத்த
ரயிலடி உணா்ந்தாய் கயவனின்
காலணி அவமானத்தால்,

அன்னை பாரதத்தில் அன்னியனை விரட்ட
அகிம்சா மந்திரமே
அவசியமாய் உணா்ந்தாய்...

பாரதம் நுழைந்து பகட்டினை துறந்து எளியவனாகி எண்ணம் ஈடேறிட,

ஆயிரமாயிரம் உயிா்த்தியாகம் தடுத்து,
அகிம்சா வழியால் அன்னியன் அரள...

உப்பு வாி உனக்கேனென்று_
தண்டிவரை யாத்திரை சென்று,
உடல் மெலிந்தும், உணா்வால்
வென்றாய்...

ஒத்துழையாமையால் உச்சியிலடித்து இந்திய சட்டம் இந்தியனுக்கென்றாய்...

இருண்டுபோன இந்திய மண்ணை, அன்னியன் ஆள அனுமதியில்லை,
அனுமதியில்லை...

வெளியேறு வெளியேறு
வெள்ளையனே வெளியேறு,
போா் வேலுடன் அல்ல,அகிம்சா ஆயுதத்தால்...

நாணூறாண்டு நயவஞ்சகத்தை அரைநொடியில் அறுத்தெறிந்தாய்...

நள்ளிரவில் சுதந்திரம்,
புதிய பாரதம்
புதிய விடியலில்.
பட்டொளி வீசி பறக்குது பாரீா்
பாாிலெங்கும் மணிக்கொடிப்பாட்டு.

காப்போம் காப்போம் பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்.
தொடா்வோம் தொடா்வோம்...
அண்ணல் வழி தொடா்வோம்.

ஜெய் ஹிந்த்.

க.இளங்கோவன்.