Wednesday, 30 October 2019

தெய்வீகத்திருமகன் பசும்பொன் தேவா் வரலாறு

#தேசியதலைவா்_தேவா்_ஐயா

பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்.

அதிசய அரசியல்வாதி:

-34 கிராமங்களுக்கு சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.

-நேதாஜியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். இருவரும் பரங்கியர்களை எதிர்த்து ஆயுதப் போரட்டத்தில் ஈடுபட்ட தீவிர தேசியவாதி.

-நேதாஜி தனது அம்மாவிடம் "உங்களுடைய கடைசி மகன் இவன்" என்று தான் அறிமுகம் செய்து வைத்தார்.

-"அடுத்த பிறவியில் தேவர் பிறந்த மண்ணில் பிறக்க ஆசைப் படுகிறேன்" என்றார் நேதாஜி.

-தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.

-நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர்.

-அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள்.

-நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர்.

-3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

-பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார்.

எனக்கு, என் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை;
நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்றே கூறுவார்.

-பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

-ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் வென்று ஒன்றை ராஜினாமா செய்வார்.

-அவர் போட்டியிட்ட அனைத்தும் தாழ்த்தப்பட்டோர் அதிகம் நிறைந்த தொகுதிகள்.

- இறுதிக்காலத்தில் உடல்நலக் குறைவால், வீட்டைவிட்டு வெளியேறாமல் படுத்த படுக்கையிலே இருந்தும், வென்றார்;
பதவியேற்காமலே  மறைந்தார்.

-அரசு சலுகைகள் ஒன்றையும் ஏற்க மாட்டார்.

-இரயிலில் இலவசமாகப் போக மாட்டார்.

-சம்பளம் எதுவும் வாங்க மாட்டார்.

-அரசு கொடுக்கும் சொகுசு பங்களாவில் தங்க மாட்டார்.

-இவர் சிறையிலிருக்கும் காலத்தில் மாரடைப்பு வந்து இறந்தவர்கள், உணவுண்ணாமல் இறந்தவர்கள், தாடி வளர்த்தவர்கள், இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்கள், மொட்டை இட்டவர்கள் ஏராளம்.

-ருசிக்கு அன்றி பசிக்கு உணவுண்பார். தவறாக ஊற்றப்பட்ட வேப்பெண்ணை சோற்றை முகம் சுழிக்காமல் உண்ட கதைகளும் உண்டு.

-சொத்துக்கள் பெரும் பகுதியை தாழ்த்தப்பட்டோருக்கு எழுதிக் கொடுத்தவர்.

-"சாதி வேறுபாடு பார்ப்பவன் சண்டாளன்" என்றார்.

-"தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவன், என் நெஞ்சைப் பிழந்து ரத்தத்தைக் குடித்த பாவியாவான்" என்றார்.

-ஆங்கிலத்தை நாவிலே ஆண்டவர். டெல்லி நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரையை கேட்டு சில நேரம் ஸ்தம்பித்துப்போனது மன்றம்; திகைத்துப் போயினர் உறுப்பினர்கள்; தூக்கி வைத்துக் கொண்டாடின பத்திரிகைகள்.

- ஜோதிடம், சிலம்பம், குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் என அனைத்து வகைக் கலைகளையும் அறிந்தவர்.

நேதாஜி இறந்துவிட்டார் என காங்கிரசும் ஆங்கிலேயர்களும் கட்டிய கதையைத் தகர்த்தெறிந்தவர். இறுதி வரை நேதாஜி தேவருடன் மட்டுமே ரகசிய தொடர்பில் இருந்தார்.

ஆன்மிகத்தின் அடையாளம்:

-தன் வாழ்நாள் முழுதும் பெண் வாடையே படாதவர்.

-"உங்கள் அழகு மீசை பிடித்துள்ளது" ஒரு பெண் கூறியதால் , ஆண்மையின் அடையாளமான தன் மீசையை நீக்கி விட்டு இறுதி வரை வாழ்ந்தவர்.

-தான் படுத்த படுக்கையாக இருக்கும் போதும் தனக்கு மருத்துவம் செய்ய அனுமதிக்கப்பட்ட பெண் செவிலியரை ஒரு பெண் தன் உடலைத் தொடக் கூடாது என்று மறுத்தவர்.

-இறுதிக் காலத்தில் "ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தாங்கள் இன்னும் பல ஆண்டு காலம் வாழலாம்" என்று மருத்துவர்கள் கூற, "இறைவன் கொடுத்த உடலை குறையின்றி மீண்டும் அவனிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறி, அறுவை சிகிச்சையை மறுத்து, உயிரை மாய்த்துக் கொண்டவர்.

-பிறந்த நாளிலேயே இறந்த அதிசயப் பிறவி. தான் இறக்கப் போகும் நாளை முன்னரே கணித்துக் கூறியவர்.

-இந்து மதத்தின் தத்துவங்களை இவரளவுக்கு யாரும் அறிந்திருக்க முடியாது.

-அவர் இறந்ததும் அவர் வளர்த்த மயில்கள் தன் உயிரை மாய்த்தது மன்னவன் வரலாறு மண்ணில் எழுதின மயில்கள்.

சித்த வித்தையில் உயர்ந்தும் நைஷ்டீக பிரம்மச்சரியத்தின் உச்சத்தைத் தொட்டும் ஈடிணையற்ற ஆன்மீகவாதியாக விளங்கினார் தேவர். அதனாலே சித்த வித்தையில் உள்ளவர்களுக்கும் நைஷ்டீக பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்களுக்கும் அவரது சீடர்களால் நடத்தப்படும் “குருபூஜை” என்ற சிறப்பு பூஜையானது.
தேவருக்கு வருடந்தோறும் சிறப்பாக நடத்தப் படுகிறது. பால்குடம் எடுத்தல், முளைப்பாரி வளர்த்தல், முடிக் காணிக்கை செலுத்துதல் முதலிய செயல்களின் மூலம் மக்கள் தேவரை தெய்வமாக வணங்குகின்றனர்.

நேருவை தவிர்த்த தேவர்:

நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆன போது உலக முக்கியஸ்தர்கள் பலர் ஆசிய ஜோதி என போற்றி அவரை சந்திக்க நினைத்தனர். ஆனால் நேருவோ, "நான் ஃபார்வர்டு ப்ளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரை சந்திக்க விரும்புகிறேன்" எனக் கூறி சந்தித்து கைகுலுக்க கை நீட்டினார். "என் தலைவனை (நேதாஜி) காட்டிக் கொடுத்த கையை நான் தொட மாட்டேன்" எனக் கூறி நிராகரித்து விட்டார்.

ராஜாஜி போற்றிய தேவர்:

பிரம்மச்சரியத்தை கடை பிடித்ததில் இவரைப் போன்ற ஒருவரை நான் கண்டதே இல்லை.

கண்ணதாசன் வியந்த தேவர்:

- புகை, மது, மாது, மாமிசம் என சகல கெட்ட சுவாசம் கொண்ட நான் சொல்கிறேன். இந்த உலகில் உண்மையான, ஒழுக்கமான, பிரமச்சாரி
உண்டென்றால் அது உத்தம சீலர் பசும் பொன் தேவர் அவர்கள்
மட்டுமே" என்றார்.
காவிய கவிஞர் திருமிகு.கண்ணதாசன் "இந்து மதத்தின் பொக்கிஷம்" எனப்படும் தனது "அர்த்தமுள்ள இந்துமதம்" நூலில்.

வரலாற்று ஆய்வாளர் திரு.மருதுபாண்டியன் "நான் ஆராய்ச்சி செய்யாத தலைவர்களே இல்லை; நான் ஆராய்ந்தவர்களிலேயே மிகப்பெரும், மிகச் சிறந்த தலைவர் தேவர்தான் என்கிறார் ( You tube Jayatv Maruthupandian speech)

இப்பேர்ப் பட்ட மாபெரும் உன்னத மகானின் பெருமைகளைத் திட்டமிட்டு மறைத்து அவருக்கு சாதீய அடையாளத்தை குத்தியது நேருவின் காங்கிரஸ்.

தேசியத்தலைவராக குன்றிலிட்ட விளக்காக அறிப்படவேண்டியவரை,
குடத்திலிட்ட விளக்காக ஆக்கினா் காங்கிரஸ்காரா்கள் காரணம் நேதாஜியுடன் அணிவகுத்து நின்றதால்.

வீரத்தியாகிக்கு வந்தனங்கள் பல!

# மாாிதாஸ்
30.10.2019

Friday, 18 October 2019

BJP HISTORY

இன்றும் இவரின் புகைப்படத்தை சிலர் பதிவுகளில் வெளியிட முகநூல் அனுமதிப்பதில்லை..

ஏன்...அப்படி அவர் என்ன தவறு செய்தார்... நேருவின் காங்கிரஸ் கொள்கை பிடிக்காமல் வெளியேறியதாலா...??

ஏன் இவரின் புகைப்படம் மறுக்கப்படுகிறது முகநூலால்...

தெரிந்து கொள்வோம் இவரைப்பற்றி..

ஷியாமா பிரசாத் முகர்ஜி  1901 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதியன்று பிறந்தார்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த கல்வியாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவர்.

சுதந்திர இந்தியாவின் முதல் நடுவண் அரசில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக, ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் 15 ஆகஸ்டு 1947 முதல் 6 ஏப்ரல் 1950 வரை இருந்தவர். ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை நிறுவினார். பின் இக்கட்சியின் பெயர் பாரதிய ஜனதா கட்சி என மாறியது.

இன்று 45 கோடி தொண்டர்களை கொண்ட பிரம்மாண்டமான கட்சியாக வளர்ந்ததுடன், பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்று கடந்த 2 தடவையாக ஆட்சியமைத்துள்ளது பாஜக.

இந்த நிலைக்கு கட்சி உயரக் காரணம் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களே. அவர் தந்த சிந்தனைகளின் ஊக்கமும், உத்வேகமும் தான் அத்வானி, வாஜ்பேயி, மோடி உட்பட நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்கித்தந்தது. அவர் கட்சி தொடங்கியது மற்றும் தொடங்கிய 2 மாதங்களிலேயே  3 மக்களவை தொகுதிகளை வென்று தேசிய கட்சியாக உருபெற்ற வைத்தது ஆகிய வரலாற்றை காணலாம்.   

பிரிட்டிஷார் பாரதத்தைத் துண்டாடி விடுதலை அளித்துச்  சென்ற பின் நேரு பிரதமரானார்.  அவரது மந்திரி சபையில் டாக்டர் .அம்பேத்கர் மற்றும் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களையும்  சேர்த்துக் கொள்ள வேண்டும்  என்று காந்திஜியும், சர்தார் படேலும் விரும்பினர். இத்தலைவர்கள் நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆனால் சர்தார் படேல்  போன்ற காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாக் இருந்தனர்.

படேல் அவர்களது உடல் நலக் குறைவிற்குப் பின் நிலைமை மோசமாகியது.  நேரு-லியாகத் அலி  உடன்படிக்கையால் கிழக்கு வங்காளத்தில் இருந்த ஹிந்துக்கள் பாகிஸ்தான் அரசின் தயவில் விடப்பட்டனர்.பாகிஸ்தான் அரசால் அவர்கள்  துன்புறுத்தப் பட்டது, பலவந்தமாக பாரதத்துக்கு அனுப்பப்பட்டது இவை ஷ்யாமா பிரசாத் முகர்ஜியைப்  பொறுமை  இழக்க வைத்தது.

அவர் ஏப்ரல் 8, 1950 அன்று நேரு அமைச்சரவையிலிருந்து விலகினார்.ஏப்ரல் 14 ம்  நாள் தனது ராஜினாமா பற்றிய ஒரு உரையை மக்களவையில் நிகழ்த்தினார்.அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்..

அதில் அவர் ‘நேருவின் கொள்கைகள் நாட்டை  அழிவுப் பாதையில் எடுத்துச் செல்லும் என்றும் ,நம்  தாய்நாடு பிரிவினைக்கு முன்பிருந்த நிலையை விட மோசமான  நிலைக்குத் தள்ளப்டும்’ என்றும் கூறியிருந்தார். ஹிந்துக்களின் எல்லாப் பிரிவினரும் அதைப்  பாராட்டினர். அவரது துணிச்சலான , சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவைப் பாராட்டி  டில்லி நகர வாசிகள்  அவருக்கு ஒரு வரவேற்பு கொடுத்தனர்.

தனது முத்தாய்ப்பான பேச்சில் முகர்ஜி அவர்கள் ‘நேருவின் காங்கிரசுக்கு மாற்றாக நாட்டுக்கு ஒரு தேசிய வாத , ஜனநாயக  மாற்று தேவை ‘என்று குறிப்பிட்டார். ஹிந்துக்களின் எல்லாப் பிரிவினருக்கும் குறிப்பாக ஆர்ய  சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்  சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர்களைத் தான் ஆரம்பிக்க எண்ணிய கட்சிக்கு ஆதரவு அளிக்க கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேறியது. 1951 ல் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.. முகர்ஜியின் கோரிக்கைக்கு ஆர்ய சமாஜத்திடமிருந்து நம்பிக்கையூட்டும் பதில் கிடைத்தது. ஆனால் ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆர் எஸ் எஸ் ன் இயக்க  ரீதியான அமைப்பையும்  ,அதற்கு இளைய தலைமுறையினரிடையே இருந்த வரவேற்பையும் அறிந்திருந்த  முகர்ஜி அதனிடமிருந்து ஒரு சாதகமான பதிலை எதிர்பார்த்தார். ஆனால்  எந்தப்  பதிலும் வராததால் முகர்ஜி அவர்கள் மேலும் கால தாமதம் செய்ய விரும்பாமல் திட்டமிட்டபடி புதிய கட்சியைத் தொடங்க முடிவு செய்தார்.

அவர் கொல்கத்தா சென்று தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து புதிய கட்சியை ஆரம்பித்தார். அதற்கு  ‘இந்திய மக்கள் கட்சி’ என்று  பெயரிடப்பட்டது.  இது ஆர் எஸ் எஸ் இல் சிறிது சலனத்தை ஏற்படுத்தியது.  முன்பு காந்தி படுகொலையில் ஆர் எஸ் எஸ்ஸை   தொடர்பு படுத்தி  அதைத்  தடை செய்த போது அரசியல் ஆதரவு இல்லாத குறை உணரப்பட்டது.

ஆகவே அது இப்போது இந்திய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது . கட்சிக்கு வேறு பெயரையும் பரிந்துரை செய்தது. அதன்படி பாரதீய ஜன சங்கம்  என்ற பெயர் சூட்டப்பட்டது. 1951 அக்டோபர் 21 அன்று ஜனசங்கத்தின் ஸ்தாபகக்   கூட்டம் நடைபெற்றது. முகர்ஜி அவர்கள் தேசியத்  தலைவராகவும் , பால்ராஜ்  மதோக் அவர்கள் தேசியச்  செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

கட்சி துவக்கப் பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளேயே பொதுத் தேர்தல் அறிவிக்கப் பட்டது. முகர்ஜியின் செல்வாக்கை உணர்ந்த நேரு அவரையும், ஜன சங்கத்தையும் தேர்தல் கூட்டங்களில் தனது  தாக்குதலுக்கு இலக்காக்கினார். இது ஒரு வகையில் ஜன சங்கத்திற்கு நன்மை செய்து  நல்ல விளம்பரத்தைப் பெற்றுத்  தந்தது. ஜன சங்கம் நாடு முழுக்க 3 மக்களவைத்  தொகுதிகளை வென்றதுடன்  3 சதவிகித வாக்குகளைப் பெற்று  தேசியக் கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது.

ஜன சங்கத்தின் தேசியக்  கட்சி என்ற தகுதியும், மக்களவையின்  உள்ளேயும், வெளியேயும்  முகர்ஜி அவர்களின்  வளர்ந்து வரும் புகழும் ஜன சங்கத்தை காங்கிரசுக்கு  ஒரு உண்மையான தேசீய , ஜனநாய மாற்றாக எழுந்ததைச் சுட்டிக் காட்டியது. இதுவே  காங்கிரசுக்கு  மிகச்  சரியான மாற்றாக  மெல்ல மெல்ல வளர்ந்த ஜன சங்கம்  அமைந்த வரலாறாகும்.

ஜனதா கட்சி உடைத்த பின் முன்பிருந்த  ஜனசங்கம் புது வடிவம் பெற்றது.அது பாரதிய ஜனதா  கட்சி என்ற புதுப் பெயருடன் 1980 ஏப்ரல் மாதம் தோன்றியது . அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முதல் தலைவரானார். முன்பிருந்த கட்சியின் காவிக்கொடி இப்போது  காவியும், பச்சையும் கொண்ட கொடியாக   மாறியது. முன்பு கட்சியின் வழிகாட்டுக் கொள்கையாக ‘ஒன்றிணைந்த மானுட வாதம்’ இருந்தது. இப்போது அது ‘காந்தீய சோசலிச’மாக  மாறியது. இவையெல்லாம் கட்சி உறுப்பினர்கள் ஜனதா கட்சியிலும் , ஜே.பி  இயக்கத்திலும் அடைந்த அனுபவத்தின் தாக்கமே.

1984 மக்களவைத் தேர்தலில் பா ஜ கவுக்கு 3 இடங்களே கிடைத்தன. அத்வானி அவர்கள் கட்சியின் தலைவரானார்.

1989 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா ஜ க  85 தொகுதிகளில் வென்றது. 1991ல் அது 119 ஆக  உயர்ந்தது. 1996ல் பா ஜ க மிக அதிக பட்சமாக 187 தொகுதிகளை வென்றது .

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமர் ஆனார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாததால் அவர் 13 நாட்களே ஆட்சியில் இருந்தார் பிறகு 1998 ல்  மீண்டும்  வாஜ்பாய் பிரதமரானார். இம்முறை அ தி முக ஆதரவை விலக்கிக் கொண்டதால் 13 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். 1999  ல்  பா ஜ கவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசமைத்தது. இம்முறை அடல்  பிஹாரி வாஜ்பாய் அவர்கள் 5 ஆண்டுகள்  ஆட்சி செய்தார்.

2014 மக்களவைத் தேர்தல் பா ஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர்   நரேந்திர மோடி அவர்கள் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2019 ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் பாஜக வெற்றிப் பெற்று மத்தியில் திரு நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.

நாளை நமதே….நாளை மறுநாளும் நமதே

Wednesday, 9 October 2019

கவிதை- மனிதவேலி

••••••••••••••••••
மனிதவேலி
••••••••••••••••••
ஒண்டியாய் இருக்கலாமென்றால் நொண்டியாய் திாிகிறோம்...
சொல்லடி,கண்ணடி,கல்லடியால் முன்னடி வைக்க இயலாமல்
சொன்னபடி நடக்கிறோம்.

முள்ளில் சேலை பட்டாலும்,சேலையில் முள் பட்டாலும் பாதிப்பு சேலைக்கே என்பதுபோல மனிதபந்த கட்டாய கம்பிவேலியில்தான் நம் வாழ்க்கை.

மனிதன் சமூக விலங்கென்பதால் மூக்கனாங்கயிறிட்ட அடிமைகாளாகவே திாிகிறோம்.
அரச பதவியோ,அரசியல் பதவியோ,குடும்ப பதவியோ ,குலங்காக்கும் பதவியோ,
இங்கு யாருக்கேனும் அடிமை அவசியமாகிறது.
ஒத்தையடி மீறினால்  பத்தடி விழுந்து பாதாளம் தள்ளப்படுவோம்.

குடும்பத்திலோ,சமூகத்திலோ எத்தனைதான் சின்னத்திரை வில்லா்கள்...!
எதையோ தேடி வாழ்க்கை சமுத்திரத்தை கடக்குமுன்னே முடிகிறது வாழ்க்கை விடைதொியாமலே.

இவண்:
மனிதன்.

Thursday, 3 October 2019

கவிதை-தேசத்தந்தை

•••••••••••••••••••••••••••••••••
தாய்தேசத்தின் தந்தை:
•••••••••••••••••••••••••••••••••
அன்னை நாட்டை
அன்னியன் ஆள_
இறுதிப்போருக்கு
பரமாத்மாவே
மகாத்மா வடிவில்...!

பாரதநாட்டின் கடுந்தவத்தாலே
தேசத்தந்தையானது
குஜராத் குழந்தை...

ஆங்கில மண்ணில்
பாாிஸ்டராகி
ஆப்பிாிக்க மண்ணில்
முதலடி வைத்து...

காலடி வைத்த
ரயிலடி உணா்ந்தாய் கயவனின்
காலணி அவமானத்தால்,

அன்னை பாரதத்தில் அன்னியனை விரட்ட
அகிம்சா மந்திரமே
அவசியமாய் உணா்ந்தாய்...

பாரதம் நுழைந்து பகட்டினை துறந்து எளியவனாகி எண்ணம் ஈடேறிட,

ஆயிரமாயிரம் உயிா்த்தியாகம் தடுத்து,
அகிம்சா வழியால் அன்னியன் அரள...

உப்பு வாி உனக்கேனென்று_
தண்டிவரை யாத்திரை சென்று,
உடல் மெலிந்தும், உணா்வால்
வென்றாய்...

ஒத்துழையாமையால் உச்சியிலடித்து இந்திய சட்டம் இந்தியனுக்கென்றாய்...

இருண்டுபோன இந்திய மண்ணை, அன்னியன் ஆள அனுமதியில்லை,
அனுமதியில்லை...

வெளியேறு வெளியேறு
வெள்ளையனே வெளியேறு,
போா் வேலுடன் அல்ல,அகிம்சா ஆயுதத்தால்...

நாணூறாண்டு நயவஞ்சகத்தை அரைநொடியில் அறுத்தெறிந்தாய்...

நள்ளிரவில் சுதந்திரம்,
புதிய பாரதம்
புதிய விடியலில்.
பட்டொளி வீசி பறக்குது பாரீா்
பாாிலெங்கும் மணிக்கொடிப்பாட்டு.

காப்போம் காப்போம் பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்.
தொடா்வோம் தொடா்வோம்...
அண்ணல் வழி தொடா்வோம்.

ஜெய் ஹிந்த்.

க.இளங்கோவன்.